இன்றைய ராசிபலன் (02.01.2026): நினைத்த காரியம் பலிக்கும் நாள்..!


இன்றைய ராசிபலன் (02.01.2026): நினைத்த காரியம் பலிக்கும் நாள்..!
x
தினத்தந்தி 2 Jan 2026 5:14 AM IST (Updated: 2 Jan 2026 5:16 AM IST)
t-max-icont-min-icon

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்

கிழமை: வெள்ளிக் கிழமை

தமிழ் வருடம்: விசுவாவசு

தமிழ் மாதம்: மார்கழி

நாள்: 18

ஆங்கில தேதி: 2

மாதம்: ஜனவரி

வருடம்: 2026

நட்சத்திரம்: இன்று இரவு 08-16 வரை மிருகசீரிஷம் பின்பு திருவாதிரை

திதி: இன்று காலை 06-43 வரை சதுர்த்தசி பின்பு பௌர்ணமி

யோகம்: சித்த யோகம்

நல்ல நேரம்: காலை 9-30 to 10-30

நல்ல நேரம்: மாலை 4-30 to 5-30

ராகு காலம்: காலை 10-30 to 12-00

எமகண்டம்: மாலை 3-00 to 4-30

குளிகை: காலை 7-30 to 9-00

கௌரி நல்ல நேரம்: காலை 12-30 to 1-30

கௌரி நல்ல நேரம்: மாலை 6-30 to 7-30

சூலம்: மேற்கு

சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்

இன்றைய ராசிபலன்

மேஷம்

பிரபலங்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். நினைத்த பொருள் கைக்கு வந்து சேரும். சொகுசு வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்திற்கு நற்செய்தி மகிழ்ச்சியைத் தரும். பண வரவு அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் அன்பு கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

ரிஷபம்

கலைஞர்களுக்கு சம்பளம் கூடும். அலுவலக வேலைகளை விரைவாக முடிப்பீர்கள். புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். பணப்பற்றாக்குறை நீங்கும் பழைய நண்பரை சந்திப்பீர்கள். உடல் நலம் தேறும். வங்கிப் பணியாளர்கள் நிம்மதியடைவர்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மிதுனம்

பிடித்தவர்களை சந்திப்பீர்கள். தங்கள் மகனுக்கு விசா கிடைக்கும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். நினைத்த பொருள் வாங்குவீர்கள். உடல் நலம் சரியாகும். கலைஞர்களுக்கு புகழ் கூடும். பணப்பிரச்சினை இருக்காது. நினைத்த காரியம் பலிக்கும். தியானம் டென்ஷனை குறைக்க உதவும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கடகம்

சுபச்செலவுகள் அதிகமாகும். கல்வித் தடை நீங்கும். பணவரவுக்கு பஞ்சமில்லை. உறவினர்களின் வருகை இருக்கும். தாயாரின் உடல்நிலை தேறும். சான்றோர்களின் நட்பு கிடைக்கும். கமிஷன் தொழிலில் பணம் வரும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து படிப்பர். கலைஞர்களுக்கு அரசியலிருந்து அழைப்பு வரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

சிம்மம்

வீடு வாங்கும் யோகம் உண்டு. பிள்ளைகள் சிறப்புறுவர். நெருப்பில் கவனம் தேவை. பல வழிகளில் வருவாய் அதிகரிக்கும். ஷேர் மூலம் பணம் வரும். வழக்கு சாதகமாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். பெண்களின் மாதவிடாய் பிரச்சினை தீரும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

கன்னி

பணப் பற்றாக்குறை நீங்கும். இளைஞர்கள் கடமையை உணர்வர். பிடிவாதத்தை தளர்த்துவீர்கள். பிரிந்த தம்பதியர் நல்ல முடிவு எடுப்பர். மனைவி வழியில் உதவிகள் உண்டு. வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும். தம்பதிகளின் ஒற்றுமை பலப்படும். தங்கள் மகனுக்கு விசா கிடைக்கும். தேகம் பளிச்சிடும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

துலாம்

விருந்தினர்கள் வருகை அதிகரிக்கும். பழைய பொருட்கள் விற்று விடும். ஆரோக்கியத்தில் அலட்சியம் வேண்டாம். புதியவர்கள் அறிமுகமாவார்கள். நண்பர்களுக்குள் நட்பு பலப்படும். மனைவியிடம் ஆரோக்யமான விவாதங்கள் வரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

விருச்சிகம்

தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை அதாவது தங்கள் தொழில் சார்ந்தவர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் சந்திராஷ்டமம் என்பதால் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

தனுசு

வியாபாரத்தில் தொய்வு நீங்கும். தந்தை வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வரும். வியாபாரிகள் விழிப்புடன் செயல்படுவர் பெண்ணுக்கு நல்ல வரண் அமையும். பாகப்பிரிவினை சுமுகமாகும். சகோதரிக்குள் இருந்த பகைமை நீங்கும். கணவரிடம் விட்டுக் கொடுப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

மகரம்

வாகனம் வாங்க கடன் கிடைக்கும். உத்யோகத்தில் மதிப்புக் கூடும் அரசால் அனுகூலம் உண்டு. வெளித் தொடர்புகள் விரிவடையும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். பிள்ளைக்கு படிப்பில் அக்கறை கூடும். மணவாழ்க்கை மகிழ்வு தரும். வழக்கறிஞர்கள் பிரபலமாவார்கள். அயல்நாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கும்பம்

பங்குச் சந்தையில் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிட்டும். மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி அவசியம். ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். இளைஞர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நண்பர்களின் பக்கபலம் உண்டு. சகோதரி வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மீனம்

முக்கிய பொறுப்புகளை முடிப்பீர்கள். முகத் தோற்றம் பளிச்சிடும். தாய்வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். தொழிலில் அலட்சியபோக்கு நீங்கும். திருமண பேச்சுவார்த்தை நன்மை தரும். பொது சேவையில்ஆர்வம் மிகும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை




1 More update

Next Story