புதிய வாய்ப்புகள் வரும் நாள்... இன்றைய ராசிபலன் - 29.04.2026

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
புதிய வாய்ப்புகள் வரும் நாள்... இன்றைய ராசிபலன் - 29.04.2026
Published on

இன்றைய பஞ்சாங்கம்:-

கிழமை: புதன்கிழமை

தமிழ் வருடம்: பரபாவ

தமிழ் மாதம்: சித்திரை

நாள்: 16

ஆங்கில தேதி: 29

மாதம்: ஏப்ரல்

வருடம்: 2026

நட்சத்திரம்: இன்று அதிகாலை 04.22 வரை உத்திரம் பின்பு அஸ்தம்

திதி: இன்று இரவு 09.01 வரை திரயோதசி பின்பு சதுர்த்தசி

யோகம்: மரண, சித்த யோகம்

நல்ல நேரம் காலை: 11.00 - 12.00

நல்ல நேரம் மாலை: 4.30 - 5.30

ராகு காலம் மாலை: 12.00 - 1.30

எமகண்டம் காலை: 7.30 - 9.00

குளிகை காலை: 10.30 - 12.00

கௌரி நல்ல நேரம் காலை: 1.30 - 2.30

கௌரி நல்ல நேரம் மாலை: 6.30 - 7.30

சூலம்: வடக்கு

சந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி

ராசிபலன்:-

மேஷம்

பிள்ளைகள் தங்கள் சொல்படி நடப்பர். பெண்கள் கணவர் வீட்டாரிடம் இணக்கமாக செல்வது நல்லது. நட்பு வட்டம் விரிவடையும். உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். கணவனிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. உடல் நலம் தேறும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

ரிஷபம்

கணவருக்கு வெளியூர் பயணம் நேரிடும். வியாபாரத்தில் ஆதாயம் காணலாம். அரசு டென்டர் போன்றவைகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவர். கலைஞர்களுக்கு வரவேண்டிய மீதித் தொகை வந்து சேரும். குடும்பத் தலைவிகள் வீட்டிற்கு தேவையான அத்தியாசிய பொருள்களை வாங்குவர்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மிதுனம்

வாகனத்திற்கு அதிக செலவு ஏற்படக்கூடும். உடன் பிறந்தவர்கள் உதவுவர். புதிய நண்பர்களிடம் கவனமாக இருங்கள். பெண் அரசியல்வாதிகளுக்கு புகழ், கௌரவம் உயரும். வாடிக்கையாளர்களிடம் ஆவேசமாக பேச வேண்டாம். வேலை தேடுபவர்களுக்கு நேர்முக தேர்வில் வெற்றிப் பெறுவர்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

கடகம்

தொழிலதிபர்களுக்கு வேலையாட்கள் தங்கள் சொல்படி நடப்பர். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். பெண்களுக்கு அக்கம் பக்கத்தாரின் உதவி கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது நல்லது. தங்கள் பிள்ளை அயல்நாடு செல்வார்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

சிம்மம்

பங்குச் சந்தை நல்ல பலன் கொடுக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. பயணங்களின் போது செல்போன் பேச வேண்டாம். தம்பதிகளிடையே அன்பு பெருகும். புதிய ஏஜென்சி எடுப்பீர்கள். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு கூடுதல் அலைச்சல் உண்டு. விவசாயிகளின் பொருட்களுக்கு விலை ஏற்றம் உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

கன்னி

ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள். வேலையில் தங்கள் கணவரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். இரவில் நீண்ட தூர பயணத்தை தவிர்க்கவும். தொழிலதிபர்களிடமிருந்து வேலையாட்கள் தொழில் யுக்திகளை கற்றுக் கொள்வார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

துலாம்

உத்யோகஸ்தர்கள் மேலிடத்தின் மேல் கவனம் கொள்வது நல்லது. வியாபாரிகளுக்கு வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். தம்பதிகளிடம் ஒற்றுமை கூடும். சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். மாணவர்களின் நினைவாற்றல் கூடும். தேக ஆரோக்கியம் சிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

விருச்சிகம்

உறவினர்களால் நன்மை உண்டு. தம்பதிகளிடையே அன்யோன்யம் மிகும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் ஆத்திரப்படாதீர்கள். பொறுமையை கையாள்வது நன்மையைத் தரும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும். மாணவர்கள் நன்கு படிப்பர். தேகம் பொலிவு பெறும்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

தனுசு

பிரபலமானவர்களால் நன்மை உண்டு. உங்களை சார்ந்து இருப்பவர்களின் நிலையினை உணர்ந்து உதவுவீர்கள். நண்பர்கள் பக்கபலமாக இருப்பர். உத்யோகஸ்தர்கள் வேலையை விரைவில் முடிப்பர். கணவன்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரும். பொறுமை மிக அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மகரம்

பயணத்தின் போது எச்சரிக்கை தேவை. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வேறு பள்ளியில் இடமாற்றத்திற்கு முயற்சி செய்வர். தொழில் சூடு பிடிக்கும். வீட்டில் தயாரிக்கும் பொருட்கள் நல்ல விற்பனைக்கு உள்ளாகும். பங்கு சந்தையில் சில மாற்றங்கள் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கும்பம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

மீனம்

தம்பதிகளிடையே அன்பு பலப்படும். உத்யோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் பாராட்டுவர். வியாபாரிகளின் தங்கள் தொழிலுக்கு ஏற்ப வங்கிக் கடன் கிட்டும். வேலை தேடுபவர்களுக்கு புது உத்யோக வாய்ப்பு வரும். மளிகைக் கடை மற்றும் சில்லரை வியாபாரம் லாபம் தரும். மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

X

Daily Thanthi
www.dailythanthi.com