அக்டோபர் மாத ராசிபலன் - மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்

மேஷம், ரிஷபம், மிதுனம் மற்றும் கடகம் ஆகிய ராசிக்காரர்களுக்கான அக்டோபர் மாத பலன்களை பார்ப்போம்.
அக்டோபர் மாத ராசிபலன் - மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்
Published on

அக்டோபர் மாத பலன்கள்

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே! வீரமுள்ளவர் நீங்கள் கூடவே விவேகத்தையும் கடைபிடித்தால் உங்களை வெல்ல யாராலும் இயலாது.

சிறப்புப் பலன்கள்

உத்யோகதர்களுக்கு

தங்களுக்கு வருவாயில் போனஸ் கிடைக்கும். நீங்கள் உயர் அதிகாரிகள் சொன்ன பணியை உடனுடக்குடன் செய்து முடித்தால் தங்களுக்கு நல்ல மரியாதையும் அவர்களின் ஆதரவும் கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு

வியாபாரிகளுக்கு போட்டிகள் நீங்கும் கவலை வேண்டாம். தங்களின் சிறு தொழிலை விரிவாக்க தங்களுக்கு முதலீட்டுக்கு வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும். அதற்குண்டான முயற்சியில் ஈடுபடுங்கள்.

குடும்பத் தலைவிகளுக்கு

தங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். தாங்கள் அடகு வைத்து தங்கள் கணவருக்கு தந்த கடனை இந்த மாதத்தில் ஒரு பகுதியை அடைத்து விடுவீர்கள். ஒரு சில நகைகளை மீட்டுவீர்கள்.

கலைஞர்களுக்கு

நீண்ட காலமாக வெளிவராத உங்கள் படம் வெளியாகும். கலைஞர்களுக்கு அடுத்த நிலை என்ற அளவிற்கு சம்பளம் கிடைக்கும். ஒரு சிலருக்கு கதாநாயகர் வாய்ப்பு அல்லது அதற்கு இணையான வாய்ப்பும் கிடைக்கும்.

மாணவர்களுக்கு

மாணவர்கள் நன்கு படிப்பர். தங்கள் சக மாணவர்களுடன் வெளியில் செல்லும் போது மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. வண்டி வாகனம் ஓட்டும்போது தாங்கள் வேகத்தை குறைப்பது நல்லது.

பரிகாரம்

அம்மனுக்கு வெள்ளி கிழமை அன்று மல்லிகை பூச்சரத்தை தரிவிப்பது நல்லது.

ரிசபம்

ரிசப ராசி அன்பர்களே! அன்புக்கு நீங்கள் அடிமை என உணர்ந்தவர். இருப்பினும், தங்களால் மற்றவர்களைப்போல் கடினமாக நடக்க இயலாதவர்.

சிறப்புப் பலன்கள்

உத்யோகதர்களுக்கு

வேலைக்குச் செல்லும் உத்யோகஸ்தர்களுக்கு நீங்கள் கேட்ட இடமாற்றமும் சம்பள உயர்வும் கிடைக்கும். மேலும், தங்கள் மேலதிகாரிகளின் அன்பை பெற தாங்கள் குறித்த நேரத்தில் உங்கள் பணிகளை முடித்துக் காட்டினீர்கள் என்றால் அவர்கள் நட்பை பெற இயலும்.

வியாபாரிகளுக்கு

வியாபாரிகள் தங்கள் திறனை வளர்த்துக் கொள்வர். வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் தங்களின் வியாபாரத்தை விரிவு செய்வதற்காக பயணங்கள் மேற்கொள்வர். இதனால் தங்கள் வியாபாரம் மற்ற ஊர்களிலும் செழித்து வளர இந்த பயணங்கள் சாதகமாக இருக்கும்.

குடும்பத் தலைவிகளுக்கு

குடும்பத்தலைவிகள் உணவில் கட்டுப்பாடு தேவை. மேலும், தங்கள் உழைப்பிற்கு வீட்டில் அங்கீகாரம் தரவில்லையே என்று ஏங்கியவர்களுக்கு இனி வீட்டில் மதிப்பு அளிப்பர். கணவரது தேவையை பூர்த்தி செய்வீர்கள்.

கலைஞர்களுக்கு

கலைஞர்கள் கவலையை விடுங்கள். பட வாய்ப்புகள் கிடைக்கவில்லையே என்று ஏங்கியவர்கள் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை ஏற்று நடியுங்கள். பின்பு அதுவே, பெரிய வாய்ப்பினைப் பெற்றுத் தரும்.

