கணவன், மனைவி மீது தாக்குதல்

கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பம் கிராமத்தில் தோட்டத்தில் மாடு மேய்ந்த தகராறில் கணவன், மனைவி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவன், மனைவி மீது தாக்குதல்
Published on

பாகூர்

கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முகுந்தராமன் (வயது 70). இவரது மனைவி ரமணி (65). இவர்களது தோட்டத்தில் அவ்வப்போது மாடுகள் மேய்ந்து, செடிகளை சேதப்படுத்தி வந்துள்ளது. இதை தட்டிக்கேட்டபோது, முகுந்தராமனுக்கும், நரம்பை மீனவ கிராமத்தைச் சேர்ந்த கனகராஜிக்கும் பிரச்சினை இருந்துவந்தது.

இந்தநிலையில் கனகராஜின் மாடு சில தினங்களுக்கு முன்பு இறந்து விட்டது.

இதனால் ஆத்திரமடைந்த அவர், தனது மாடு இறந்ததற்கு முகுந்தராமன் தான் காரணம் என கூறி, அவரை வீடு புகுந்து தாக்கினார். இதைத்தடுக்க முயன்ற அவரது மனைவி ரமணியும் தாக்கப்பட்டார். படுகாயம் அடைந்த 2 பேரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த தாக்குதல் தொடர்பாக கிருமாம்பாக்கம் போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com