பணவரவு நன்றாக இருக்கும் நாள்... இன்றைய ராசிபலன் - 28.04.2026

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
பணவரவு நன்றாக இருக்கும் நாள்... இன்றைய ராசிபலன் - 28.04.2026
Published on

இன்றைய பஞ்சாங்கம்:-

கிழமை: செவ்வாய்க்கிழமை

தமிழ் வருடம்: பரபாவ

தமிழ் மாதம்: சித்திரை

நாள்: 15

ஆங்கில தேதி: 28

மாதம்: ஏப்ரல்

வருடம்: 2026

நட்சத்திரம்: இன்று முழுவதும் உத்திரம்

திதி: இன்று இரவு 08.41 வரை துவாதசி பின்பு திரயோதசி

யோகம்: அமிர்த, சித்த யோகம்

நல்ல நேரம் காலை: 10.30 - 11.30

நல்ல நேரம் மாலை: 4.30 - 5.30

ராகு காலம் பிற்பகல்: 3.00 - 4.30

எமகண்டம் காலை: 9.00 - 10.30

குளிகை காலை: 12.00 - 1.30

கௌரி நல்ல நேரம் காலை: 1.30 - 2.30

கௌரி நல்ல நேரம் மாலை: 7.30 - 8.30

சூலம்: வடக்கு

சந்திராஷ்டமம்: அவிட்டம், சதயம்

ராசிபலன்:-

மேஷம்

உத்யோகஸ்தர்கள் அதிகாரிகளிடம் பாராட்டைப் பெறுவர். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரம் லாபகரமாக செல்லும். திருமணமானவர்களுக்கு குழந்தைக்குண்டான நற்செய்தி கிடைக்கும். வெளிநாட்டுத் தொடர்பால் நன்மைகள் கூடும். கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். வெளியூர் செல்வதில் திட்டங்கள் மாறும். உடல் நலம் பளிச்சிடும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

ரிஷபம்

நண்பர்கள் ஒற்றுமையுடன் இருப்பர்.சமூக ஆர்வலர்களுக்கு மக்கள் செல்வாக்கு கூடும். தம்பதிகளின் அன்பு மேலோங்கும். பணியாளர்களுக்கு, வேலைப்பளு இருக்கும். வியாபாரத்தில் சூழ்ச்சியை வெல்வீர்கள். உடன் பிறந்தவர்கள் உதவுவர். பயணங்களால் மகிழ்ச்சி உண்டு. நண்பர்கள் உண்மையாக இருப்பர்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

மிதுனம்

குடும்பத்தலைவிகள் சேமிப்பிற்கு முக்கியத்துவம் தருவர். சிக்கனத்தை கடைபிடிப்பர். பெண்களுக்கு மதிப்பு கூடும். தம்பதிகளிடையே அன்பு பலப்படும். வெளிநாட்டவர் மற்றும் வேற்று மொழிக்காரர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகும். அரசியல்வாதிகள் சுதந்திரமாகச் செயல்படுவர்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

கடகம்

பெண்களுக்கு தாங்கள் நினைத்த சம்பள உயர்வு கிடைக்கும். வேற்றுமதத்தவர் உதவுவார். செலவு கூடும். சிக்கனம் தேவை. பழைய வீட்டை சீர் செய்வீர்கள். வியாபாரிகள் முதலீட்டைப் பெருக்குவர். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். விட்டுக்கொடுப்பது நல்லது. எதிர்பாராத சந்திப்பு நிகழும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

சிம்மம்

வியாபாரிகளின் எண்ணங்கள் ஈடேறும். வெளியூர் நண்பர்கள் தங்களுக்கு ஆதரவு தருவர். பணவரவு நன்றாக இருக்கும். தம்பதிகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும். பெண்கள் சிக்கன நடவடிக்கையை மேற்கொள்வது அவசியம். பிள்ளைகளின் செயல்களில் கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கன்னி

உறவினர்கள் வீட்டிற்கு வந்து போவர். நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். உத்யோகஸ்தர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். பெண்களுக்கு இடுப்பு கை, கால் வலி நீங்கும். தம்பதிகளின் அன்யோன்யம் பெருகும். மாணவர்கள் பகுதி படிப்பில் சேருவர். வியாபாரம் செழிக்கும். உடல் வலிமை உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை

துலாம்

உத்யோகத்தில் மதிப்பு கூடும். உத்யோகஸ்தர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். உணவு வியாபாரம் நன்கு நடைபெறும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். கடன் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். தம்பதிகள் சமரசமாக செல்வர். வரவுக்கேற்ப செலவு செய்வர். மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுப்பர்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

விருச்சிகம்

உத்யோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வி.ஐ.பிகளுக்கு நெருக்கமாவீர்கள். தம்பதிகள் இணைந்து செயல்படுவர். பூர்வீக சொத்தில் தங்கள் பங்கு கிடைக்கும். வழக்குகளை இழுத்தடிக்கும். மாணவர்கள் விடுமுறையை கைத்தொழில் கற்க பயன்படுத்துவர்.

அதிர்ஷ்ட நிறம்: வான்நீலம்

தனுசு

கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட மனஸ்தாபம் விலகும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு நினைத்த பதவி கிடைக்கும். தேக ஆரோக்கியம் மேம்படும். எதிர்பார்த்த புதிய வேலை கிடைக்கும். உறவினர்கள் வருகை உண்டு. மாணவர்கள் விடுமுறையை உறவினர் வீட்டில் கழிப்பர்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மகரம்

வெளிநாடு சென்று படிக்க திட்டமிடுவீர்கள்.பெண்களுக்கு திருமணம் செட்டாகும். பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் வளர்ச்சி கூடும். பிள்ளைகளால் நன்மைகள் நடக்கும். கணவரிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாயின் தேவையை நிறைவேற்றுவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

கும்பம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மீனம்

மனைவி உங்களுடைய தவறுகளை சுட்டிக் காட்டினால் கோபப்படாமல் அமைதியை கையாளவும். பெண்கள் சுயதொழிலில் முன்னேற்றம் காண்பர். விருந்து விழா என்று கலந்து கொள்வீர்கள். உத்யோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் அனுசரிப்பது நல்லது. ஆவணங்களை பாதுகாப்பீர்கள். உடல்நிலையில் சிறு பாதிப்பு வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com