செப்டம்பர் மாத ராசிபலன் - சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்

சிம்மம், கன்னி, துலாம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களுக்கான செப்டம்பர் மாத பலன்களை பார்ப்போம்.
September month rasipalan for simmam, kanni, thulam, viruchigam in tamil
Published on

சிம்ம ராசி அன்பர்களே!

நீங்கள் ஒரு இலக்கினை ஒன்றை வைத்துக் கொண்டு அதனை நோக்கி பயணிப்பவர். அதற்கிடையில் எந்த தடைகள் வந்தாலும் அதனை முறியடித்து விடுபவர்.

உத்யோகஸ்தர்களுக்கு

உத்யோகஸ்தர்களுக்கு ஒரு சிலர் நீண்ட காலமாக முயற்சித்த தங்கள் இடமாற்றக் கோரிக்கைகள் விரைவில் நடந்தேறும். கவலை வேண்டாம் அலுவலக இடமாற்றம் உண்டாகும்.

வியாபாரிகளுக்கு

வியாபாரத்திற்காக வெளிநாட்டு வியாபாரத்தில் தாங்கள் ஈடுபட்டவர்களுக்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்ய அதிகமான ஆர்டர்கள் கிடைக்கும். அதனை குறித்த நேரத்தில் தாங்கள் அனுப்பி வைத்துவிடுவீர்கள்.

குடும்பத் தலைவிகளுக்கு

குடும்பத்தில் கணவன் - மனைவியிடையே இருந்துவந்த பிணக்குகள் யாவும் தீர்ந்து சந்தோஷமான சூழ்நிலை உண்டாகும். அன்பு பெருகும்.

கலைஞர்களுக்கு

கலைஞர்கள் தாங்கள் நினைத்தமாதிரியான கதாபாத்திரம் கிடைத்து தங்களுக்கு மனதில் உற்சாகத்துடன் காணப்படும் மாதமாகும். பணவரவுக்கும் குறையில்லை.

மாணவர்களுக்கு

மாணவர்கள் கல்வியில் ஆர்வமில்லாமல் பொழுதுபோக்குநிகழ்ச்சி களில் கலந்துகொண்டு நேரத்தை வீணடிப்பதை தவிர்த்தால் அதிக மதிப்பெண்களை பெறலாம்.

பரிகாரம்

சிவ பெருமாளை ஞாயிற்றுகிழமை அன்று ராகுகாலத்தில் பால் அபிஷேகம் செய்து தரிசிப்பது நல்லது.

கன்னி ராசி அன்பர்களே!

நடந்ததை நினைத்து வருந்தாதவர். மீண்டும் அந்த தவறு ஏற்படாமல் பார்த்துக் கொள்வதில் புத்திசாலி.

உத்யோகதர்களுக்கு

உத்யோகஸ்தர்களுக்கு தங்கள் அலுவலகத்தில் யாரிடமும் பழகும் போது தங்கள் அந்தரங்க விசயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.பொதுவான விசயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

வியாபாரிகளுக்கு

வியாபாரிகள் வழக்கமாக செய்யும் வியாபாரத்தைத் தாண்டி மற்ற மற்ற வேற்றுப் பொருட்களையும் சந்தைக்கு கொண்டுவந்து விற்பனை செய்வர். அதுவும் லாபத்தை தரும்.

குடும்பத் தலைவிகளுக்கு

குடும்பத்தலைவிகள் எவ்வளவு பணம் வந்தாலும் அதை சேமிக்க முடியாது என்ற நிலை மாறி அதிகளவு பணப்புழக்கம் ஏற்படும். நீண்ட கால வைப்புத் தொகையாக வங்கியில் டெபாசிட் செய்வீர்கள்.

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்கு கலை நிகழ்ச்சிக்காக புது ரக ஆடைகளை வாங்கி இன்புறுவர். எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஏனெனில் உங்களுக்கு அவர்கள் மறைமுகமாகப் பிரச்சினைகள் உண்டாக்குவார்கள்.

மாணவர்களுக்கு

மாணவர்கள் சற்று கூடுதல் கவனம் செலுத்தினால் அன்றி அதிக மதிப்பெண்களை ஈட்டுவது அரிதாகும். சக மாணவர்களுடன் ஒற்றுமை மேலோங்கும்.

