

கிழமை: வியாழக்கிழமை
தமிழ் வருடம்: பரபாவ
தமிழ் மாதம்: சித்திரை
நாள்: 3
ஆங்கில தேதி: 16
மாதம்: ஏப்ரல்
வருடம்: 2026
நட்சத்திரம்: இன்று பிற்பகல் 01-00 வரை உத்திரட்டாதி பின்பு ரேவதி
திதி: இன்று மாலை 07-31 வரை சதுர்த்தசி பின்பு அமாவாசை
யோகம்: சித்த யோகம்
நல்ல நேரம்: காலை 10-30 to 11-30
நல்ல நேரம்: மாலை 12-30 to 01-30
ராகு காலம்: பிற்பகல் 1-30 to 3-00
எமகண்டம்: காலை 6-00 to 07-30
குளிகை: காலை 09-00 to 10-30
கௌரி நல்ல நேரம்: காலை -
கௌரி நல்ல நேரம்: மாலை 6-30 to 07-30
சூலம்: தெற்கு
சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம்
மேஷம்
உத்யோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர். தொழிலதிபர்கள் தொழிலில் புதிய நவீன நுட்பத்தை கையாள்வர். வியாபாரிகள் அரசு வகையில் ஆதாயபலன் பெறுவர். சுபவிஷயத்தில் எதிர்பார்த்த நல்ல முடிவு கிடைக்கும். மாணவர்கள் முன்கூட்டியே படிக்கும் துறையை தேர்ந்தெடுப்பர். ஆரோக்கியம் மேம்படும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
ரிஷபம்
வியாபாரிகளுக்கு கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள். கணவன் மனைவி பிரச்சினை தீரும். புதிய நண்பர்களிடம் கவனமாக இருங்கள். உத்யோகத்தில் உள்ளவர்கள் பணியில் ஆர்வத்தை அதிகரிப்பர். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு அதிக ஆர்டர்களை எடுப்பர். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
மிதுனம்
உத்யோகஸ்தர்கள் விரும்பிய பணி, இட மாற்றம் கிடைக்கப் பெறுவர். வருமானம் ஏறுமுகத்தில் இருக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட ஆதாயம் அதிகரிக்கும். மாணவர்கள் காதலில் சிக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது. தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
கடகம்
மாணவர்கள் வெளியூர் சென்று படிப்பை தொடர திட்டமிடுவர். குடும்பத் தலைவிகள் வீட்டுப் பொருட்களை வாங்குவீர்கள். வீட்டை அலங்கரிப்பீர்கள். வியாபாரிகள் வாடிக்கையாளரைக் கவரும் விதத்தில் செயல்படுவர். பிறர் தயவின்றி நிற்காமல் சொந்தக்காலில் நிற்பீர்கள். தம்பதிகளின் அன்புப் பலப்படும். தடைப்பட்டிருந்த ஒரு சுப காரியம் கைகூடும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
சிம்மம்
இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
கன்னி
வியாபாரிகள் தங்கள் தேவைக்கேற்ப நவீன கருவிகளை வாங்குவீர்கள். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் தங்களை வந்தடையும். மாணவர்கள் ஆசிரியரிடம் நன்மதிப்பைப் பெறுவர். அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும். எதிர்பார்ப்பு ஒவ்வொன்றாக நிறைவேறி வரும். பணவரவு நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
துலாம்
கையில் பெரும் பணம் புழங்கும். உறவினர் ஆதரவோடு சுபநிகழ்ச்சி நடந்தேறும். நண்பர்களிடம் தங்கள் அந்தரங்க விசயத்தை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது அனைத்து விதத்திலும் நல்லது. தெய்வீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை புரிந்துக் கொள்வார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
விருச்சிகம்
அரசியல்வாதிகளுக்கு கட்சியில் நல்ல பொறுப்பு கிடைக்கும். தொழிலதிபர்கள் அரசு வகையில் ஆதாய பலன் அடைவர். பணியாளர்கள் நிர்வாகத்தின் நன்மதிப்பை பெறுவர். அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். உடல் நலத்தோடு மனநிலையும் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்
தனுசு
பணியாளர்கள் சுதந்திர மனப்பான்மையுடன் பணியாற்றுவர். விவசாயிகள் கடன் தொல்லையில் இருந்து விடுபடுவர். பெண்கள் குடும்பத்துடன் ஆன்மீக சுற்றுலா சென்று வருவர். தான் விரும்பியதை எப்பாடுப்பட்டாலும் அதனை அடைந்துவிட பல வழிகளில் அணுகி வெற்றி காண்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
மகரம்
பங்குச் சந்தை பலன் தரும். தொழிலதிபர்கள் சாதுர்யமாக செயல்பட்டு லாபம் காண்பர். பெண்களுக்கு சுப நிகழ்ச்சி நடத்திட நேரம் கை கூடி வரும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். தம்பதியரிடையே அன்பு மேலோங்கும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். உடல்நிலை சீராக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
கும்பம்
தம்பதிகள் இருவரும் சேர்ந்து முடிவெடுக்கும் எண்ணம் மேலோங்கும். மார்கெட்டிங் பிரிவினர் அலைந்து திரிந்து எப்படியும் முன்னேற்றப் பாதையில் முன் வரிசையில் வந்து விடுவர். பிள்ளைகள் பெற்றோர் சொல்வதை கேட்டு நடந்து கொள்வர். பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறு நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்
மீனம்
பங்குச் சந்தையில் நட்டத்தில் செல்லாமல் கவனத்தில் கொள்வது நல்லது. அண்டை வீட்டாரிடம் நட்பு பலப்படும். ஆன்மீக யாத்திரை செல்வீர்கள். சேமிப்பு கூடும். உடற்பயிற்சியால் உடல்நிலை சீராகும். மாணவர்கள் படித்ததை பார்க்காமல் எழுதி பார்த்து படிப்பதால் அதிக மதிப்பெண்களை பெற இயலும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்