இன்றைய ராசிபலன் (07.12.2025): ஆண்களுக்கு நல்ல வரன் அமையும்

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
இன்றைய பஞ்சாங்கம்
டிசம்பர் 7
கிழமை ஞாயிறு கிழமை
தமிழ் வருடம் விசுவாவசு
தமிழ் மாதம் கார்த்திகை
நாள் 21
ஆங்கில தேதி 7
மாதம் டிசம்பர்
வருடம் 2025
நட்சத்திரம் இன்று காலை 10-41 வரை
திருவாதிரை பின்பு புனர்பூசம்
திதி இன்று அதிகாலை 01-14 வரை துவிதியை, இரவு 11-23 வரை திரிதியை பின்பு சதுர்த்தி
யோகம் சித்த யோகம்
நல்ல நேரம் காலை 07-45 to 08-45
நல்ல நேரம் மாலை 03-15 to 4-15
ராகு காலம் மாலை 04-30 to 6-00
எமகண்டம் மாலை 12-00 to 1-30
குளிகை மாலை 03-00 to 4-30
கௌரி நல்ல நேரம் காலை 10-45 to 11-45
கௌரி நல்ல நேரம் மாலை 1-30 to 2-30
சூலம் மேற்கு
சந்திராஷ்டமம் அனுஷம், கேட்டை
இன்றைய ராசிபலன்
மேஷம்
சொந்த தொழில் செய்யும் பெண்களுக்கு அதிக ஆர்டர்கள் கிடைக்கும். மளிகை வியாபாரிகளுக்கு அதிகமான லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் அதிக விற்பனையை கூட்ட புதிய வகை சலுகைகளை தருவீர்கள். மாணவ மணிகளுக்கு ஒரு முறை படித்தாலே நினைவில் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்
ரிஷபம்
கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்த தம்பதியர் ஒன்று கூடுவார்கள். இளம் பெண்களுக்கு விரும்பிய வாரே வேலை கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலை பளு கூடும். இருப்பினும் உரிய நேரத்தில் வேலை செய்து முடிப்பீர்கள். மாணவ மாணவியருக்கு கல்வியில் நாட்டம் கூடும். முகப்பொலிவு கூடும்.
அதிர்ஷ்ட நிறம் வெள்ளை
மிதுனம்
தங்களின் மகளின் சுபகாரியம் சம்பந்தமாக வெளியூருக்குச் சென்று ஆடை, அணிமணிகள் வாங்கிவருவீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு சோம்பேறித்தனம் நீங்கி சுறுசுறுப்புடன் வேலையை செய்து முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் தங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம் பச்சை
கடகம்
சுயதொழில் செய்யும் பெண்களுக்கு தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களுக்கு தேவை அதிகரிக்கும். நல்ல லாபம் கிடைக்கும். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். படிப்பில் ஆர்வம் பிறக்கும். உரிய நேரத்தில் உணவு அருந்துதல் நன்மை தரும். பணப் பிரச்சினை இருக்காது.
அதிர்ஷ்ட நிறம் கருநீலம்
சிம்மம்
ஆண்களுக்கு நல்ல வரன் அமையும். பாகப்பிரிவினை சுமுகமாகும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் இருந்து வந்த சிரமங்கள் நீங்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு கிளைகள் துவங்குவர். குடும்பத் தலைவிகளுக்கு வெளிநாட்டில் உள்ள தங்கள் சகோதரி தங்கள் வீட்டிற்கு வந்து செல்வார்.
அதிர்ஷ்ட நிறம் சாம்பல்
கன்னி
வேலைக்கு செல்பவர்களுக்கு சொந்த வீடு கனவு நிஜமாகும். வங்கி கடன் வசதி கிடைக்கும். புதிய தொழில் துவங்குவர். புதுமண தம்பதிகள் வெளியூர் பயணம் மேற்கொள்வர். குடும்பத் தலைவிகளுக்கு குடும்பத்தில் உள்ள சலசலப்புகள் நீங்கி அமைதி சூழ்நிலை உருவாகும்.
அதிர்ஷ்ட நிறம் வெள்ளை
துலாம்
அக்கம் பக்கத்தினர் தொடர்புகள் நன்றாக இருக்கும். பிள்ளைகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். கலைஞர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உத்யோகஸ்தர்களுக்கு அலுவலக சம்பந்தப்பட்ட வழக்கு சாதகமாகும். குடும்ப தலைவிகளுக்கு தங்கள் மாமியாரிடம் இருந்த மனக்கசப்பு நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம் சிவப்பு
விருச்சிகம்
இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.இறைவனை மட்டும் பிரார்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் ரோஸ்
தனுசு
குடும்பத் தலைவிகளுக்கு பணம் பற்றாக்குறை வரும். உங்கள் புத்திசாலித்தனமாக சமாளிப்பீர்கள். தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். தேகம் பளிச்சிடும்.
அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்
மகரம்
மனைவிவழியில் உதவிகள் உண்டு. வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும். பிள்ளைகளிடம் சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போக்கினை தவிர்ப்பது நல்லது. உடல் நலத்திற்கு எண்ணெய் பலகாரங்களை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் சாம்பல்
கும்பம்
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு தங்கள் அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்கள் உங்களுக்கு உதவி புரிவார். மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசினை பெற்று மகிழ்வீர்கள். இளம் பெண்களுக்கு திருமணம் செட் ஆகும்.
அதிர்ஷ்ட நிறம் சாம்பல்
மீனம்
தொழில் அதிபர்கள் வருவாயினை பெருக்க திட்டமிடுவர்.வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மேலதிகாரிகள் தங்கள் வேலையை பார்த்து வியந்து பாராட்டுவர். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். புதிய வாகனம் வாங்க திட்ட மிடுவீர்கள். உடல்நலம் சீராகும்.
அதிரஷ்ட நிறம் கருநீலம்






