

தனுசு
தனுசு ராசி அன்பர்களே!
மற்றவர் தங்களுக்கு செய்த தீங்கினை மன்னித்து விடு ஆனால் மறந்து விடாதே என்ற மனம் கொண்டவர் நீங்கள். அவ்வளவு எளிதாக மறக்க மாட்டீர்கள்.
சிறப்புப் பலன்கள்
உத்யோகஸ்தர்கள்:
அலுவலகத்தில் தங்களுக்கு ஒரு சிலருக்கு சம்பள பாக்கித் தொகைகள் தாமதமாக வருபவர்களுக்கு இனி சீக்கிரம் வரவதற்குண்டான வேலைகள் நடக்கும். இனி மாத ஆரம்பத்திலேயே கிடைக்கும்.
வியாபாரிகள்:
வியாபாரத்திற்காக ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கு அதிகமான ஆர்டர்கள் கிடைக்கும். அதனை குறித்த நேரத்தில் தாங்கள் அனுப்பி வைத்துவிடுவீர்கள்.
குடும்பத் தலைவிகள்:
கணவரின் அன்பைப் பரிபூரணமாகப் பெற்று மனமகிழ்வு கொள்வீர்கள். வீட்டினை கலைப் பொருட்களை கொண்டு அலங்கரிப்பீர்கள். குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டி அவர்களின் மகிழ்ச்சியில் பங்கு கொள்வீர்கள்.
கலைஞர்கள்:
கலைஞர்களுக்கு தங்கள் முயற்சியால் பெரிய பேனர்களில் இருந்து அழைப்பு வருவதும், அதில் முக்கிய கதாபாத்திரமும் கிடைக்கும். கவலை வேண்டாம்.
மாணவர்கள்:
மாணவர்கள் தங்கள் வகுப்பறையில் அநாவசியப் பேச்சை தவிர்க்கப் பாருங்கள். தேவையற்ற கெட்ட பெயர்களை வாங்காதீர்கள். அது உங்களது பெற்றோர்களுக்கும் கவலையைத்
பரிகாரம்
அங்காள அம்மனுக்கு முல்லை பூச்சரம் கொடுத்து கும்பிடவும்.
மகரம்
மகர ராசி அன்பர்களே!
சொந்த பந்தம் விட்டு போகாமல் ஒற்றுமையுடன் இருக்க, அனைவரிடமும் விட்டுக் கொடுத்து வாழ்வதில் இன்பம் காண்பவர் நீங்கள்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகதர்கள்:
சக ஊழியர்கள் தங்களைப் பற்றி தவறாக பேசினாலும் தங்கள் அலுவலகத்தில் உள்ள மேலதிகாரிகள் தங்களை தவறாக நம்ப வாய்ப்பில்லை. மாறாக, உத்யோகத்தில் அமைதி நிலவும்.
வியாபாரிகள்:
வியாபாரிகளுக்கு அடிக்கடி மறதி வந்து போகும். தங்கள் வேலைகளை டைரியில் எழுதி வைத்துக் கொண்டு திடடமிட்டு செயல்படுங்கள். தேவையற்ற காலவிரையத்தை அது தவிர்க்கும்.
குடும்பத் தலைவிகள்:
தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் மிகவும் அனுசரனையுடனும், இன்முகத்துடனும் பழகுபவர். ஆதலால், தங்களுக்கு எப்பேர்ப்பட்ட பணச்சிக்களையும் சமாளித்து வெற்றி பெறக்கூடியவர்.
கலைஞர்கள்:
திரைப்படத்துறையில் முன்னேற துடிப்பவர்கள் படத்தில் மட்டும் கவனம் செலுத்தவும். தங்கள் கதாநாயகருடன் அதிக நெருக்கம் வேண்டாம். உங்கள் திறமை வீண்போகாது.
மாணவர்கள்:
அரசு தேர்வு எழுதுபவர்கள் தங்கள் கவனத்தை சிதறவிடாமல் படிப்பில் கவனம் செலுத்தினால் நல்ல மதிப்பெண்களை பெற இயலும். இல்லையென்றால் குறைவாக பெற்று எதிர் மாறான பலன்களைத் தரும்.
