இன்றைய ராசிபலன் - 30.09.24

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்
Today Rasi Palan -30.09.24
Published on

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் புரட்டாசி மாதம் 14ம்- தேதி திங்கட்கிழமை

நட்சத்திரம் : இன்று காலை 09.01 வரை மகம் பின்பு பூரம்

திதி : இன்று இரவு 08.45 வரை திரயோதசி பின்பு சதுர்த்தசி

யோகம் : மரண, சித்த யோகம்

நல்ல நேரம் காலை : 6.15 - 7.15

நல்ல நேரம் மாலை : 3.15 - 4.15

ராகு காலம் காலை : 07.30 - 09.00

எமகண்டம் காலை : 10.30 - 12.00

குளிகை மாலை : 1.30 - 3.00

கௌரி நல்ல நேரம் காலை : 09.15 - 10.15

கௌரி நல்ல நேரம் மாலை : 7.30 - 8.30

சூலம் : கிழக்கு

சந்திராஷ்டமம் : உத்திராடம்

இன்றைய ராசிபலன்:

மேஷம்

உத்யோகஸ்தர்களுக்கு தாங்கள் கேட்ட சலுகைகள் கிடைக்கும். சுபச் செலவுகள் அதிகமாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். தியானம் மேற்கொள்வது டென்ஷனை குறைக்க உதவும். சில நேரங்களில் சோர்வோடும் களைப்போடும் காணப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

ரிஷபம்

உத்யோகஸ்தர்கள் புதிய இடத்தில் கிளைகள் ஆரம்பிப்பீர்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் நீங்கும். அரசால் அனுகூலம் உண்டு. தாயாரின் உடல்நிலை பாதிக்கும். பணவரவு அதிகரிக்கும். புகழ் மற்றும் அதிகார பதவியில் உள்ளவர்கள் நண்பர்களாவர். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். கணவருடன் கருத்து மோதல்களும் வரக்கூடும். அனுசரிப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மிதுனம்

நீண்ட தூர யாத்திரை மேற்கொள்வீர்கள். கோவில் விழாக்களில் கலந்து கொள்வீர்கள். உறவினர்களில் ஒருசிலர் உங்களுடைய புத்திசாலித்தனத்தை மெச்சுவார்கள். வருமானம் உயரும். வசதி, வாய்ப்புகள் பெருகும். உடல் நலம் தேறும். பணப் புழக்கம் மிகும். புது ரக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். மாணவர்களின் அலட்சியபோக்கு நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

கடகம்

ஏற்றுமதி, இறக்குமதியால் லாபம் உண்டாகும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். தங்களை வெறுத்துச் சென்றவர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். மாணவர்கள் நன்கு படிப்பர். உத்யோகஸ்தர்கள் வெளியூர்களுக்கு மாற்றலாவர். பயணங்களின் போது கவனம் தேவை. வியாபாரம் சாதகமாக இருக்கும். உடல் நலம் தேறும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

சிம்மம்

நினைத்த காரியங்கள் இன்று தங்கள் எண்ணப்படி நடந்தேறும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் நெருக்கடி தந்த அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். மகனுக்கிருந்து வந்த கூடாப்பழக்க வழக்கம் விலகும். உங்கள் உடல் உஷ்ணம் அதிகமாகும். சம்பள பாக்கி கைக்கு வரும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

கன்னி

நினைத்தவரை சந்திக்கும் நாளாக அமையும். வாகனம் ஓட்டும் போது எச்சரிக்கை தேவை. பெண்கள் வேலையை எளிதாக்க புதிய ரக பொருட்களை உபயோகப்படுத்துவர். பொறுப்பான வேலையாட்கள் பணியில் வந்து சேருவார்கள். கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வரும். தந்தை வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

துலாம்

ஆன்மீகச் சுற்றுலா செல்வீர்கள். அடிவயிற்றில் வலி, சளித் தொந்தரவு வந்து நீங்கும். மகளுக்கு திருமணம் கூடி வரும். மாணவர்கள் வகுப்பாசிரியரின் அன்பையும், பாராட்டையும் பெறுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வெளியூர் பயணம் வெற்றி தரும் அடுத்தடுத்த செலவுகளால் பணப்பற்றாக்குறை இருந்து கொண்டேயிருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

விருச்சிகம்

புதியவர்கள் நண்பர்களாவார்கள். அவர்களால் தங்களுக்கு நல்ல மாற்றங்கள் விளையும். பழைய நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். மனைவி வழியில் உதவிகள் உண்டு. வாகனம், வீடு பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். உயர் ரக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

தனுசு

எதிர்பார்த்திராத சில விசயங்கள் நல்லபடியாக நடந்தேறும். நட்பு வட்டம் விரிவடையும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். சிலருக்கு புது இடத்தில் வேலை கிடைக்கும். வீடு, மனை உங்கள் ரசனைக்கேற்ப அமையும். ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது நல்லது. நம்பிக்கைக்குரியவரை சந்தித்து எதிர்காலம் குறித்து சில முடிவுகள் எடுப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

மகரம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

கும்பம்

கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. சிக்கனம் அவசியம். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். சில சமயம் தங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வீட்டிற்கு அழகு சேர்க்க கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

மீனம்

பழைய வராத கடன் பணம் வந்து சேரும். பணவரவுக்கு பஞ்சமில்லை. விருந்தினர்கள், உறவினர்கள் வருகையும் அதிகரிக்கும். செரிமானக் கோளாறு, முதுகு வலி, மூட்டு வலி வந்து நீங்கும். திருமணம், சீமந்தம் என அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பழைய உறவினர், நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து விலகும்.

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com