இன்றைய ராசிபலன் (21.01.2026): தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும் நாள்..!

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
இன்றைய ராசிபலன் (21.01.2026): தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும் நாள்..!
Published on

கிழமை: புதன் கிழமை

தமிழ் வருடம்: விசுவாவசு

தமிழ் மாதம்: தை

நாள்: 7

ஆங்கில தேதி: 21

மாதம்: ஜனவரி

வருடம்: 2026

நட்சத்திரம்: இன்று பிற்பகல் 2-32 வரை அவிட்டம் பின்பு சதயம்

திதி: இன்று அதிகாலை 03-19 வரை துவிதியை பின்பு திரிதியை

யோகம்: மரண, சித்த யோகம்

நல்ல நேரம்: காலை 9-30 to 10-30

நல்ல நேரம்: மாலை 4-30 to 5-30

ராகு காலம்: மாலை 12-00 to 1-30

எமகண்டம்: காலை 7-30 to 9-00

குளிகை: காலை 10-30 to 12-00

கௌரி நல்ல நேரம்: காலை 10-30 to 11-30

கௌரி நல்ல நேரம்: மாலை 6-30 to 7-30

சூலம்: வடக்கு

சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம்

மேஷம்

ஆன்மீகச் சிந்தனை தங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். வெளிநாடு செல்லும் கனவு பலிக்கும். மாமியார் மருமகள் உறவு சிறப்பாக இருக்கும். திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு வேலை சுமை இருக்காது. தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

ரிஷபம்

வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். தொழில் முனைவோருக்கு வங்கி கடன் கிடைக்கும். குடும்ப தலைவிகளின் எண்ணம் பூர்த்தியாகும். பணவரவில் பஞ்சமில்லை. கணவரிடம் சற்று விட்டுக் கொடுப்பது நல்லது. கணவர் வீட்டார் உங்களை மதிப்பார்கள். தேக ஆரோக்கியம் சீர்படும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மிதுனம்

உத்யோகத்தில் உயர்வுண்டு. குடும்பத் தலைவிகள் சிக்கனம் செய்து சேமிக்க துவங்குவர். ஒரு சிலர் உயர் கல்வி கற்க வெளிநாட்டில் கல்வி கற்க வாய்ப்பு கிடைக்கும். ஒரு சிலரது பிள்ளைகள் பணம் அனுப்புவர். தம்பதிகளிடையே சலசலப்பு தோன்றும். இடுப்பில் வலி வந்து நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கடகம்

தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை அதாவது தங்கள் தொழில் சார்ந்தவர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் சந்திராஷ்டமம் என்பதால் சாதாரணமாக பேசும் வார்த்தைகள் கூட பிரச்சினையைத் தந்து நிரந்தரமாக பேசாமல் போக வாய்ய்புள்ளதால் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

சிம்மம்

அக்கம் பக்கத்து வீட்டாரிடம் நல் உறவு ஏற்படும். ஒரு சிலர் சுபகாரியங்களுக்காக வெளியூர் பயணம் மேற்கொள்வர். உறவினர்களை பார்க்கும் போது மனம் ரிலாக்ஸாக உணர்வீர்கள். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும். மாணவ மாணவிகளின் எண்ணங்கள் பூர்த்தியாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கன்னி

ஆன்மீகத்தில் மனம் நாடும். கோவில் திருப்பணிகளுக்கு அன்னதானத்திற்கு உதவுவீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் கிட்டும். மாணவர்கள் நன்கு படிப்பர். ஒரு சிலர் நீண்ட தூர பயணம் செல்வர். வீட்டில் இருந்து சம்பாதிப்பவர்களுக்கு ஆர்டர்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

துலாம்

குடும்பத் தலைவிகளின் கோரிக்கை நிறைவேறும். சிக்கனத்தை கடைபிடிப்பீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். அரசு உத்தியோகத்திற்காக காத்திருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். கணினி துறையில் உள்ளவர்களுக்கு அதிக சம்பள உயர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வான்நீலம்

விருச்சிகம்

சுய தொழில் செய்பவர்களுக்கு அதிக லாபம் கிட்டும். மாமியார் உடல் நலத்தில் கவனம் தேவை. மருத்துவ செலவுக்கு இடமுண்டு. மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர் பாராட்டுவர். தங்கள் தங்கை உறவு நல்லுறவாக அமையும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் நட்புறவு மேம்படும். தேக ஆரோக்கியம் சீராக செல்லும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

தனுசு

உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு அதிக வேலைச்சுமை இருக்கும். கணவரிடம் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். அவரும் உங்களை புரிந்து கொள்வார். கோவில் கும்பாபிஷேகம் என்று கலந்து கொள்வீர்கள். சித்தர்களின் ஆசி கிட்டும். கை கால்களில் வலி வந்து போகும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மகரம்

திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண தகவல் மையத்தில் பதிவு செய்வார்கள்.புதியவர்கள் நட்பு பாராட்டுவர். அவர்களிடம் கவனம் தேவை. வெளிநாட்டில் வேலை செய்யும் தங்கள் கணவர் தங்களுக்கு பரிசுகளை அனுப்புவார். பிள்ளைகளிடம் கொஞ்சம் அக்கறை தேவை. உடல் வலி வந்து போகும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கும்பம்

மனம் அமைதியை விரும்பும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உத்யோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் கூடும். ஒரு சிலர் குடும்ப வருமானத்தை பெருக்க கைத்தொழில் துவங்க ஆரம்பிப்பார்கள். இதுவரை இருந்த கணவர் வீட்டு பிரச்சனை இனி தீரும். சளி தொந்தரவுகள் வந்து நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மீனம்

குடும்ப தலைவிகளுக்கு எதிர்பார்த்த ஒரு செயல் நடந்திடும். எதிர் வீட்டுக்காரர்களிடம் கவனம் தேவை. மாமியார் மருமகள் உறவு சுமுகமாக செல்லும். பண வரவுக்கு குறைச்சல் இல்லை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com