

சிம்ம ராசி அன்பர்களே!
யாரிடமும் வீண் சண்டைக்கு செல்லமாட்டீர்கள். ஆனால், வந்த சண்டையை விடாதவர் நீங்கள்.
சிறப்புப்பலன்கள்:
உத்யோகஸ்தர்களுக்கு
வேலைக்கு செல்பவர்களுக்கு புதிய வாகனம் வாங்கும் எண்ணம் தோன்றும். வங்கி கடன் மூலம் வாங்கி விடுவீர்கள்.
வியாபாரிகளுக்கு
சொந்த தொழில் செய்பவர்களுக்கு தங்களுடைய கிளைகளை மேம்படுத்துவர்.
குடும்ப தலைவிகளுக்கு
குடும்பத் தலைவிகளுக்கு பணப்புழக்கங்கள் அதிகரிக்கும். வங்கியில் ஒரு தொகையை டெபாசிட் செய்வர். மாமியார் மருமகள் உறவு சுமூகமாக செல்லும்.
கலைஞர்களுக்கு
கலைஞர்களுக்கு திரை உலகத்திற்கு தங்கள் பாதம் பதியும் படி சாதனைப் படைப்பர்.
மாணவர்கள்
மாணவ மணிகளுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். தனது அன்றைய பாடங்களை படித்து விடுவர். பாதத்தில் வலி வந்து போகும்.
பரிகாரம்:
பிள்ளையாருக்கு அருகம்புல்லை ஞாயிறு அன்று சாற்றுவது நல்லது.
கன்னி ராசி அன்பர்களே!
உடல் பலத்தினை காட்டிலும் மனப் பலம் மிக அவசியம் வேண்டும் என்று அறிவுரை கூறுபவர் நீங்கள்.
சிறப்புப்பலன்கள்:
உத்யோகஸ்தர்களுக்கு
வேலைக்கு செல்லும் பெண்களுக்கு தங்கள் பிள்ளைகளை பாதுகாக்க பெற்றோரின் உதவி கிடைக்கும். வேலை சுமை குறையும்.
வியாபாரிகளுக்கு
சொந்த தொழில் செய்யும் பெண்களுக்கு இணையதளம் வழியாக ஆர்டர்கள் வழியும்.
குடும்ப தலைவிகளுக்கு
குடும்பத் தலைவிகளுக்கு வெளியே தேவையான பொருட்களை கணவர் வாங்கித் தந்து மகிழ்விப்பார். தங்கள் கணவர் தங்களை புரிந்து கொள்வார்.
கலைஞர்களுக்கு
கலைஞர்களுக்கு தாங்கள் நினைத்தவாரே குறித்த நேரத்தில் படபிடிப்பு ஆரம்பிக்கப்படும்.
மாணவர்கள்
மாணவ மாணவியருக்கு ஆசிரியரிடமிருந்து பாராட்டுகள் கிடைக்கும். தேக ஆரோக்கியம் பளிச்சிடும்.
பரிகாரம்:
சனிபகவானுக்கு சனிக்கிழமை அன்று எள்தீபம் ஏற்றுவது மிக சிறந்தது.
துலாம் ராசி அன்பர்களே!
நேர்மை, நியாயம் என்ற வேதவாக்கினைக் கொண்டவர் நீங்கள். பாரபட்சமின்றி தவறு செய்பவரை தட்டிக்கேட்பவர் நீங்கள்.
சிறப்புப்பலன்கள்:
உத்யோகஸ்தர்களுக்கு
வேலைக்கு செல்லும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சொல்வதென்னவென்றால் சக ஊழியர்களிடம் தங்கள் குடும்ப விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
வியாபாரிகளுக்கு
சொந்த தொழில் செய்பவர்களுக்கு தங்கள் தொழிலில் தொழில்நுட்பத்தை புகுத்துவீர்கள். கடன் பிரச்சினை அகலும்.
குடும்ப தலைவிகளுக்கு
குடும்பத் தலைவிகளுக்கு கணவர் வீட்டு உறவினர் வந்து போவர். கணவருடைய பேச்சு அர்த்தமுள்ளதாக உணர்வீர்கள்.
கலைஞர்களுக்கு
கலைஞர்களுக்கு புதிய நபர் உங்களுக்கு சிபாரிசு செய்வர்.
மாணவர்கள்
மாணவ மணிகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரித்து தானாகவே மற்றவரின் தூண்டுதல் இன்றி படிக்கத் துவங்குவர். உடல் நலத்தில் கவனம் தேவை. வெளியிடங்களில் உட்கொள்ள வேண்டாம்.
வழிபாடு:
லக்ஷ்மி நரசிம்மரை வெள்ளிக்கிழமை தோறும் சென்று வழிபடுவது நல்லது.
விருச்சிக ராசி அன்பர்களே!
நீங்கள் மற்றவர்களுக்கு இரக்கத்துடன் உதவுபவர். உங்களை சீண்டினால்தான் நீங்கள் எரிமலையாக தோன்றுபவர்.
சிறப்புப்பலன்கள்:
உத்யோகஸ்தர்களுக்கு
உத்யோகஸ்தர்களுக்கு அலுவகத்தில் தங்கள் பணிகளை விரைவாய முடித்து மேலதிகாரிகளிடம் நற்பெயர் வாங்குவீர்கள்.
வியாபாரிகளுக்கு
வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். லாபமும் உயரும்.
குடும்ப தலைவிகளுக்கு
குடும்பத் தலைவிகளுக்கு குடும்பத்தில் சில முக்கிய முடிவுகளை எடுக்கும் உரிமைகள் உங்களுக்கு கிடைக்கும். தம்பதியர் இடையே அன்னியோன்யம் கூடும்.
கலைஞர்களுக்கு
கலைஞர்களுக்கு தங்கள் சக ஊழியர்களால் பண உதவி கிடைக்கும்.
மாணவர்கள்
மாணவ மாணவிகளுக்கு அரசு தேர்வு என்பதால் பய உணர்வு அதிகரிக்கும். நன்கு படித்திருப்பது நல்லது. உடல் நலம் சிறப்படையும்.
பரிகாரம்:
சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமை அன்று கோதுமையை நைவேத்தியமாக வைத்து படைப்பது நல்லது.