

இன்றைய பஞ்சாங்கம்:-
கிழமை: வியாழக்கிழமை
தமிழ் வருடம்: பரபாவ
தமிழ் மாதம்: சித்திரை
நாள்: 17
ஆங்கில தேதி: 30
மாதம்: ஏப்ரல்
வருடம்: 2026
நட்சத்திரம்: இன்று அதிகாலை 01.10 வரை அஸ்தம் பின்பு சித்திரை
திதி: இன்று இரவு 09.50 வரை சதுர்த்தசி பின்பு பௌர்ணமி
யோகம்: சித்த, அமிர்த யோகம்
நல்ல நேரம் காலை: 11.30 - 12.00
நல்ல நேரம் மாலை: 12.30 - 1.30
ராகு காலம் பிற்பகல்: 1.30 - 3.00
எமகண்டம் காலை: 6.00 - 07.30
குளிகை காலை: 09.00 - 10.30
கௌரி நல்ல நேரம் காலை -
கௌரி நல்ல நேரம் மாலை: 6.30 - 7.30
சூலம்: தெற்கு
சந்திராஷ்டமம் உத்திரட்டாதி
ராசிபலன்:-
மேஷம்
நினைத்த காரியம் வெற்றி பெறும். உத்யோகஸ்தர்களுக்கு வீட்டுக் கடன் கிடைக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். சிறு வியாபாரிகளுக்கு விற்பனை மிகும். பெரிய விசயங்கள் சட்டென்று முடியும். பணவரவு திருப்தி தரும். எதிர்பார்த்த ஒரு நற்செய்தி வரும். உடன்பிறந்தவர்கள் அன்புடன் நடந்து கொள்வர்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
ரிஷபம்
மார்கெட்டிங்பிரிவினர் அதிக ஆர்டர்கள் பெறுவர். கணினி துறையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவர். வாகன பராமரிப்பு செலவு ஏற்படும். வெளியூர் பயணம் வெற்றி தரும். அக்கம் பக்கத்தாரிடம் நட்பு பலப்படும். உடல்நிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
மிதுனம்
பிள்ளைகள் பெற்றோர்களின் ஆதரவுடன் முன்னேறுவர். மகிழ்ச்சி பொங்கும். அழகு நிலையங்கள் வருவாயை அதிகரிக்கும். பெண்கள் வீட்டுச்செலவினை சமாளிப்பர். கணவன், மனைவி ஒற்றுமை இருப்பர். வியாபாரம் செழிப்புறும். உடல் நலம் சிறக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
கடகம்
வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கெட்ட நண்பர்களை ஒதுக்குவீர்கள். அரைகுறையாக நின்ற விஷயங்கள் உடனே முடியும். தாய்வழி உறவினர்களிடம் மதிப்பு, மரியாதைக் கூடும். உடல்நிலையில் சிறுபாதிப்பு ஏற்பட்டு விலகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
சிம்மம்
திடீர் பயணங்கள் வந்துப் போகும்.ஒரு சிலர் நவீன வாகனம் வாங்குவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மதிப்பார்கள். மாணவர்கள் காதலில் சிக்கிக் கொள்ளாமல் பார்த்து கொள்வது நல்லது. கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டை அலங்கரிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
கன்னி
வியாபாரத்தில் பணவரவு அதிகரிக்கும். வெளியூர் பயணம் தடைபடும். நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வாராப் பணம் வரும். பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும். தந்தைவழி சொத்து கைக்கு வரும். கல்யாணம், கிரகப் பிரவேசத்தில் முதல் மரியாதைக் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்
துலாம்
சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். யோகாவில் மனம் லயிக்கும். மருத்துவர்களுக்கு பதவி உயர்வுண்டு. விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும். பிள்ளைகள் தங்கள் சந்தேகங்களை பெற்றோரிடம் போக்கிக் கொள்வர். சிலருக்கு கௌரவப் பதவிகள் தேடி வரும். மாணவர்களுக்கு உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
விருச்சிகம்
மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். ஷேர் மூலம் பணம் வரும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் அவ்வப்போது வரும். மாணவர்கள் புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் கொள்வர். வழக்கில் திருப்பம் ஏற்படும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து கொண்டு அத்தியாவசியத்தை மட்டும் செய்யப்பாருங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
தனுசு
பொதுநலத் தொண்டாளர்களுக்கு பெரிய பதவிகள் தேடி வரும். நண்பர்களிடையே கலகலப்பான சூழல் உருவாகும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக்கூடும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். கை, கால் வலி வந்துப் போகும். மூத்த சகோதரி வகையில் உதவிகள் உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: வான்நீலம்
மகரம்
தம்பதியரிடையே அன்பு மேலோங்கும். மருத்துவர்கள் செழிப்பர். தொலைபேசி மூலம் நட்பு பலப்படும். வீடு கட்ட எதிர்பார்த்த பணம் வரும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறைத் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்
கும்பம்
தெய்வீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளால் ஆறுதலடைவீர்கள். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சுப காரியம் கைகூடும். நண்பர்களிடம் தங்கள் அந்தரங்க விசயத்தை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது அனைத்து விதத்திலும் நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை
மீனம்
இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்