பரிகாரம்:
பெருமாளை புதன் கிழமை அன்று தரிசிப்பது நல்லது. முடிந்தால் துளசி மாலையை கொடுப்பதும் நல்லது.
கும்பம்
கும்ப ராசி அன்பர்களே!
சுற்றி வளைத்து பேசாமல் எதுவாக இருந்தாலும் நேருக்கு நேர் நின்று பேசும் யதார்த்தவாதி நீங்கள். வஞ்சகம் என்பது துளியும் தெரியாத ஒன்று.
சிறப்புப்பலன்கள்
உத்யோகதர்கள்:
உத்யோகஸ்தர்களுக்கு நேரடியாக மேலதிகாரி உங்களுக்கு உதவாதவாறு இருந்தாலும் அவர்கள் தங்களுக்கு மறைமுகமாக தங்களுக்கு ஆதரவு அளிப்பார்.
வியாபாரிகள்:
தங்களை சிறு தொழிலை விரிவாக்க தங்களுக்கு முதலீட்டுக்கு வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும். கவலை வேண்டாம். அதற்குண்டான முயற்சியில் ஈடுபடுங்கள்.
குடும்பத் தலைவிகள்:
குடும்பத் தலைவிகளுக்கு பணம் தேவைக்கேற்ப கிடைக்கும். மாமியார் மருமகள் உறவு நன்றாக இருக்கும். உறவினர், விருந்தினர் வருகை ஏற்பட்டு மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த மாதம் உங்கள் கனவு பலிக்கும்.
கலைஞர்கள்:
கலைஞர்களுக்கு வெளியூர் பயணங்கள் அடிக்கடி லொகேஷன் பார்ப்பதற்கும் மற்றும் சொந்த ஊருக்கு செல்வதும் இருக்கும். அந்த அலைச்சல் வீண்போகாது.
மாணவர்கள்:
நீச்சல், டென்னிஸ் மற்றும் மற்ற விளையாட்டுத் துறையில் சேர்ந்து பயிற்சி பெற நினைப்பர். அது உங்களது எதிர்காலத்திற்கு நன்கு பயன்படி இருக்கும்.
பரிகாரம்:
குருபகவானுக்கு வியாழ கிழமை அன்று வணங்குவது நல்லது.
மீனம்
மீன ராசி அன்பர்களே!
தாங்கள் மக்களிடம் அனுபவம்தான் மிகச்சிறந்த ஆசான் என்பதை கண்டு உணர்ந்தவர் நீங்கள்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்கள்:
வேலைக்குச் செல்லும் உத்யோகஸ்தர்கள் வேலைச்சுமை அதிகரித்தாலும் தங்களுக்கு பெரிய பொறுப்பைப் பெற்று பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றையும் பெறுவீர்கள்.
வியாபாரிகள்:
கலைத்துறையில் இல்லாமல் தங்களை தயாரிப்பாளராக்க பலர் முயற்சிப்பர். தயவுசெய்து சினிமா முன்அனுபவம் இன்றி முதல் போடுவதை தவிர்ப்பது நல்லது. தெரிந்த தொழிலை செய்யுங்கள். இதனால் நஷ்டத்தை தவிர்க்க இயலும்.
குடும்பத் தலைவிகள்:
குடும்பத் தலைவிகளின் நீண்டகால கனவான தங்கள் காலிமளையில் வீடு கட்டும் எண்ணம் நிறைவேறும். குடும்ப நிர்வாகத்தைத் திறம்பட நடத்தி நற்பெயர் பெறுவீர்கள். குடும்பத்திற்குத் தேவையான நவ நாகரிகப் பொருட்களை வாங்கிக் குவிப்பீர்கள்.
கலைஞர்கள்:
கலைஞர்கள் தங்கள் சக நடிகர்களுடன் பழகும் போது தங்களது பிரச்சினைகளை சொல்லாமல் இருப்பது நல்லது. தேவையற்ற விமர்சனங்களை தவிர்க்கவும்.
மாணவர்கள்:
மருத்துவப் படிப்புக்காக அரசுத் தேர்வு எழுதும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற கடினமாக படித்தால்தான் இலக்கை அடைய முடியும்.
பரிகாரம்:
அம்மனுக்கு வெள்ளி கிழமை அன்று மல்லிகை பூச்சரத்தை தரிவிப்பது நல்லது.