பரிகாரம்

செவ்வாய் கிழமை அன்று முருகருக்கு ரோஜா மலரால் மாலையோ அல்லது பூச்சரமோ கொடுத்து கும்பிடவும்.

துலாம்  ராசி அன்பர்களே!

தங்கள் பிடிவாதம் தங்கள் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை கொஞ்சம் விட்டுக்கொடுத்தால் நீங்கள் வாழ்வின் உயர்ந்த இடத்தை பிடிக்கலாம்.

உத்யோகஸ்தர்களுக்கு

உத்யோகஸ்தர்களுக்கு உயர் பதவியுடன் கூடிய இடமாற்றமும் ஏற்பட வாய்ப்புண்டு. தாங்கள் கேட்ட இடத்திலேயே கிடைக்கும். தெய்வ நம்பிக்கையை வையுங்க.

வியாபாரிகளுக்கு

வியாபாரிகள் தாங்கள் செய்யும் வியாபாரத்தை விரிவுபடுத்த விளம்பர பலகைகளை ஆங்காங்கே வைக்க திட்டமிடுவீர்கள். மேலும், நாளிதழ்களில் விளம்பரப்படுத்துவீர்கள்.

குடும்பத் தலைவிகளுக்கு

குடும்பத் தலைவிகள் குடும்பத்தில் அன்னியர்களின் தலையீடு உண்டாகும். அவற்றை பொருட்படுத்தாமல் இருக்க வேண்டும். தாயாரின் உடல்நிலையில் பிற்போக்கான நிலை உண்டாகும். கவனம் அவசியம்.

கலைஞர்களுக்கு

கலைஞர்கள் சிறு சிறு குறும் படத்தில் வாய்ப்புகளை பயன்படுத்துவது நல்லது. பின்பு உங்கள் நடிப்புக்கு இது பேருதவியாக இருக்கும்.

மாணவர்களுக்கு

மாணவர்கள் தங்களின் எண்ணம் ஈடேற வேண்டுமென்றால், அதிகமாக, பேசுவதை நிறுத்திவிட்டு நன்கு படிப்பதும் மற்றும் எழுதிபார்ப்பதும் தங்களை உயர் இடத்தில் நிறுத்த இயலும்.

பரிகாரம்

பெருமாளுக்கு புதன் கிழமை அன்று துளசி மாலை அணிவித்து வணங்குவது நல்லது.

விருச்சிக ராசி அன்பர்களே!

எந்த விசயத்திலும் நீங்கள் தந்தையானாலும் தாயானாலும் நேர்மையாக இருப்பவர். ஒருவருக்காகவும் பரிந்து பேசாதவர்.

உத்யோகதர்களுக்கு

உத்யோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வோ இடமாற்றமோ கிடைப்பது சற்று தாமதப்படும். வேலை இல்லாதவர்களுக்கு தங்கள் கடின முயற்சியால் விரும்யிய வண்ணம் வேலை கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு

வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த புதிய புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விற்பனையை கூட்ட முயல்வர். அது தங்களுக்கு பலிக்கும்.

குடும்பத் தலைவிகளுக்கு

குடும்பத் தலைவிகள் தங்களின் கணவர் வழி உறவு முறைகளால் சிறிது நன்மையை எதிர்பார்க்கலாம். உடல் நிலை மிகவும் சோர்வாகவும் மந்தமாகவும் இருக்கும். சுறுசுறுப்பு அவசியம்.

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்கு வீணை வாசிப்பவர்கள், புல்லாங்குழல் மற்றும் மற்ற இசைக்கருவிகள் இயக்குபவர்களுக்கு கச்சேரி புக்காகும். மற்றும் திரைபடத்துறையில் இருக்கும் கேமராமேன் போன்றவர்களுக்கும் ஒப்பந்தமாகுமாகும் மாதமாகும்.

மாணவர்களுக்கு

மாணவர்கள் காதலில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. எதிர்பாலினரிடத்தில் சற்று கவனமுடன் பழகுவது நல்லது. மாணவர்கள் மாறாக, நன்கு படித்து முன்னேறுவர்.

பரிகாரம்

அம்மனுக்கு செவ்வாய் கிழமை அன்று ரோஜா மலர் மாலை அணிவித்து வழிபடுவது நல்லது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com