குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும் நாள்...இன்றைய ராசிபலன்: 13.02.2026

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும் நாள்...இன்றைய ராசிபலன்: 13.02.2026
Published on

இன்றைய பஞ்சாங்கம்:-

பிப்ரவரி 13

கிழமை: வெள்ளிக்கிழமை

தமிழ் வருடம்: விசுவாவசு

தமிழ் மாதம்: மாசி

நாள்: 1

ஆங்கில தேதி: 13

மாதம்: பிப்ரவரி

வருடம்: 2026

நட்சத்திரம்: இன்று மாலை 05.00 வரை மூலம்பின்பு பூராடம்

திதி: இன்று பிற்பகல் 3.11 வரை ஏகாதசி பின்பு துவாதசி

யோகம்: அமிர்த, சித்த யோகம்

நல்ல நேரம் காலை: 09.30 - 10.30

நல்ல நேரம் மாலை: 05.00- 06.00

ராகு காலம் பிற்பகல்: 1.30 - 3.00

எமகண்டம் காலை: 6.00 - 07.30

குளிகை காலை: 09.00 - 10.30

கௌரி நல்ல நேரம் காலை: 12.30 - 01.30

கௌரி நல்ல நேரம் மாலை: 6.30 - 07.30

சூலம்: தெற்கு

சந்திராஷ்டமம்: கிருத்திகை, ரோகினி

இன்றைய ராசிபலன்:-

மேஷம்

இன்று செயல்திறன் அதிகரிக்கும் நாள். நீண்ட நாட்களாக மனதில் இருந்த ஒரு எண்ணத்தை நடைமுறைப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் முயற்சிக்கு பாராட்டு கிடைக்கும். தொழிலில் திடீர் முடிவுகளை தவிர்ப்பது நல்லது. மனைவி மீது அக்கறை கொள்வீர்கள். புரிதல் அதிகரிக்கும். உடல் நலம் சிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

ரிஷபம்

இன்று மனக்குழப்பம் நிறைந்த நாளாக மூல நட்சத்திரக்காரர்களுக்கு இருக்கும். காரணம் தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மிதுனம்

இன்று அமைதியும் நிலைத்தன்மையும் நிறைந்த நாள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தங்கள் பிள்ளைக்கு வரண் பார்க்கும் முயற்சியை மேற்கொள்வீர்கள். சொத்து, வீடு தொடர்பான பேச்சுகள் சாதகமாக அமையும். தொழிலில் பொறுப்புகள் கூடினாலும், அவற்றை திறம்பட கையாளுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

கடகம்

பணவரவு எதிர்பார்த்த அளவில் இருக்கும். சேமிப்பு குறித்து சிந்தனை தோன்றும். உறவினர்களுடன் நல்லுறவு வலுப்படும். தெய்வ வழிபாடு மனநிறைவை தரும். காதலர்கள் தங்கள் பொறுப்புணர்வர். வெளிநாடு செல்ல கேட்ட விசா கிடைக்கும். தம்பதிகள் வெளியிடங்களுக்குச் சென்று வருவர். தேகம் பொலிவடையும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

Also Read
திருமணம், சுபகாரியங்கள் நடத்துவதற்கான முகூர்த்த நாட்கள்
குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும் நாள்...இன்றைய ராசிபலன்: 13.02.2026

சிம்மம்

இன்று பேச்சாற்றலும் புத்திசாலித்தனமும் உங்களை முன்னிலைப்படுத்தும். உத்யோகஸ்தர்கள் தங்களது அரியர்ஸ் பணம் தொடர்பான செய்திகள் நல்லவிதமாக முடியும். புதிய தொடர்புகள் உங்களுக்கு பயன் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல்நலத்தில் கவலை இல்லை.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கன்னி

பணவரவு நல்ல நிலையில் இருக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைக்கு வரும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உடல்நலத்தில் சிறு அலட்சியம் கூடாது. பயணம் சாதகமாக அமையும். மனதில் உற்சாகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

துலாம்

சிந்தித்து செயல்படுதல் அவசியம். தொழிலில் உங்கள் திறமை வெளிப்படும். பணவரவு மிதமாக இருந்தாலும் தேவைகளை பூர்த்தி செய்வர். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மீக சிந்தனை மன அமைதியை தரும். உடல் நலத்தில் உணவுப்பழக்கத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

விருச்சிகம்

பொறுப்புகள் அதிகரிக்கும் நாள். ஆனால் உங்கள் உழைப்பால் அனைத்தையும் சமாளிப்பீர்கள். பழைய நண்பர்களை சந்திப்பர். அவர்களுடன் மனம்விட்டு பேசுவீர்கள். குடும்பத்தில் சிறு கவலைகள் இருந்தாலும் விரைவில் தீரும். முதலீடுகள் குறித்து நிதானமாக முடிவு எடுக்கவும். சளித் தொந்தரவு வந்து போகும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

Also Read
வாஸ்து செய்ய உகந்த நாட்கள்
குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும் நாள்...இன்றைய ராசிபலன்: 13.02.2026

தனுசு

மேலதிகாரிகளுடன் பேசும் போது நிதானம் அவசியம். பணவரவு சீராக இருக்கும். தேவையற்ற செலவுகள் குறையும். குடும்பத்தலைவிகள் சேமிப்பர். நண்பர்கள் மூலம் ஒரு நல்ல தகவல் வரும். உடல்நலம் சாதகமாக இருக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

மகரம்

உங்களின் பூர்வீகச் சொத்து வந்தடையும். உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு உண்டாகும். பணத்திற்கு குறைவு ஏற்படாது. செலவு அதிகரிக்கும். சிக்கனம் நடவடிக்கைகள் தேவை. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பர் . தங்களுக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுக்க தற்போதிருந்தே நன்கு படிப்பர்.

அதிர்ஷ்ட நிறம்: வான் நீலம்

கும்பம்

பெண்களுக்கு வீட்டு செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணம் வெற்றி தரும். பண வரவு சீராக இருக்கும். தேகம் பளிச்சிடும். சுறுசுறுப்பு கூடும். நண்பரின் உதவி கிடைக்கும். வெளிநபருடன் வாதம் வேண்டாம். உத்யோகஸ்தர்களுக்கு வேலையில் ஆர்வம் கூடும். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

மீனம்

தம்பதியரிடையே அன்பு மேலோங்கும். காதலில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. தம்பதிகளிடையே அன்பு இரட்டிப்பாகும். மாணவர்கள் நன்கு படித்து முன்னேறுவர். திடீர் பயணங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை புரிந்துக் கொள்வார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com