பொருளாதாரத்தில் படிப்படியான வளர்ச்சி ஏற்படும்! இன்றைய ராசிபலன் - நவம்பர் 22, 2026

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
பொருளாதாரத்தில் படிப்படியான வளர்ச்சி ஏற்படும்! இன்றைய ராசிபலன் - நவம்பர் 22, 2026
Published on: 

இன்றைய பஞ்சாங்கம்:-

ஆங்கில தேதி: நவம்பர் 22

கிழமை: ஞாயிற்றுக்கிழமை

தமிழ் வருடம்: பராபவ ஆண்டு

தமிழ் மாதம்: கார்த்திகை

தமிழ் தேதி: 6

நட்சத்திரம்: அதிகாலை 3.59 வரை ரேவதி பின்னர் அசுவினி

திதி: அதிகாலை 2.37 வரை துவாதசி பின்னர் திரயோதசி

யோகம்: சித்த யோகம்.

நல்ல நேரம்: காலை 7.45 – 8.45

நல்ல நேரம்: மாலை 3.15 – 4.15

ராகு காலம்: மாலை 4.30 – 6.30

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மாலை 3.00– 4.30

கௌரி நல்ல நேரம்:

காலை 10.45 – 11.45

மதியம் 1.30 – 2.30

சூலம்: மேற்கு.

சந்திராஷ்டமம்: அஸ்தம்.

இன்றைய ராசிபலன்:-

மேஷம்

உங்களுடைய உழைப்பை மற்றவர்கள் உணர்ந்து பாராட்டும் தருணம் அமையும். தொழில் சார்ந்த முடிவுகளில் அனுபவம் கை கொடுக்கும். அலுவலகத்தில் நிலுவையில் இருந்த வேலைகளை முடிப்பீர்கள். வியாபாரத்தில் லாபத்தை உயர்த்துவதற்கான புதிய வழிமுறைகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபச் செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளின் முன்னேற்றம் மனதிற்கு மகிழ்ச்சி தரும். உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பெண்களுக்கு வீட்டை நிர்வகிப்பதில் திருப்தி ஏற்படும். மாணவர்கள் நினைவாற்றலை மேம்படுத்திக் கொள்வார்கள். உடல்நலத்தில் அலட்சியம் வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளி நிறம்.

ரிஷபம்

நீங்கள் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைகள் சாதகமான முடிவை நோக்கிச் செல்லும். புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் தைரியம் பிறக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றத்திற்கான தகவல் கிடைக்கலாம். வியாபாரத்தில் கூட்டுத் தொழில் தொடர்பான ஆலோசனைகள் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு முக்கியமான முடிவெடுக்க உதவும். வருமானத்தைப் பெருக்குவதற்கான வழிகளை ஆராய்வீர்கள். கலைத்துறையினர் புதிய படைப்புகளில் ஈடுபடுவார்கள். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான வழிகாட்டுதல் கிடைக்கும். உடல் சோர்வைத் தவிர்க்க ஓய்வெடுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் நிறம்.

மிதுனம்

உங்களுடைய பொறுப்புகளைச் சரியான நேரத்தில் நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாட்களாகத் தாமதமான ஒரு காரியம் மீண்டும் வேகம் பெறும். உத்தியோகத்தில் நிர்வாகத்தின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதற்கு முன்பு ஆலோசனை பெறுவது நல்லது. குடும்பத்தில் அமைதியும் ஒற்றுமையும் அதிகரிக்கும். சொத்து சம்பந்தமான பேச்சுகள் முன்னேற்றம் காணும். பொருளாதாரத்தில் படிப்படியான வளர்ச்சி ஏற்படும். பெண்களுக்கு புதிய திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்க ஆர்வம் காட்டுவார்கள். உணவு மற்றும் ஓய்வில் கவனம் செலுத்துங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்.

கடகம்

உங்களுடைய சிந்தனைகளுக்கு நடைமுறை வடிவம் கொடுக்கும் நாள். புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமையான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் உங்களுடைய ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்படும். வியாபாரத்தில் விளம்பர முயற்சிகள் நல்ல பலன் அளிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சந்திப்பு ஏற்படலாம். நண்பர்களின் உதவியால் புதிய வாய்ப்பு உருவாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கலைஞர்களுக்கு தங்களுடைய படைப்புகளை அறிமுகப்படுத்தும் சந்தர்ப்பம் கிடைக்கும். மாணவர்கள் ஆராய்ச்சிப் பணிகளில் ஆர்வம் காட்டுவார்கள். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்.

சிம்மம்

உங்களுடைய மனதில் இருந்த தயக்கங்கள் விலகி புதிய நம்பிக்கை உருவாகும். எதிர்பார்த்த ஒரு தகவல் மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகத்தில் உங்களுடைய பணிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு மீண்டும் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் தொடர்பான ஆலோசனைகள் நடைபெறும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு அமையும். பணவரவு இருந்தாலும் குடும்பத் தேவைகளுக்காகச் செலவிடுவீர்கள். இல்லத்தரசிகளுக்கு மனநிறைவு தரும் நாள். மாணவர்கள் புதிய இலக்குகளை அமைத்துச் செயல்படுவார்கள். உடல்நலத்தில் கவனமாக இருங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்.

