

கிழமை: ஞாயிறுகிழமை
தமிழ் வருடம்: விசுவாவசு
தமிழ் மாதம்: மாசி
நாள்: 17
ஆங்கில தேதி: 1
மாதம்: மார்ச்
வருடம்: 2026
நட்சத்திரம்: இன்று மாலை 08-53 வரை பூசம் பின்பு ஆயில்யம்
திதி: இன்று மாலை 07-33 வரை திரயோதசி பின்பு சதுர்த்தசி
யோகம்: சித்த யோகம்
நல்ல நேரம்: காலை 07-30 to 8-30
நல்ல நேரம்: மாலை 3-30 to 4-30
ராகு காலம்: மாலை 4-30 to 6-00
எமகண்டம்: காலை 12-00 to 1-30
குளிகை: காலை 3-00 to 4-30
கௌரி நல்ல நேரம்: காலை 10-30 to 11-30
கௌரி நல்ல நேரம்: மாலை 1-30 to 2-30
சூலம்: மேற்கு
சந்திராஷ்டமம்: பூராடம்
மேஷம்
வீடு கட்ட கடன் கிடைக்கும். உத்யோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களால் நன்மைகள் விளையும். சுபகாரியம் செட்டாகும். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு ஆர்டர்கள் கிடைக்கும். தம்பதிகள் ஒற்றுமை மேலோங்கும். புதிய குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். உடல் நலம் சரியாகும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
ரிஷபம்
குடும்பத் தலைவிகளுக்கு சேமிப்பு உயரும். வெளியூர் பயணத்திற்கான ஏற்பாடுகள் நடக்கும். மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் அதிக முயற்சியின் பேரில் இடம் கிடைக்கும். உடல் நலம் சிறப்படையும். மாணவர்களுக்கு நினைவாற்றல் கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
மிதுனம்
ஒரு சிலருக்கு புதிய நிறுவனத்தில் வேலையில் அமர்வார்கள். சிகிச்சையில் இருப்பவர்கள் பூரண குணம் அடைவார்கள். பல ஆன்மீக ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டும் என்ற நீண்ட கால விருப்பம் நிறைவேறும். காதல் கனிந்து வரும். தேக ஆரோக்கியம் சிறக்க குறித்த நேரத்தில் உணவை உட்கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்
கடகம்
பணவரவுக்கு குறைவில்லை. குடும்பத்தில் அமைதி நிலவும். புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவீர்கள். தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும். காதலர்களுக்கு பெரியவர்களின் சம்மதம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல் தீரும். யாருக்கும் ஜாமின் கொடுக்காத்தீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
சிம்மம்
பணச் செலவுகளை தங்கள் கட்டுபாட்டில் வைப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே பூசல்கள் உண்டாகும். அமைதி காப்பது நல்லது. தங்கள் பிள்ளைகளால் நன்மை விளையும். உறவினர்கள் வந்து போவர். குறித்த நேரத்தில் உட்கொள்வது நல்லது. உணவு விசயத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
கன்னி
வீடு தொடர்பான விசயங்களில் நல்ல செய்தி வந்து சேரும். நண்பர்களிடையே வாக்குவாதம் வந்து போகும். வியாபாரிகளிடையே நல்லிணக்கம் உண்டாகும். மாமனார் உடல்நலம் பாதிக்கப்படலாம். காதல் ஒருசிலருக்கு கண்சிமிட்டும். உடல் நலம் சிறப்பாகும். சளித் தொந்தரவு இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை
துலாம்
வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. காதலர்களிடையே ஊடல் வந்து போகும். பின்பு சமாதானமாவர். மாணவர்களின் கவனம் படிப்பில் அதிகரிக்கும். வியாபாரிகளின் விற்பனை கூடும். உத்யோகஸ்தர்களுக்கு வெளியூர் டிரான்ஸ்பர் கிடைக்கும். தங்கள் தோழிகளிடம் பெண்கள் மனம்விட்டு பேச நேரம் கிடைக்கும். தேகம் பளிச்சிடும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர்பச்சை
விருச்சிகம்
குடும்பத் தலைவிகளுக்கு பணவரவில் தடையில்லை. நகை சீட்டு என பணத்தை சேமிப்பாக மாற்றுவிர்கள். வியாபாரிகளின் கோரிக்கை நிறைவேறும். புதுமண தம்பதிகள் வெளியூர் பயணம் மேற்கொள்வர். மாணவர்கள் மேற்படிப்புக்காக வெளிநாடு செல்ல திட்டமிடுவர். அதற்குண்டான வேலைகளை இன்று ஆரம்பிப்பர்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
தனுசு
இன்று சந்திராஷ்டமம் என்பதால் யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
மகரம்
குடும்பத் தலைவிகள் தங்கள் பிள்ளைகளின் திருமணத்திற்காக வரண் பார்க்கும் முயற்சியைத் துவங்குவர். குறுகிய தூர பயணம் மேற்கொள்வீர்கள். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பர். கர்ப்பிணிகள் உரிய கவனத்துடன் இருப்பது அவசியம். புரமோஷன், டிரான்ஸ்பருக்கு வாய்ப்பு உள்ளது.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்
கும்பம்
உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை வெளிநாட்டில் பரப்புவர். புதிய கிளைகள் திறக்கும் யோகம் உள்ளது. கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை நிலவும். பிள்ளைகள் நன்கு படிப்பர். தந்தையின் சொல்லுக்கு செவி சாய்ப்பது நலம் தரும். இருமல் தொந்தரவு வந்து போகும்.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்
மீனம்
உத்யோகம் தாங்கள் விரும்பியபடி திருப்திகரமாக செல்லும். அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். பழைய நண்பர்களின் நினைவுகள் வந்து போகும். ஒரு சிலர் நேரில் சென்று நினைவுகளை அசைபோடுவர். பெற்றோருக்கு மருத்துவ செலவுண்டு.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை