அளவற்ற பயன்களை அள்ளித்தரும் திரைலோக்கிய கௌரி விரதம்

திருமண வயதில் உள்ள பெண்கள் கௌரி தேவியை மனமுருகி வழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.
அளவற்ற பயன்களை அள்ளித்தரும் திரைலோக்கிய கௌரி விரதம்
Published on

சக்தியை கௌரி என்ற வடிவில் வழிபடும் விரத முறையே கௌரி விரதம் ஆகும். கௌரி விரதங்களில் பல்வேறு விரத தினங்கள் காணப்படுகின்றன. அதில் கௌரி தேவிக்கு உரிய ஒரு விரதம் திரைலோக்கிய கௌரி விரதம் ஆகும். அவ்வகையில் இன்று திங்கட்கிழமை (12.1.2026) திரைலோக்கிய கௌரி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த விரதத்தை பெண்கள் இருந்தால், அளவற்ற பயன்கள் பெறலாம். குறிப்பாக திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. கௌரி தேவியை நினைத்து இன்று விரதம் இருக்கும் பெண்கள், இன்று இரவு வீட்டில் கலசம் அமைத்து கௌரி தேவியை ஆவாகனம் செய்து வழிபடலாம்.

நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல் வைக்கலாம். கலசம் அருகே 16 விளக்குகள் ஏற்றி வைத்து ஆராதனை செய்து வழிபடுவது கூடுதல் நன்மைகளைத் தரும். திருமண வயதில் உள்ள பெண்கள் இன்றிரவு கௌரியை மனமுருகி வழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடி, நல்ல கணவர் கிடைப்பார் என்பது நம்பிக்கை. வீட்டில் பூஜை செய்து முடிந்ததும், அருகில் உள்ள பெண்களுக்கு மங்கலப் பொருட்கள் கொடுத்து ஆசி பெறுவது நல்லது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com