மாணவர்களுக்கு

மாணவர்கள் படிப்பிலும் கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள். தங்கள் சக மாணவர்களுடன் விடுமுறையில் வெளியூர் செல்ல சிறுகச் சிறுக சேர்த்து வைப்பீர்கள்.

பரிகாரம்

வியாழக் கிழமை அன்று மஞ்சள் மலர் மாலையை தஷிணா மூர்த்தியை அணிவித்து வழிபடுவது நல்லது.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே! வாய்ப்புகளை தேடுவதற்கு பதிலாக வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளும் திறன் படைத்தவர் நீங்கள்.

சிறப்புப் பலன்கள்

உத்யோகஸ்தர்களுக்கு

மார்கெட்டிங் பிரிவில் வேலை செய்யும் உத்யோகஸ்தர்களுக்கு நீண்ட நாட்களாக தாங்கள் கேட்ட சில முக்கியமான சலுகைகள் கிடைக்கும். கவலை வேண்டாம். இந்த மாதம் மகிழ்ச்சிற்கு குறைவிருக்காது.

வியாபாரிகளுக்கு

வியாபாரிகள் தங்கள் கொள்முதலை பெருக்குவீர்கள். சேமிப்பும் கூடும். மளிகைக் கடை வியாபாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு லாபம் உயரும்.

குடும்பத் தலைவிகளுக்கு

குடும்பத் தலைவிகளுக்கு பணம் தேவைக்கேற்ப கிடைக்கும். மாமியார் மருமகள் உறவு நன்றாக இருக்கும். உறவினர், விருந்தினர் வருகை ஏற்பட்டு மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த மாதம் உங்கள் கனவு பலிக்கும்.

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்கு வெளிமாநிலத்தில் இருந்து வேற்று மொழிகளில் நடிக்க அழைப்பு வரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது முழுமையாக கவனமாகப் படித்துவிட்டு கையெழுத்திடுவது நல்லது.

மாணவர்களுக்கு

மாணவர்களுக்கு சோம்பேறித்தனம் குடிக்கொள்ளும். ஆதலால், தாங்கள் கூடுமானவரை சோம்பேறித்தனத்தை புறக்கணியுங்கள். படிப்பில் கவனம் செலுத்துங்கள்.

பரிகாரம்

அங்காள அம்மனுக்கு முல்லை பூச்சரம் கொடுத்து கும்பிடவும்.

கடகம்

கடக ராசி அன்பர்களே! அவசரக்காரனுக்கு புத்திமண்டு என்பதை உணர்ந்தவர். எதிலும் நிதானமுடன் செயல்படுபவர்.

சிறப்புப் பலன்கள்

உத்யோகஸ்தர்களுக்கு

உத்யோகஸ்தர்களுக்கு சம்பளம் சரிவர வராமல் அதாவது காலம் தாழ்த்தி கொடுத்து வந்த சம்பளம் இனி மாத ஆரம்பத்திலேயே கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு

வியாபாரிகளுக்கு தேவையற்ற காலவிரையத்தை அது தவிர்க்கவும். காரணம் தங்களுக்கு அடிக்கடி மறதி வந்து போகும். தங்கள் வேலைகளை டைரியில் எழுதி வைத்துக் கொண்டு திடடமிட்டு செயல்படுங்கள்.

குடும்பத் தலைவிகளுக்கு

குடும்பத் தலைவிகள் தாங்கள் எதிர்பார்த்தவாறு தங்களுடைய இதுவரை சேர்த்து வைத்த நகை சீட்டில் தங்களுக்கு புதிய நகை வாங்குவீர்கள். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை.

கலைஞர்களுக்கு

ஒரு சிலர் தாங்கள் திரைப்படத்தில் சேருவதற்காக ஒரு தொகையை தயாப்பாளருக்கு தர முடிவெடுப்பீர்கள். இருப்பினும் அந்த திரைப்படபேனரை பற்றி நன்கு ஆராய்ந்து செய்வது நல்லது.

மாணவர்களுக்கு

மாணவர்கள் ஐ.ஏ.எஸ் படிப்புக்காக தற்போதிலிருந்தே பொது அறிவு விசயங்களை தெரிந்து கொள்வது நல்லது. மாணவர்கள் அதற்குண்டான குருப்பை தேர்வு செய்வது நல்லது.

பரிகாரம்

பெருமாளை புதன் கிழமை அன்று துளசி மாலை சாற்றி தரிசிப்பது நல்லது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com