பெண் போலீசார் மீது தாக்குதல்

குற்றவாளிகளை பிடிக்கச்சென்ற பெண் போலீசாரை தாக்கிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.க்ஷக்ஷ
பெண் போலீசார் மீது தாக்குதல்
Published on

கோட்டுச்சேரி

குற்றவாளிகளை பிடிக்கச்சென்ற பெண் போலீசாரை தாக்கிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெண் போலீசார்

காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு போலீஸ் நிலைய ஏட்டு சசிதரன், போலீஸ்காரர் ரமேஷ்குமார், பெண் போலீசார் விஜயலட்சுமி, இந்திரா ஆகியோர் ஒருவழக்கு தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்ய தொண்ட மங்கலம் கிராமத்துக்கு சென்றனர். அங்கு வினோத்குமார், மகாலட்சுமி 2 பேரையும் கைது செய்ய முயன்றனர். அப்போது வினோத்குமாரின் அண்ணன்கள் கண்ணன் (வயது 32), சுந்தரபாண்டியன் (34), உறவினர் ஆறுமுகம் (55) ஆகியோர் போலீசாரை தடுத்து தரக்குறைவாக திட்டியுள்ளனர். மேலும் பெண் போலீசாரை தாக்கி, இடித்து தள்ளியதாக கூறப்படுகிறது.

3 பேருக்கு வலைவீச்சு

இது தொடர்பாக நெடுங்காடு போலீசில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்குப்பதிவு செய்து போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த கண்ணன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com