

கிழமை: வெள்ளிக் கிழமை
தமிழ் வருடம்: பரபாவ
தமிழ் மாதம்: சித்திரை
நாள்: 4
ஆங்கில தேதி: 17
மாதம்: ஏப்ரல்
வருடம்: 2026
நட்சத்திரம்: இன்று பிற்பகல் 12-05 வரை ரேவதி பின்பு அஸ்வினி
திதி: இன்று மாலை 05-47 வரை அமாவாசை பின்பு பிரதமை
யோகம்: அமிர்த யோகம்
நல்ல நேரம்: காலை 09-30 to 10-30
நல்ல நேரம்: மாலை 04-30 to 5-30
ராகு காலம்: காலை 10-30 to 12-00
எமகண்டம்: மாலை 3-00 to 4-30
குளிகை: காலை 07-30 to 09-00
கௌரி நல்ல நேரம்: காலை 12-30 to 1-30
கௌரி நல்ல நேரம்: மாலை 6-30 to 7-30
சூலம்: மேற்கு
சந்திராஷ்டமம்: உத்திரம், அஸ்தம்
மேஷம்
பிள்ளைகள் தாங்கள் விரும்பும் நிலையை அடைவர். உயர் கல்விக்காக வெளியூர் அல்லது வெளிநாடு செல்ல திட்டமிடுவீர்கள். மகளுக்கு ஏற்ற துணையை தேர்ந்தெடுப்பர். இளைஞர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். உறவினர்கள் வருகை இன்பமளிக்கும். வியாபாரிகளுக்கு தள்ளுபடியால் விற்பனை கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
ரிஷபம்
அண்டை வீட்டாரிடம் நட்பு பலப்படும். பணம் பாக்கெட்டை நிரப்பும். வியாபாரத்தில் உள்ளவர்கள் பழைய சரக்குகள் விற்று விடுவீர்கள். தம்பதிகள் பொறுப்புணர்வர். வீடு வாங்க கேட்ட வங்கிக் கடன் வந்தடையும். மாணவர்கள் படிப்பு மட்டுமல்லாமல் கலைத்துறையிலும் ஈடுபாடு கொள்வர்.
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்
மிதுனம்
நினைத்தவாறே நல்ல வரண் கிடைக்கும். பெற்றோர் நலனில் அக்கறை காட்டி வருவீர்கள். பெண்கள் புது ரக ஆடைகளை வாங்கி இன்புறுவர். வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவீர்கள் மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர். பங்கு சந்தையில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உடல் நலம் சீராக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
கடகம்
கலைஞர்களுக்கு விரும்பியவாறே கதாபாத்திரம் கிடைக்கும்.திடீர் பணவரவு ஆனந்தத்தைத் தரும். திருமண பேச்சுவார்த்தைகள் இனிதே முடியும். பிள்ளைகளின் எண்ணத்தை ஈடேற்றுவீர்கள். பயணத்தின் போது எச்சரிக்கை தேவை. வெளிநாட்டில் வசிப்பவர்கள் தங்களுக்கு உதவுவர். உடல் நலம் சிறப்படையும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
சிம்மம்
உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவர். வங்கிப் பணியாளர்கள் மேன்மை அடைவர். ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத் தலைவி சேமிக்கத் துவங்குவர். எதிர்பார்த்த வேலை தாமதம் இன்றி விரைவில் முடியும். கடன் கட்டுக்குள் அடங்கும். மாணவர்கள் நன்கு படிப்பர். உடல் நலம் மேம்படும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
கன்னி
இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. காரணம் அந்த பயணங்களால் நன்மை பெரிதாக இருக்காது. இதனால் நேரமும் பணவிரையமும் ஏற்படும். ஆதலால், இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
துலாம்
உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நன்மதிப்பைப் பெறுவர். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தம்பதிகளிடையே அன்பு மிகும். நண்பர்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்றுவர். பிரிந்த நண்பர்கள் அன்பு பாராட்டுவீர்கள். பெற்றோரின் உடல் நலத்தை கவனிப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
விருச்சிகம்
அரசியல்வாதிகளின் எண்ணம் ஈடேறும். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கட்டளையினை ஏற்பர். திருமணமாகாதவர்களுக்கு ஏற்ற துணை கிடைக்கும். நீண்ட தூர பயணத்தை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கல் சீராகச் செல்லும். கூட்டு வியாபாரிகளிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
தனுசு
காதல் கண் சிமிட்டும். பெண்களுக்கு தாங்கள் எதிர்பார்த்த வரண் அமையும். தேகம் பளிச்சிடும். சில்லரை வியாபாரிகள் லாபமடைவர். பிள்ளைகள் நல் வழியில் செல்வர். உத்யோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். ஆசிரியருக்கு பாராட்டுகள் குவியும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
மகரம்
நினைத்த இடத்திற்கு பார்க்க வேண்டிய நபர்களை சந்தித்து நினைத்த காரியத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள். அக்கம் பக்கத்தாருடன் அனுசரனையுடன் செல்லுங்கள். வியாபாரிகள் புதிய கிளைகளை துவங்குவர். பிள்ளைகள் நன்கு படிப்பர். தம்பதிகளிடையே மனஸ்தாபம் நேரலாம்,
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்
கும்பம்
தாய்வீட்டு உறவினர்கள் வருகை உண்டு. விவசாயிகளுக்கு எதிர்பார்த்ததை விட மகசூல் அதிகரிக்கும். அதிகப் பயணங்களால் லாபம் கூடும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். பெண்கள் சுய தொழில்களில் முதலீட்டினை மேற்கொள்வர். மாணவர்கள் பகுதி நேர தொழில்நுட்பப் பயிற்சியில் சேருவர்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
மீனம்
உத்யோஸதர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். வெளியூர் அல்லது வெளிநாடு சுற்றுப்பயணம் நேரலாம். முன்கோபத்தினை தவிர்ப்பது நல்லது. பெற்றோரின் ஆசையினை பூர்த்தி செய்வீர்கள். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: கிரே