இன்றைய ராசிபலன் (23.02.2026) : பெரியவர்களின் ஆசி கிட்டும் நாள்..!

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
இன்றைய ராசிபலன் (23.02.2026) :  பெரியவர்களின் ஆசி கிட்டும் நாள்..!
Published on

பிப்ரவரி 23

கிழமை திங்கட் கிழமை

தமிழ் வருடம் விசுவாவசு

தமிழ் மாதம் மாசி

நா ள் 11

ஆங்கில தேதி 23

மாதம் பிப்ரவரி

வருடம் 2026

நட்சத்திரம் இன்று மாலை 05-25 வரை பரணி பின்பு கிருத்திகை

திதி இன்று காலை 10-08 வரை சஷ்டி பின்பு சப்தமி

யோகம் சித்த, மரண யோகம்

நல்ல நேரம் காலை 6-30 to 7-30

நல்ல நேரம் மாலை 4-30 to 5-30

ராகு காலம் மாலை 7-30 to 9-00

எமகண்டம் காலை 10-30 to 12-00

குளிகை காலை 1-30 to 3-00

கௌரி நல்ல நேரம் காலை 09-30 to 10-30

கௌரி நல்ல நேரம் மாலை 7-30 to 8-30

சூலம் கிழக்கு

சந்திராஷ்டமம் : அஸ்தம், சித்திரை

இன்றைய ராசிபலன்:-

மேஷம்

வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அரசாங்கத்தால் உதவி கிடைக்கும். பழையக் கடனை தீர்ப்பீர்கள். இன்று முக்கியமான காரியங்களை முடிக்கும் நாளாக அமையும். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துபோவது நல்லது. பணப்புழக்கம் அதிகரிக்கும். தேகம் மினுமினுக்கும்.

அதிர்ஷ்ட நிறம் பொன்நிறம்

ரிஷபம்

கணவர் வீட்டில் குடும்பத்தலைவிகளின் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வியாபாரிகளிடையே இருந்த போட்டிகள் விலகும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். காதலர்கள் சிந்திப்பது நல்லது. மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் கொள்வர். விருந்து, விழா என்று சென்று வருவீர்கள். தம்பதிகளிடையே அன்யோன்யம் கூடும்.

அதிர்ஷ்ட நிறம் பச்சை

மிதுனம்

நண்பர்கள் மூலம் நற்செய்தி கிடைக்கும். அவர்கள் தங்களுக்கு ஆதரவு தருவார்கள். தம்பதிகளிடையே வாக்குவாதம் ஏற்படும். பின்பு சமரசமாவர். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்களின் வருகை உண்டாகும். மார்கெட்டிங் பிரிவினர்களால் அதிக ஆர்டர்கள் கிடைக்கும். உடல் நலம் சிறப்பாகும்.

அதிர்ஷ்ட நிறம் இளஞ்சிவப்பு

கடகம்

உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகள் தங்களுக்கு சாதகமாக இருப்பார் புதிய வாடிக்கையாளர்களால் தங்கள் வியாபாரத்தை விளம்பரம் செய்வார்கள். அவர்களால் விற்பனை கூடும். வெளியிடங்களில் செல்லும் போது தங்கள் உடைமைகளை பாதுகாத்துக் கொள்வது நல்லது. வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் கருநீலம்

சிம்மம்

புரிந்து கொள்ளாமல் பிரிந்த நண்பர்கள் இனி கை கோர்ப்பர். சகோதர வழி உறவு மேம்படும். வியாபாரம் செழிப்பாக இருக்கும். குடும்பத்துடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வேலையாட்களை மாற்றம் செய்வீர்கள். புதிய வேலையாட்களால் நன்மைகள் உண்டு. குல தெய்வ வழிபாடு செய்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை

கன்னி

இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. காரணம் அந்த பயணங்களால் சிறு சிறு விபத்துகள் அல்லது காரியத் தடை ஏற்படலாம். ஆதலால், இதனால் நேரமும் பணவிரையமும் ஏற்படும். ஆதலால், இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் சாம்பல்

துலாம்

சென்ற இடத்தில் பொருட்களை கவனமுடன் கையாளவும். சிறு விபத்துகள் ஏற்படலாம். ஆதலால், வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. அரசு டெண்டர்களில் தங்களுக்கு சாதகமாக முடியும். உத்யோகஸ்தர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். பிள்ளைகள் பெற்றோரை மதிப்பர். வழக்கு சாதகமாக முடியும்.

அதிர்ஷ்ட நிறம் சிவப்பு

விருச்சிகம்

தந்தைவழியில் ஆதரவுப் பெருகும். திருமணப் பேச்சு வார்த்தையை துவங்குவீர்கள். பெண்பிள்ளைகள் பெற்றோரை மதிப்பர். ஞாபக மறதி உண்டாகும். உதாரணமாக தொலைபேசியை சார்ஜில் போட்டு மறந்து விடுவது. பொருட்களை சென்ற இடத்தில் வைத்துவிட்டு வருவது போன்றவை நிகழும். உடல் நலம் சிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம் சிவப்பு

தனுசு

உத்யோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். நினைத்த காரியம் இனிதே நிறைவேறும். வழக்கில் புதிய திருப்பம் உண்டாகும். அதுவும் சாதகமாக முடியும். கலைஞர்களுக்கு முன் பணம் கிடைக்கும். பெரியவர்களின் ஆலோசனையை ஏற்று நடக்கவும். உடல் நலத்தில் சற்று சோர்வு ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை

மகரம்

தொழிலில் புதுமையை புகுத்துவீர்கள். வரவு செலவு கணக்கு சரிபார்க்கவும். அரசு உத்யோகஸ்தர்களுக்கு கூடுதல் வருவாய் உண்டு. மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். திருமணப் பேச்சு வார்த்தையை துவங்குவீர்கள். காதல் கசக்கும். அறுவை சிகிச்சையின்றி மருந்து மாத்திரைகளிலேயே உடல் நலம் தேறும்.

அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்

கும்பம்

வேலை இல்லாதவர்களுக்கு சற்றுத் தாமதத்துடன் வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் சலுகை கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். சுப காரிய பேச்சு வார்த்தையை துவங்குவீர்கள். இணைய தளம் மூலம் வேலையை முடிப்பீர்கள். எதிர்பார்த்த தொகை வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம் பச்சை

மீனம்

புதுமுக நண்பர்களுடன் தொடர்பு அதிகரிக்கும். யாரையும் நம்ப வேண்டாம். வழக்கு சாதகமாகும். வீட்டு உணவை உட்கொள்வது நல்லது. மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். பிரபலங்கள் நண்பராவர். அவர்களால் பெரிய உதவிகள் கிடைக்கும். பெரியவர்களின் ஆசி கிட்டும். வேலைகள் தள்ளிப் போகும். உடலில் அசதி தோன்றும்.

அதிர்ஷ்ட நிறம் ஊதா

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com