

கிழமை: செவ்வாய் கிழமை
தமிழ் வருடம்: விசுவாவசு
தமிழ் மாதம்: மாசி
நாள்: 12
ஆங்கில தேதி: 24
மாதம்: பிப்ரவரி
வருடம்: 2026
நட்சத்திரம்: இன்று பிற்பகல் 03-47 வரை கிருத்திகை பின்பு ரோகிணி
திதி: இன்று காலை 07-49 வரை சப்தமி பின்பு அஷ்டமி
யோகம்: சித்த, அமிர்த யோகம்
நல்ல நேரம்: காலை 07-30 to 08-30
நல்ல நேரம்: மாலை 4-30 to 5-30
ராகு காலம்: பிற்பகல் 3-00 to 4-30
எமகண்டம்: காலை 9-00 to 10-30
குளிகை: காலை 12-00 to 1-30
கௌரி நல்ல நேரம்: காலை 10-30 to 11-30
கௌரி நல்ல நேரம்: மாலை 7-30 to 8-30
சூலம்: வடக்கு
சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி
மேஷம்
குடும்பத் தலைவிகள் எண்ணம் பூர்த்தியாகும். வீட்டினை விரிவுபடுத்த வங்கிக்கடன் உதவி கிடைக்கும். பணம் கையில் சரளமாக புழங்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிணக்குகள் நீங்கும். இன்று குடும்பத்துடன் பொழுது போக்கு இடங்களுக்குச் சென்று வருவீர்கள். உடல் நலத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்
ரிஷபம்
தம்பதிகளிடையே ஏற்பட்ட மனத்தாங்கல்கள் நீங்கும். பயணங்களால் லாபம் கிடைக்கும்.வியாபாரத்தில் முதலீடுகளை அதிகரிப்பீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களிடையே ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். ஒரு முறைக்கு இரு முறைப் படிப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை
மிதுனம்
பணவரவில் சிறிது தாமதம் உண்டாகும். குல தெய்வ வழிபாடு செய்வீர்கள். தம்பதிகளிடையே அன்யோன்யம் கூடும். புதிய வியாபார திட்டங்கள் தீட்டுவீர்கள். பாகப்பிரிவினைகளில் இருந்து வந்த பிரச்னைகள் குறையும். ஆனாலும், பூர்வீகச் சொத்து, பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
கடகம்
ஆடம்பர செலவினை குறைப்பது நல்லது. எதிர்பாராத திடீர் சந்திப்பு நிகழும். அது தங்களுக்கு ஆனந்தத்தைத் தரும். பணம் பலவழிகளில் கிட்டும். குடும்ப வருமானத்தை மிகுதிப்படுத்த பகுதி நேர வேலையையும் துவங்குவீர்கள். பிள்ளைகளைப் பற்றிய மனவருத்தம் நீங்கும். காதலர்கள் பொறுப்புணர்வர்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
சிம்மம்
தம்பதிகளிடையே மனக்கசப்பு தீரும். கடன் தொல்லை நீங்கி தங்கள் வட்டாரத்தில் தங்களுக்கு மதிப்பு உயரும். வெளியில் செல்வதை தவிர்ப்பீர்கள். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். பண விஷயத்தில் சிக்கனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் கறாராக இருங்கள். தேக ஆரோக்கியம் சீராக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை
கன்னி
தம்பதிகளிடையே புரிதல் மேலோங்கும். பழைய நினைவுகள் வந்து போகும். பெரியவர்களின் ஆரோக்கியம் மேம்பட மருந்து மாத்திரைகளை வாங்குவீர்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். அரசுத் தேர்வு எழுதும் மாணவர்கள் படிப்பில் கூடுதல கவனம் தேவை. ஷேர் மூலமாக பணம் வரும்.
அதிர்ஷ்ட நிறம்: வயலட்
துலாம்
இன்று சந்திராஷ்டமம் என்பதால் யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: கடல்நீலம்
விருச்சிகம்
தாங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றி தரும். வீடு வாங்க கடன் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். தங்கள் பெண்ணுக்கு நல்ல வரண் அமையும். உங்கள் உடல் உஷ்ணம் அதிகமாகும். பிள்ளைகளது ஆசிரியர் புத்திசாலித்தனத்தை மெச்சுவார்கள். காதலர்கள் தங்கள் கடமையை உணர்வர்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்
தனுசு
புதுச் சொத்துக்கள் வாங்குவீர்கள். செல்வாக்கு கூடும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். பங்குதாரர்களை உங்களுடைய பேச்சுத் திறமையால் சரி செய்வீர்கள். தங்கள் பிள்ளைகள் விளையாடும்போது சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும். எனவே, கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
மகரம்
கலைத்துறையினருக்கு பாராட்டு மற்றும் பட வாய்ப்புகள் கிடைக்கும். தம்பதிகள் ஒற்றுமை அதிகரிக்கும். சில்லரை வியாபாரிகளுக்கு லாபம் கிட்டும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். குழந்தைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மகனுக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமையும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
கும்பம்
உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆலோசனையை மறு பரிசீலனை செய்வீர்கள். ஏதேனும் மாற்றம் இருந்தால் அதனை ஏற்பர். அக்கம் பக்கத்தினர் தொடர்புகள் நன்றாக இருக்கும். படிப்பில் ஆர்வம் பிறக்கும். கலைப் போட்டிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். வியாபாரிகளின் விற்பனை கூடி லாபம் கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
மீனம்
தம்பதியரிடையே வாக்குவாதம் வந்து போகும். ஒருவர் அமைதியாக இருப்பது நல்லது. பிள்ளை தங்களுக்கு பிடித்த கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும். உடல் நலம் சிறப்பாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்