பிப்ரவரி மாத ராசிபலன் - தனுசு, மகரம், கும்பம், மீனம்

தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கான பிப்ரவரி மாத பலன்களை பார்ப்போம்.
பிப்ரவரி மாத ராசிபலன் - தனுசு, மகரம், கும்பம், மீனம்
Published on

பிப்ரவரி மாதப்பலன்கள்

தனுசு

தனுசு ராசி அன்பர்களே!

உங்கள் மனம் எதிலும் எங்கேயும் தனக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று எண்ணுபவர் நீங்கள்.

சிறப்புப்பலன்கள்:

உத்யோகஸ்தர்களுக்கு

வேலைக்கு செல்பவர்கள் சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. ஒரு சேமிப்பு தொகையாவது போட்டு வைப்பது நல்லது.

வியாபாரிகளுக்கு

சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதியதொரு தொழிலை துவங்க அரசு கடன் கிடைக்கும்.

குடும்ப தலைவிகளுக்கு

குடும்பத் தலைவிகளுக்கு கணவரது முழு சம்பளமும் தங்களுக்கு கைக்கு வரும். தங்களுடைய குடும்ப நிர்வாகம் மேம்படும். தங்கள் அறிவுரையை கணவர் கேட்டு நடப்பார்.

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்கு எதிர்பாலினரிடத்தில் கவனம் தேவை.. அதிக பேச்சைக் குறைப்பது நல்லது. இளம் பெண்களுக்கு கலைத்துறையிலேயே நல்ல துணை கிடைக்கும்.

மாணவர்கள்

மாணவர்களுக்கு தனக்கு புரிந்து கொள்ள முடியாத பாடத்தை ஆசிரியரிடம் சந்தேகத்தை தீர்த்துக் கொள்வது நல்லது. தேக ஆரோக்கியம் சிறப்படையும்.

பரிகாரம்:

வியாழக்கிழமை அன்று மஞ்சள் வஸ்திரத்தை குருபகவானுக்கு சாத்தி வருவது தடைகளை உடைக்கச் செய்யும்.

மகரம்

மகர ராசி அன்பர்களே!

நீங்கள் சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டு இருக்கும். கடிகாரத்தைப் போன்றவர்.

சிறப்புப்பலன்கள்:

உத்யோகஸ்தர்களுக்கு

வேலைக்கு செல்லும் ஆண்களுக்கும் மற்றும் பெண்களுக்கும் வேலையில் சுமைகள் அதிகரிக்கும். அதனை திட்டமிட்டு முடித்து விடுவீர்.

வியாபாரிகளுக்கு

சொந்த தொழில் செய்பவர்கள் கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் இருப்பது நல்லது.

குடும்ப தலைவிகளுக்கு

குடும்பத் தலைவிகளுக்கு புதியதொரு தொழில் வீட்டில் இருந்தபடியே கற்றுக் கொள்வர். பிள்ளைகள் உங்கள் சொல்படி கேட்பர்.

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்கு தங்கள் படம் பல கோடியை தாண்டும் அளவிற்கு அதிக லாபத்தை பெறுவர்.

மாணவர்கள்

மாணவர்களுக்கு பகுதி நேர வேலையில் ஈடுபடுவர். பெற்றோர்களுக்கு உதவியும் புரிவர். இடுப்பு கை கால்களில் வலி வந்து நீங்கும்.

பரிகாரம்:

ஐயப்பனை சனிக்கிழமை அன்று சென்று வழிபடுவது மிக நன்று.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே!

நீங்கள் குடும்பத்திற்காக பல தியாகங்களை செய்யத் தயங்காதவர். படிப்படியாக முன்னேறும் தன்மை கொண்டவர் நீங்கள்.

சிறப்புப்பலன்கள்:

உத்யோகஸ்தர்களுக்கு

வேலைக்கு செல்பவர்களுக்கு வங்கியில் கடன் வசதி கிடைக்கும். வீடுகட்ட ஆரம்பிப்பர்.

வியாபாரிகளுக்கு

சொந்த தொழில் செய்பவர்களுக்கு நினைத்த காரியம் வெற்றி பெறும். இரண்டு வகையான துறைகளில் இருந்து லாபம் கிடைக்கும்.

குடும்ப தலைவிகளுக்கு

குடும்பத் தலைவிகளுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தங்களுக்கு வேண்டிய பொருள்களை வாங்கி குவிப்பார். தம்பதிகளிடையே ஒற்றுமை நிலவும்.

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்கு தங்கள் கதாபாத்திரம் பேசப்படும் வண்ணம் இருக்கும்.

மாணவர்கள்

மாணவ மணிகளுக்கு படிப்பில் ஆர்வம் கூடி தங்களுக்கு பிடித்த துறையைத் தேர்ந்தெடுப்பர்.

பரிகாரம்:

செவ்வாய்க்கிழமை அன்று கால பைரவருக்கு சிவப்பு வஸ்திரம் சாத்துவது நல்லது.

மீனம்

மீன ராசி அன்பர்களே!

நீங்கள் பாகுபாடின்றி அனைவருக்கும் உதவும் குணம் உங்களுக்கு உண்டு.

சிறப்புப்பலன்கள்:

உத்யோகஸ்தர்களுக்கு

உத்யோகஸ்தர்களுக்கு வேலையில் மனநிம்மதி கிடைக்கும். வேலைபளு குறையும்.

வியாபாரிகளுக்கு

வியாபாரிகளுக்கு வெளியூருக்குச் சென்று கொள்முதல் போடுவீர்கள். தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

குடும்ப தலைவிகளுக்கு

குடும்ப தலைவிகளுக்கு தங்கள் வீட்டில் விருந்தினர்கள் வருகை உண்டாகும். அவர்களுடன் தங்கள் குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். பிரிந்திருந்த தம்பதிகளின் கணவர் வீட்டார் மீண்டும் சேருவதற்கு பெரியவர்களின் மூலமாக சமரசத்திற்கு வருவார்கள்.

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்கு கதைக்கு முக்கியத்துவம் தாருங்கள்.ஒருமுறைக்கு இரு முறை யோசித்து ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள்.

மாணவ, மாணவிகளுக்கு

மாணவ, மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை செலுத்துவர். ஆசிரியர் சொல்லை மதிப்பர். உடல் நலத்தில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். காலம் தாழ்த்தாமல் மருத்துவரை அணுகவும்.

பரிகாரம்:

புதன் கிழமை அன்று பெருமாளுக்கு துளசி மாலையை அணிவிப்பது நல்லது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com