இன்றைய ராசிபலன் (20.02.2026) : அரசு ஆதரவு கிடைக்கும்

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
இன்றைய ராசிபலன் (20.02.2026) : அரசு ஆதரவு கிடைக்கும்
Published on

பிப்ரவரி 20

கிழமை வெள்ளிக் கிழமை

தமிழ் வருடம் விசுவாவசு

தமிழ் மாதம் மாசி

நாள் 8

ஆங்கில தேதி 20

மாதம் பிப்ரவரி

வருடம் 2026

நட்சத்திரம் இன்று இரவு 09-19 வரை உத்திரட்டாதி

பின்பு ரேவதி

திதி இன்று பிற்பகல் 03-53 வரை திரிதியை பின்பு சதுர்த்தி

யோகம் சித்த, அமிர்த யோகம்

நல்ல நேரம் காலை 9-30 to 10-30

நல்ல நேரம் மாலை 4-30 to 5-30

ராகு காலம் காலை 10-30 to 12-00

எமகண்டம் மாலை 3-00 to 4-30

குளிகை காலை 07-30 to 09-00

கௌரி நல்ல நேரம் காலை 12-30 to 1-30

கௌரி நல்ல நேரம் மாலை 6-30 to 7-30

சூலம் மேற்கு

சந்திராஷ்டமம் மகம், பூரம்

இன்றைய ராசிபலன்:-

மேஷம்

வீடு, மனை விசயங்களில் சாதகமான போக்கே நிலவும். பங்குச் சந்தை லாபம் தரும். வியாபாரத்தில் புதிய தொழில் நுட்பத்தை கையாளுவீர்கள். தம்பதிகள் விட்டுக் கொடுப்பர். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வீட்டில் மகிழ்ச்சி தங்கும்.. உடன்பிறந்தோர் உங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முற்படுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம் சாம்பல்

ரிசபம்

வெளிபூர் பயணம் வெற்றி தரும். மகளுக்கு திருமணம் கூடி வரும். குடும்பத் தலைவிகளுக்கு மனக்குழப்பம் நீங்கி மன அழுத்தம் குறையும். தம்பதிகளிடையே அன்யோன்யம் கூடும். காதலர்கள் பொறுப்புணர்வர். மாணவர்கள் வகுப்பாசிரியரின் அன்பையும், பாராட்டையும் பெறுவீர்கள். உடல் நலம் சுகம்பெறும்.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை

மிதுனம்

வர வேண்டிய பணம் வசூலாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நன்மை உண்டாகும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பர். பயணங்களால் ஆதாயம் உண்டு. பல் சொத்தை சம்பந்தமாக உபாதைகள் வரவாய்ப்பு உள்ளது. பல்லை பரிசோதனை செய்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் பச்சை

கடகம்

உத்யோகத்தில் பிரச்சினை இல்லை. அலுவலக விசயமாக வெளியூர் பயணம் உண்டு. உங்கள் முடிவு சரியானதாக இருக்கும். தங்களை விட வயதில் பெரியவர்கள் உதவி கிடைக்கும். ஆன்மீக சிந்தனை மேலோங்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பிள்ளைகளின் கடமை உணர்வு அதிகரிக்கும். அவர்களால் தங்களுக்கு பெருமை கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் கருநீலம்

சிம்மம்

தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை அதாவது தங்கள் தொழில் சார்ந்தவர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் சந்திராஷ்டமம் என்பதால் சாதாரணமாக பேசும் வார்த்தைகள் கூட பிரச்சினையைத் தந்து நிரந்தரமாக பேசாமல் போக வாய்ய்புள்ளதால் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்ச்

கன்னி

உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மதிப்பர். நண்பர்கள் கைக் கொடுப்பர். பயணம் நல்லபடியாக முடியும். அரசு ஆதரவு கிடைக்கும். உடல் நலம் தேறும். அரசியலில் நாட்டம் கூடும். குடும்பத்தில் அமைதி நிலவும். நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். பெரியர்களின் ஆசி கிட்டும்.

அதிர்ஷ்ட நிறம் ஊதா

துலாம்

இளைஞர்கள் விரும்பியவரை கைபிடிப்பர். மனைவி வழியில் நன்மை உண்டு.காதலர்களுக்கு தங்கள் பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும். மாணவர்கள் விரும்பிய துறையில் சேர தற்போதிலிருந்தே நன்கு படிப்பது நல்லது. வியாபாரத்தில் புதிய அணுகுமுறையை கையாள்வீர்கள். சுப நிகழ்ச்சிக்கு வித்திடுவீர்கள். உடல் நலம் தேறும்.

அதிர்ஷ்ட நிறம் ரோஸ்

விருச்சிகம்

உணவு பழக்கங்களில் கட்டுப்பாடு அவசியம். அதிக செலவுகள் ஏற்படுவதை தவிர்க்கவும். சிக்கன நடவடிக்கைகள் மிகவும் அவசியம். குடும்பத்தில் ஆதரவு கிடைக்கும். நீண்ட காலமாக கடல் கடந்து செல்ல வேண்டும் என்ற ஆசை நிறைவேறும். யாருக்கும் ஜாமின் கையெழுத்து போட வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்ச்

தனுசு

பங்காளி சண்டை முடிவுக்கு வரும். பெண்களுக்கு ஏற்றார்போல் வேலை கிடைக்கும் வியாபாரிகள் புதிய தொழில் நுட்பத்தை கையாள்வர். பணவரவுக்கு குறைவில்லை. தம்பதிகள் வெளியிடங்களுக்குச் செல்வர். உறவினர்கள் வருகை இல்லத்தில் மகிழ்ச்சியைத் தரும். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் சாதகமாகும்.

அதிர்ஷ்ட நிறம் பொன்நிறம்

மகரம்

உத்யோகஸ்தர்கள் தங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பர். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர். வியாபாரிகள் வெளியூர் பயணம் மேற்கொள்வர். தம்பதிகளிடையே அன்யோன்யம் கூடும். பெண்கள் வேலையை எளிதாக்க புதிய ரக பொருட்களை உபயோகப்படுத்துவர். பொறுப்பான வேலையாட்கள் பணியில் வந்து சேருவார்கள்.

அதிர்ஷ்ட நிறம் சிவப்பு

கும்பம்

வியாபாரிகளிடையே உள்ள போட்டிகள் விலகும். மார்கெட்டிங் பிரிவினர்களின் கனவு நினைவாகும். கொடுக்கல், வாங்கல் கைகொடுக்கும். வீடு, நிலபுலன்களை விற்பதற்காக எடுத்த முயற்சிகள் வெற்றி அடையும். கலைத்துறையினர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். மாணவர்களது நினைவாற்றல் கூடும்.

அதிர்ஷ்ட நிறம் பச்சை

மீனம்

உத்யோகஸ்தர்களுக்கு தங்கள் வேலையில் மனஅழுத்தம் ஏற்படும். இருப்பினும் தாக்குபிடிப்பீர்கள். வெளிநாடு செல்ல காத்திருப்பவர்களுக்கு விசா கிடைக்கும். தம்பதிகளிடையே புரிதல் பலப்படும். சகோதரிகள் தங்களுக்கு உறுதுணையாக இருப்பர். உடல் நலத்தில் கவனம் தேவை. பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் பொன்நிறம்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com