கன்னி

இன்று சந்திராஷ்டமம் என்பதால் எந்த விஷயத்திலும் அவசரமாக முடிவெடுக்காமல் சற்று யோசித்து செயல்படுங்கள். பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். முக்கிய ஆவணங்களை சரிபார்த்து கையாள்வது அவசியம். தொழிலில் புதிய முதலீடு தொடர்பான முடிவுகளை தள்ளிப்போடுவது நல்லது. வியாபாரத்தில் வரவு தாமதமானாலும் நிலைமை கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத செலவு ஒன்று வரலாம். பணத்தை பிறருக்காக செலவிடும் முன் உங்கள் தேவைகளை கவனியுங்கள். குடும்பத்தில் ஒருவரின் பேச்சை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். தம்பதியரிடையே சிறிய கருத்து வேறுபாடு வந்தாலும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். பயணத்தில் கூடுதல் கவனம் தேவை. மாணவர்கள் மனதை அமைதிப்படுத்தி படித்தால் நல்ல பலன் கிடைக்கும். இறை வழிபாடு மனதிற்கு நிம்மதி தரும்.

அதிர்ஷ்ட நிறம்: செவ்வரளி நிறம்.

துலாம்

சவாலான சூழ்நிலைகளையும் சாதுரியமாகச் சமாளிப்பீர்கள். உங்களுடைய நீண்டகால இலக்கை நோக்கி முன்னேறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் முக்கியமான விவாதங்களில் பங்கேற்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கலாம். குடும்பத்தில் மூத்தவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பணப்புழக்கம் அதிகரித்தாலும் சேமிப்பில் கவனம் செலுத்துங்கள். பழைய நண்பர் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். பெண்களுக்கு மனதில் இருந்த ஒரு விருப்பம் நிறைவேறும். மாணவர்கள் விடாமுயற்சியுடன் செயல்படுவார்கள். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்.

விருச்சிகம்

முக்கியமான பணிகளை வரிசைப்படுத்திச் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் செயல்திறன் கவனிக்கப்படும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை வசூலிப்பதில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்திற்காகச் செய்யும் முயற்சிகள் பாராட்டைப் பெற்றுத் தரும். பணம் தொடர்பான ஆவணங்களைச் சரிபார்த்த பிறகே கையெழுத்திடவும். நண்பர்களின் சந்திப்பு உற்சாகம் அளிக்கும். இல்லத்தரசிகளுக்கு குடும்பப் பொறுப்புகள் அதிகரித்தாலும் சமாளிப்பார்கள். மாணவர்கள் புதிய பயிற்சிகளில் ஈடுபடுவார்கள். பயணங்களின்போது அவசரத்தைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: இளநீலம்.

தனுசு

உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கக்கூடிய நாள். முக்கியமான நபர்களின் அறிமுகம் புதிய முயற்சிகளுக்கு அடித்தளமாக அமையும். உத்தியோகத்தில் திறமையான செயல்பாட்டின் மூலம் முன்னுரிமை பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய பொருட்களை அறிமுகப்படுத்துவதற்கான திட்டம் உருவாகும். குடும்பத்தில் உங்கள் விருப்பத்திற்கு ஆதரவு கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் தென்படும். நண்பர்களுடன் இணைந்து செயல்படும் வாய்ப்பு உருவாகும். கலைஞர்களுக்கு மேடை வாய்ப்புகள் கிடைக்கலாம். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் தேர்வுகளை எதிர்கொள்வார்கள். கோபத்தைக் கட்டுப்படுத்துவது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்.

மகரம்

மனதில் இருந்த குழப்பங்கள் விலகி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் பற்றிய ஆலோசனைகள் நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் தொடர்பு கொள்வார்கள். பணப் பரிவர்த்தனைகளில் கவனமாகச் செயல்படுவது அவசியம். உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் குறையும். இல்லத்தரசிகளின் முயற்சிகள் குடும்பத்தினரால் பாராட்டப்படும். மாணவர்களுக்கு நினைவாற்றலும் கற்றல் ஆர்வமும் அதிகரிக்கும். தூக்கத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

கும்பம்

சாதாரணமாகத் தோன்றும் ஒரு சந்திப்பு முக்கியமான வாய்ப்பாக மாறலாம். உத்தியோகத்தில் உங்களுடைய கருத்துகளை முன்வைப்பதற்கு நல்ல சூழல் அமையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களுடன் தொடர்பு ஏற்படும். குடும்பத்தில் நீண்ட நாட்களாகப் பேசப்படாத ஒரு விஷயம் மீண்டும் விவாதத்திற்கு வரலாம். பணவரவு சீராக இருக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். வெளியூர் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் காண்பீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். மாணவர்கள் ஆசிரியர்களின் பாராட்டைப் பெறுவார்கள். மன அழுத்தத்தைத் தவிர்த்து செயல்படுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்.

மீனம்

உங்களுடைய எதிர்காலத்தைப் பற்றிய சில முக்கியமான தீர்மானங்களை எடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் நிகழ்வு நடைபெறலாம். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய விற்பனை வாயில்கள் திறக்கப்படும். எதிர்பாராமல் கிடைக்கும் பணவரவு சேமிப்பை உயர்த்த உதவும். வீடு, வாகனம் தொடர்பான எண்ணங்கள் நிறைவேறுவதற்கான முயற்சிகள் தொடங்கும். இல்லத்தரசிகளுக்கு மனநிறைவு தரும் செய்திகள் கிடைக்கும். மாணவர்கள் தங்களுடைய திறமையை நிரூபிப்பார்கள். உறவுகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம் நிறம்.

X