

கிழமை: செவ்வாய்கிழமை
தமிழ் வருடம்: பரபாவ
தமிழ் மாதம்: சித்திரை
நாள்: 8
ஆங்கில தேதி: 21
மாதம்: ஏப்ரல்
வருடம்: 2026
நட்சத்திரம்: இன்று காலை 06-15 வரை ரோகிணி பின்பு மிருகசீரிஷம்
திதி: இன்று காலை 08-47 வரை சதுர்த்தி பின்பு பஞ்சமி
யோகம்: அமிர்த, சித்த யோகம்
நல்ல நேரம்: காலை 07-30 to 08-00
நல்ல நேரம்: மாலை 4-30 to 5-30
ராகு காலம்: பிற்பகல் 3-00 to 4-30
எமகண்டம்: காலை 9-00 to 10-30
குளிகை: காலை 12-00 to 1-30
கௌரி நல்ல நேரம்: காலை 10-30 to 11-30
கௌரி நல்ல நேரம்: மாலை 7-30 to 8-30
சூலம்: வடக்கு
சந்திராஷ்டமம்: விசாகம்
மேஷம்
பெண்களுக்கு ஆடை, ஆபரணம் சேரும். உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரத்தில் சில புதிய வகையான மாற்றம் செய்வீர்கள். கூட்டு சில சமயம் முன்கோபம் வந்து போகும். பணப்பிரச்சினை நீங்கும். பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
ரிஷபம்
உத்யோகத்தில் சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். வியாபாரிகளுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பர். குடும்பத் தலைவிகளின் தேவை நிறைவேறும். புதிய நண்பர்கள் கிடைப்பர். கொழுப்பு தொல்லை இருப்பவர்களுக்கு நொறுக்கு தீணிகளை சாப்பிடாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் பிரச்சினை இல்லை.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
மிதுனம்
பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். எதிரிகள் விலகிப் போவர். தக்க சமயத்தில் நண்பர்கள் உதவுவர். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு குறைவாக இருக்கும். வாகனம் ஓட்டும் போது கவனமுடன் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
கடகம்
பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். அதிக விற்பனைக்காக வியாபாரத்தை துவங்க புது கிளையை புது இடத்திற்கு கடையை துவங்குவீர்கள். பணப் பிரச்சினை இருக்காது. இரு சக்கர வாகனம் ஓட்டும் போது வேகத்தை குறைப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
சிம்மம்
வியாபாரிகள் வெளியூர் பயணம் செல்வர். உத்யோகத்தில் வேலை பளு அதிகம் இருக்கும். வீட்டுச் சுபகாரியத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க திட்டமிடுவீர்கள். பேச்சாளர்கள் தங்களுடைய அறிவை மற்ற இடங்களிலும் பரப்ப வேற்று மொழியினைக் கற்க துவங்குவீர்கள். பெண்களுக்கு நல்ல வரண் கிட்டும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
கன்னி
தம்பதிகளிடத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் வரும். கண் பிரச்சினை தோன்றும். ஒரு முறை மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கலைஞர்கள் தங்கள் படங்களில் வெற்றி காண்பார்கள். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
துலாம்
இரவு நேர பயணத்தை தவிர்க்கவும். அப்படி அத்தியாவசியமானால், இரு சக்கர வாகனத்தை விட நான்கு சக்கர வாகனத்தில் பயணிப்பது நல்லது. பெண்களுக்கு வேலை பளு அதிகம் இருக்கும். தொழில் அதிபர்கள் தம்பதிகள் தங்கள் வருவாயினை பெருக்க திட்டமிடுவர். தேகம் பளிச்சிடும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
விருச்சிகம்
இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
தனுசு
சுய தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும். வீட்டு பிராணிகளை வளர்க்க ஆர்வம் கொள்வீர். அரசியல்வாதிகள் மக்களிடம் பேராதரவை பெறுவர். பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் தங்கள் பிள்ளைகளுக்கு நன்மதிப்பெண்கள் எடுப்பர். உடல் நிலை மேம்படும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
மகரம்
புதிய வியாபாரத்தில் முதலீடு செய்வீர்கள். செலவுகள் அதிகரிக்கும். அத்தியாவசிய தேவையா என உணர்ந்து செலவினை மேற்கொள்ளுங்கள். உத்யோகத்தில் நிர்வாகத்தில் உள்ளவர்கள் தங்கள் திறமை பளிச்சிடும். தங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும். நட்பால் ஆதாயம் உண்டு. முகத் தோற்றம் பளிச்சிடும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
கும்பம்
வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும். பெண்கள் தங்கள் குடும்ப விசயத்தை வெளியிடாமல் இருப்பது நல்லது. அவர்களால் ஆறுதலடைவீர்கள்.ஆரோக்கியம் நன்கு இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்
மீனம்
குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். மணமாகாதவர்களுக்கு எதிர்பார்த்தவாரே துணை தேடி வரும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் அதிகாரியின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். தங்கள் காதலை வெளிப்படுத்த ஏற்ற காலம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை