இன்றைய ராசிபலன் (18.05.2026): சுபகாரியம் விரைவில் கூடி வரும்..!

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
இன்றைய ராசிபலன் (18.05.2026): சுபகாரியம் விரைவில் கூடி வரும்..!
Published on

இன்றைய பஞ்சாங்கம்:-

கிழமை: திங்கட் கிழமை

தமிழ் வருடம்: பரபாவ

தமிழ் மாதம்: வைகாசி

நாள்: 4

ஆங்கில தேதி: 18

மாதம்: மே

வருடம்: 2026

நட்சத்திரம்: இன்று பிற்பகல் 02-23 வரை ரோகினி பின்பு மிருகசீரிஷம்

திதி: இன்று இரவு 09-19 வரை துவிதியை பின்பு திரிதியை

யோகம் : அமிர்த யோகம்

நல்ல நேரம்: காலை 9-30 to 10-30

நல்ல நேரம்: மாலை 4-30 to 5-30

ராகு காலம்: மாலை 7-30 to 9-00

எமகண்டம்: காலை 10-30 to 12-00

குளிகை: காலை 1-30 to 3-00

கௌரி நல்ல நேரம்: காலை 01-30 to 2-30

கௌரி நல்ல நேரம்: மாலை 7-30 to 8-30

சூலம்: கிழக்கு

சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்

இன்றைய ராசிபலன்:-

மேஷம்

வியாபாரிகள் வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். மார்கெட்டிங் பிரிவினர் தாங்கள் நினைத்த அளவுக்கு புதுப் புது ஆர்டர்கள் எடுப்பீர்கள். அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். அரசியல்வாதிகளுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

ரிஷபம்

வேலை தேடுபவர்கள் போட்டித் தேர்வுகள் மூலம் நினைத்த உத்யோகம் கிடைக்கும். இரும்பு வியாபாரத்தில் ஆதாயம் காணலாம். மனைவியிடம் ஆத்திரப்படாதீர்கள். பொறுமையை கையாள்வது நன்மையைத் தரும். அரசியல்வாதிகள் ஆதாரமில்லாமல் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம். உடல் உற்சாகத்துடன் காணப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மிதுனம்

வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். திடீர் பணவரவு உண்டு. சாதிக்கவேண்டுமென்ற எண்ணம் வரும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் இணைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கடகம்

திருமண பேச்சு வார்த்தை சுபமாக முடியும். வெளியூர் பயணம் தள்ளிப் போகும். விவசாயிகளுக்கு கேட்ட கடன் தொகை கிடைக்கும். வேலைக்காகஅயல்நாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு விசா கிடைக்கும். பெண்கள் அக்கம் பக்கத்தினரிடம் பேசும் போது வாய் நிதானம் தேவை. கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

சிம்மம்

அரசு சம்பந்தப்பட்ட டென்டர் போன்றவைகளில் வெற்றி நிச்சயம். கலைஞர்களுக்கு வரவேண்டிய மீதித் தொகை வந்து சேரும். வாகனம் ஓட்டும் போது வாகனத்தின் முக்கிய ஆவணங்களை வைத்துக் கொள்வது நல்லது. பணவரவு அதிகரிக்கும். உங்கள் பிள்ளைகளுக்காக கூடுதல் நேரம் ஒதுக்குவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கன்னி

பணவரவில் தாமதம் இல்லை. வீட்டில் நிம்மதி கிடைக்கும்.பெற்றோரின் அறிவுரையை ஏற்று நடப்பது நல்லது. வியாபாரிகளுக்கு கடன் பிரச்சினை தீரும். பெரியவர்களின் ஆலோசனைக்கு மதிப்புக் கொடுங்கள். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினை நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

துலாம்

பங்குச் சந்தையில் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையை கையாண்டு அதிக லாபத்தினை ஈட்டுவீர்கள். மகான்கள், ஆன்மீகவாதிகளை சந்தித்து ஆசி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

விருச்சிகம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

தனுசு

வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். அவர்கள் போக்கே சென்று அவர்களை உங்கள் வழியில் வரவழையுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

மகரம்

அரசியலில் செல்வாக்கு உயரும். அலைச்சல் அதிகரிக்கும். திட்டவட்டமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் ஆர்வம் மிகும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அண்டை வீட்டார் மூலம் சில நன்மைகள் உண்டாகும். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கும்பம்

சுபகாரியம் விரைவில் கூடி வரும். உத்யோகத்தில் நெருக்கடி தந்த அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். சம்பள பாக்கி கைக்கு வரும். பிள்ளைகளைப் பற்றிய கவலைகள் விலகும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உடல் உஷ்ணம் அதிகமாகும். ஆதலால், இளநீர் மற்றும் மோர் அருந்துவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பொன்வண்ணம்

மீனம்

பெண்கள் ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து அத்தியாசிய பொருள்களை வாங்குவர். செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பணவரவு அதிகரிக்கும். கலைஞர்களுக்கு வரவேண்டிய மீதித் தொகை வந்து சேரும். தேகம் பளிச்சிடும். உற்சாகம் மிகுந்த நாள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

X

Daily Thanthi
www.dailythanthi.com