கணவன்-மனைவி மீது தாக்குதல்

கணவன்-மனைவி மீது தாக்குதல்

முதலியார்பேட்டை தியாகுமுதலியார் பகுதியில் கணவன்-மனைவி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on

புதுச்சேரி

புதுச்சேரி முதலியார்பேட்டை தியாகுமுதலியார் நகரை சேர்ந்தவர் வீரப்பன். இவரது மகன் நாகராஜ் (வயது 47). அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் சம்பவத்தன்று கடையில் இருந்தபோது அவரது மனைவி மட்டும் வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த மாரியம்மன் நகரை சேர்ந்த ஸ்ரீதர் (21) என்பவர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் நாகராஜிடம் தெரிவித்தார். உடனே அவர் தனது மனைவியுடன் ஸ்ரீதர் வீட்டிற்கு சென்று தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்ரீதர், அவரது அண்ணன் சுந்தர் ஆகியோர் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com