இன்றைய ராசிபலன் (27.02.2026): பண வரவு அதிகரிக்கும் நாள்..!

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
இன்றைய ராசிபலன் (27.02.2026): பண வரவு அதிகரிக்கும் நாள்..!
Published on

இன்றைய பஞ்சாங்கம்:-

கிழமை: வெள்ளிக் கிழமை

தமிழ் வருடம்: விசுவாவசு

தமிழ் மாதம்: மாசி

நாள்: 15

ஆங்கில தேதி: 27

மாதம்: பிப்ரவரி

வருடம்: 2026

நட்சத்திரம்: இன்று காலை 11-05 வரை திருவாதிரை பின்பு புனர்பூசம்

திதி: இன்று அதிகாலை 12-54 வரை தசமி, இரவு 10-50 வரை ஏகாதசி, பின்பு துவாதசி

யோகம்: சித்த யோகம்

நல்ல நேரம்: காலை 9-30 to 10-30

நல்ல நேரம்: மாலை 4-30 to 5-30

ராகு காலம்: காலை 10-30 to 12-00

எமகண்டம்: மாலை 3-00 to 4-30

குளிகை: காலை 07-30 to 09-00

கௌரி நல்ல நேரம்: காலை 12-30 to 1-30

கௌரி நல்ல நேரம்: மாலை 6-30 to 7-30

சூலம்: மேற்கு

சந்திராஷ்டமம்: கேட்டை

இன்றைய ராசிபலன்:-

மேஷம்

இன்று புத்துணர்ச்சியுடன் நாளை ஆரம்பிப்பர். நீண்ட கால முயற்சிகள் வெற்றிபெறும். உத்யோகத்தில் நிலுவை தொகை கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் மிகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். காதலர்களின் விருப்பத்திற்கு பெற்றோர் சம்மதிப்பர். தேக ஆரோக்கியம் சிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

ரிஷபம்

பண வரவு அதிகரிக்கும். நண்பர்கள் வட்டாரம் பெருகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தம்பதிகள் மீண்டும் இணைவர். காதலில் வெற்றி உண்டு. மார்கெட்டிங் பிரிவினர் புதுப் புது ஆர்டர்கள் பெற சற்று கூடுதல் அலைச்சல் தேவை. சமூக ஆர்வலர்கள் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மிதுனம்

குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். தங்கள் பிள்ளைகள் பொறுப்பினை உணர்வர். வெளிநாட்டு நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் மனம் திருந்துவார். திருமண விசேஷங்களுக்கு சென்று வருவீர்கள். மாணவர்கள் நன்கு படிப்பர். விளையாட்டிலும் ஜெயிப்பர்.

அதிர்ஷ்ட நிறம்: வான்நீலம்

கடகம்

சில்லரை வியாபாரிகளுக்கு நல்ல லாபம் காண்பர். வியாபாரிகள் எதிர்பார்த்த வாடிக்கையாளர்களை பெறுவர். வெளியூர் பயணத்திற்கு ஆயத்தமாவீர்கள். எதிரிகளின் தொல்லைகள் அகலும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் குவியும். மாணவர்கள் பிடித்த துறையை தேர்ந்தெடுப்பர்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

சிம்மம்

உத்யோகத்தில் உள்ளவர்கள் விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். வருமானம் உயரும். வசதி, வாய்ப்புகள் பெருகும். பழைய வாகனத்தை விற்கும் எண்ணம் தோன்றும். அதன்படி புதிய வாகனத்தை பதிவு செய்வீர்கள். முன்கோபம் வரும். ஆதலால், தியானம் மேற்கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

கன்னி

விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும். சொந்த வீட்டுக் கனவு பலிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் திருஷ்டி விலகும். கலைஞர்களுக்கு முன் பணம் கிடைக்கும். பட விநியோகஸ்தர்கள் கிடைப்பர். ஆன்மீக சிந்தனை மேலோங்கும். காதல் விவகாரத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை

துலாம்

அலுவலகத்தில் இருந்த பிரச்சினை முடிவுக்கு வரும். நினைத்த இடத்தில் இடம் வாங்குவர். காதல் கசக்கும். தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். பொழுது போக்கிற்காக வெளியிடங்களுக்கு சென்று வருவர். மாணவர்கள் பகுதி நேரத்தில் அன்னிய மொழியை கற்பர்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

விருச்சிகம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

தனுசு

இன்று வியாபாரத்தில் நினைத்த லாபம் கிடைக்கும். கடன் சுமை குறையும். தம்பதிகளிடையே சின்ன வாக்குவாதம் வந்து போகும். பழைய நண்பர்கள் உதவி செய்வர். உத்யோகத்தில் சம்பள உயர்வு கிடைக்கும். காதல் மலரும். பங்குச் சந்தை லாபம் தரும். சைனஸ் தொந்தரவு வரும். கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

மகரம்

குடும்பத் தலைவிகளின் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி குவிப்பர். வேலையாட்களிடம் கோபம் வேண்டாம். நடைபாதை வியாபாரிகளின் கோரிக்கை நிறைவேறும். வியாபாரம் சூடு பிடிக்கும். பயணங்கள் அதிகரிக்கும். உறவினர்களை பார்த்து மகிழ்வீரகள். உடல் நலம் சிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கும்பம்

வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். எதிர்வீட்டுக்காரர்களுடன் இருந்த பகைமை நீங்கும். கோயில் விழாக்களில் மரியாதை கிடைக்கும். வெளியூர் செய்தி மகிழ்ச்சியைத் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

மீனம்

குடும்பத்தில் இருந்த பிரச்சினை சமாதானமாகும். தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும். அதேபோல் லாபமும் உயரும். யாருக்கும் பூர்வீக சொத்தில் இருந்து வந்த வில்லங்கம், தடைகள் நீங்கும். மார்கெட்டிங் பிரிவினர்களின் இலக்கு பூர்த்தியடையும். அரசு உத்யோகஸ்தர்களுக்கு விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com