ராசிபலன் (29.11.2025): காதலர்களுக்கு மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள்..!

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
ராசிபலன் (29.11.2025): காதலர்களுக்கு மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள்..!
Published on

கிழமை: சனிக்கிழமை

தமிழ் வருடம்: விசுவாவசு

தமிழ் மாதம்: கார்த்திகை

நாள்: 13

ஆங்கில தேதி: 29

மாதம்: நவம்பர்

வருடம்: 2025

நட்சத்திரம்: இன்று இரவு 10-07 வரை பூரட்டாதி பின்பு உத்திரட்டாதி

திதி: இன்று மாலை 06-03 வரை நவமி பின்பு தசமி

யோகம்: மரண, சித்த யோகம்

நல்ல நேரம்: காலை 8-00 to 9-00

நல்ல நேரம்: மாலை 4-45 to 5-45

ராகு காலம்: காலை 9-00 to 10-30

எமகண்டம்: மாலை 1-30 to 3-00

குளிகை: காலை 6-00 to 7-30

கௌரி நல்ல நேரம்: காலை 10-45 to 11-45

கௌரி நல்ல நேரம்: மாலை 9-30 to 10-30

சூலம்: கிழக்கு

சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்

மேஷம்

பணவரவு கூடும். உறவினரிடையே இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். பணியாளர்களின் நேர்மையைக் கண்டு நிர்வாகம் உயர் பதவியைத் தரும். காதலர்கள் திருமணத்துக்கு தயாராவர். உறவினர்கள் வந்து போவர். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நிறம்

ரிசபம்

விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் உண்டாகும். பெற்றோர்களது உடல் நலனை கவனிப்பது நல்லது. காதலர்களுக்கு மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும். கலைஞர்களுக்கு கற்பனைத் திறன் அதிகரிக்கும். நண்பர்களிடையே புரிதல் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் முதல் இடத்தை பிடிப்பர்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மிதுனம்

வாங்கிய கடனில் ஒரு பகுதிக் கடனை அடைத்து விடுவீர்கள். தாயுடன் இணக்கமுடன் இருந்தால் தங்களுக்கு நன்மை செய்வார். காதலர்களின் அன்பு பலப்படும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தேக ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

கடகம்

தொழிலில் அதிகமான பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். பொறுமை அவசியம். நெருங்கிய நண்பர்கள் தங்களிடம் கொண்டிருந்த மனக்கசப்பு நீங்கி நட்பு பாராட்டுவார்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு உதவுவர். தங்கள் துணையிடம் பெண்கள் விட்டுக் கொடுத்து போவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

சிம்மம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இன்று முக்கியமான விசயமாக இருந்தால் மட்டும் பயணம் மேற்கொள்ளளாம்.புதிய முயற்சிகள் வேண்டாம். இன்று இறைவனை பிரார்த்தித்து கொள்வது நல்லது. யாரிடமும் வாக்குவாதம் செய்வது தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கன்னி

வெளிநபருக்கு உதவி செய்து பின்பு வருந்துவதை தவிர்க்கவும். பங்குச்சந்தையில் லாபம் கிடைக்கும். திடீர் பயணம் உற்சாகம் தரும். விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வம் அதிகரித்து மேல் படிப்பிற்காக முயற்சி எடுப்பர்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

துலாம்

பழைய நண்பர்கள் தேடி வந்து உதவி புரிவர். பெண்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளில் மகிழ்வார்கள். இது நாள் வரை ஏமாற்றிக் கொண்டிருந்த நபர் உங்களிடம் கையும் களவுமாக சிக்கி விடுவார். விவசாயிகளுக்கு அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

விருச்சிகம்

பணம் நாலாபக்கமும் வந்து சேரும். கலைஞர்களின் கனவு நனவாகும். வெளி நபர்களிடம் எச்சரிக்கைத் தேவை. எதிர்பாராத செலவு உண்டாகும். தம்பதிகளிடையே சண்டை வராமல் தடுக்க வாய் வார்த்தைகளை குறைப்பது நல்லது. வியாபாரிகள் கடின உழைப்பில் அதிக லாபம் ஈட்டுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

தனுசு

வரவேண்டிய பணம் வந்து சேரும். சகோதர்ர்கள் உதவுவர். குடும்பத் தலைவிகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தம்பதிகளிடையே அன்பு குறையாது. தெரியாத தொழிலில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் ஆசிரியரிடம் நன்மதிப்பைப் பெறுவர்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மகரம்

நட்புகளால் நன்மை உண்டாகும். எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். கலைஞர்களுக்கு புதிய பட ஒப்பந்தம் கையெழுத்தாகும். சிலர் வீடு, மனை வாங்கும் முயற்சியில் ஈடுபடுவர். செய்யும் தொழிலில் செழிப்பு உண்டாகும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கும்பம்

உத்தியோகஸ்தர்களுக்கு நிர்வாக பொறுப்புகள் கூடும். வாங்கிய கடனை அடைத்து இன்புறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் மகிழ்ச்சி தரும். மாணவர்கள் திட்டமிட்டு படிப்பர். பண உதவி கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். அதனால் நல்ல மாற்றங்கள் நிகழும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

மீனம்

திடீர் பணவரவு உற்சாகத்தை தரும். வீடு கட்ட கடன் வசதி கிடைக்கும். விற்பனையாளர்கள் சாதுர்யமாகப் பேசி விற்பனையைக் கூட்டுவர். குடும்பத்தில் வெளிநபரின் தலையீடு வேண்டாம். வியாபாரத்தில் தங்கள் மனைவி ஒத்துழைப்பார். தேகம் பளிச்சிடும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com