இன்றைய ராசிபலன் (30.11.2025): சுபநிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தேறும் நாள்..!

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
இன்றைய ராசிபலன் (30.11.2025): சுபநிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தேறும் நாள்..!
Published on

கிழமை: ஞாயிறு கிழமை

தமிழ் வருடம்: விசுவாவசு

தமிழ் மாதம்: கார்த்திகை

நாள்: 14

ஆங்கில தேதி: 30

மாதம்: நவம்பர்

வருடம்: 2025

நட்சத்திரம்: இன்று இரவு 09-08 வரை உத்திரட்டாதி பின்பு ரேவதி

திதி: இன்று மாலை 04-28 வரை தசமி பின்பு ஏகாதசி

யோகம்: அமிர்த யோகம்

நல்ல நேரம்: காலை 06-00 to 07-00

நல்ல நேரம்: மாலை 03-15 to 4-15

ராகு காலம்: மாலை 04-30 to 6-00

எமகண்டம்: மாலை 12-00 to 1-30

குளிகை: மாலை 03-00 to 4-30

கௌரி நல்ல நேரம்: காலை 10-45 to 11-45

கௌரி நல்ல நேரம்: மாலை 1-30 to 2-30

சூலம்: மேற்கு

சந்திராஷ்டமம்: மகம், பூரம்

மேஷம்

உறவினர்கள் வருகையால் வீடு களைகட்டும். எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. மாணவர்களின் எண்ணம் ஈடேறும்.பெண்களின் கனவு பலிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

ரிஷபம்

அலுவலகத்தில் நன்மதிப்பும் பதவி உயர்வும் கிட்டும். பெண்கள் வீட்டின் பெரியவர்களின் ஆலோசனையை ஏற்பது நல்லது. அது தங்களுக்கு சில முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உதவிகரமாக அமையும். உடல் நலத்தில் கவனம் செலுத்தக்கூடும். மருத்துவ செலவு உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மிதுனம்

வழக்கு தள்ளி போகும். தள்ளி போன சுபகாரியம் நடந்தேறும். தம்பதிகளின் கனவு நனவாகும். உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிட்டும். வெளியூர் பயணங்கள் நன்மையைத் தரும். பணம் தாராளமாக வரும். அத்தியாவசிய தேவை நிறைவேறும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரே

கடகம்

நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். பாதியில் முடங்கிக் கிடந்த கட்டிடம் மற்றும் வீடு கட்டும் பணி முழுமையடையும். உத்யோகஸ்தர்களுக்கு நல்ல பொறுப்பு கிடைக்கும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு தங்களின் திருமண கனவு நிறைவேறும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

சிம்மம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இன்று முக்கியமான விசயமாக இருந்தால் மட்டும் பயணம் மேற்கொள்ளளாம்.புதிய முயற்சிகள் வேண்டாம். இன்று இறைவனை பிரார்த்தித்து கொள்வது நல்லது. யாரிடமும் வாக்குவாதம் செய்வது தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கன்னி

மூத்த சகோதரி வகையில் உதவிகள் உண்டு. மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு ஊக்கத்தொகை கிடைக்கும். காதல் கசக்கும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவர். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு பிடித்த வரன் அமையும்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

துலாம்

தங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். திருமண முயற்சிகள் வெற்றி தரும். பெரும் தொகை கைக்கு கிடைக்கும். வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு தாங்கள் விரும்பிய நாட்டிற்கு செல்ல அனுமதி கிடைக்கும். பெற்றோர் தங்கள் மனநிலைக்கேற்ப ஒத்துழைப்பர்.

அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை

விருச்சிகம்

உத்யோகஸ்தர்கள் தங்கள் கடமையைச் செய்வர். பெண்களின் சேமிப்புஉயரும். கணவரின் அன்புக்குரியவராக விளங்குவர். சுபநிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தேறும்- பொது சேவையில் உள்ளவர்களுக்கு மக்கள் ஆதரவு கிட்டும். புதிய தொழிலில் ஆர்வம் கூடும். பணம் நாலாப்பக்கம் வரும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

தனுசு

ஆன்மீகப் பணிகள் சிறக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சலுகைகள் கிடைக்கும். பொதுத் துறையில் இருப்பவருக்கு தங்கள் சொல்லிற்கு மதிப்புக் கூடும். தீர்க்க யாத்திரை செல்வதற்கு திட்டமிடுவர். வியாபாரத்திற்கு வங்கிக்கடன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மகரம்

உறவினர்களால் நன்மை உண்டாகும். தம்பதிகள் விட்டுக் கொடுப்பர். வியாபாரம் செழிப்படையும். வேலைக்கு செல்பவர்களுக்கு உத்யோகத்தில் வேலை பளு குறையும். ஆரோக்கியம் மேம்படும். வாகனம் புதிதாக வாங்குவீர்கள். அண்டை வீட்டாரிடம் நட்பு பலப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரே

கும்பம்

அலுவலகத்தில் சக ஊழியர்கள் உதவுவர். வியாபாரிகள் அதிக லாபம் ஈட்ட கூடுதல் முயற்சி அவசியம். ஆரோக்கியம் மேம்படும். தம்பதிகளிடத்தில் நல்ல புரிதல் உண்டாகும். அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சிக்கனம் தேவை. பெண்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

மீனம்

உறவினர் உதவுவர். கையிருப்பு அதிகரிக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழில் சிறப்படையும். மனைவி வீட்டாரிடம் நல்லுறவு ஏற்படும்.தம்பதிகளின் அன்யோன்யம் மிகும். ஆவணங்களை பத்திரப்டுத்துவீர்கள். நண்பர்களுடன் சுற்றுலா செல்வீர்கள். சுப காரியம் கைகூடும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com