நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்... இன்றைய ராசிபலன் 03.03.2026

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்... இன்றைய ராசிபலன் 03.03.2026
Published on

விசுவாவசு வருடம் மாசி மாதம் 19-ம் தேதி செவ்வாய்க்கிழமை

நட்சத்திரம்: இன்று காலை 8.07 வரை மகம் பின்பு பூரம்

திதி: இன்று மாலை 5.52 வரை பௌர்ணமி பின்பு பிரதமை

யோகம்: சித்த யோகம்

நல்ல நேரம்: காலை 7.30 - 8.30, மாலை 1.30 - 2.30

ராகு காலம்: பிற்பகல் 3.00 - 4.30

எமகண்டம்: காலை 9.00 - 10.30

குளிகை: காலை 12.00 - 1.30

கௌரி நல்ல நேரம்: காலை 10.30 - 11.30, மாலை 7.30 - 8.30

சூலம்: வடக்கு

சந்திராஷ்டமம்: திருவோணம்

மேஷம்

தம்பதிகளின் புரிதல் அதிகரிக்கும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை, குறைந்த வட்டிக்கு கடன் கிடைத்து முடிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பழைய வாகனத்தை விற்று விட்டு புதியதாக வாங்குவீர்கள். அயல்நாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

ரிஷபம்

விருந்தினர் வீட்டிற்கு வருவர். ஆன்மீக எண்ணம் மேலோங்கும். திருவிழாக்களுக்கு சென்று வருவீர்கள். வெளியூர் பயணம் உண்டு. பிள்ளைகளிடம் சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை எடுத்து நற்பெயர் வாங்குவர். புதிய பதவி கிடைக்கும். தேக ஆரோக்கியம் பளிச்சிடும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

மிதுனம்

நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர்கள். வெளியிடங்களுக்குச் சென்று அன்பை பகிர்வீர்கள். கலைத்துறையினருக்கு தடைப்பட்டிருந்த உங்களுடைய படைப்புகள் வெளியாகும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். கூடுதல் அறை கட்டுவது, வீடு கட்டுவது போன்ற முயற்சிகள் பலிதமாகும்.

அதிர்ஷ்ட நிறம்: பலவண்ண நிறம்

கடகம்

அலுவலகத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கல்யாணம் தள்ளிப் போனவர்களுக்கு நல்ல விதத்தில் முடியும். சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். உங்கள் உறவினர் மற்றும் மனைவிவழி உறவினர்களைக் கூறி சண்டையிட்டுக் கொண்டிருக்காதீர்கள். விலகிச் சென்ற நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வான்நீலம்

சிம்மம்

உத்யோகத்தில் உள்ளவர்களின் கோரிக்கை பலிக்கும். தம்பதிகளிடையே அன்பு நீடிக்கும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உடலில் மாதவிடாய் பிரச்சினை தீரும். மாணவர்கள் படிப்பில் நன்கு கவனம் செலுத்துவர். இழந்த மரியாதையை மீண்டும் பிடித்து விடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கன்னி

உத்யோகத்தில் அமைதி நிலவும். சுறுசுறுப்புடன் வேலையை முடித்துக் காட்டுவீர்கள். முயற்சி செய்த காரியம் முடியும் வரை வெளியிடாமல் இருப்பது நல்லது. நிதானமுடன் செயல்படுவது நல்லது. ஷேர் மூலமாக பணம் வரும். வசதி, வாய்ப்புகள் கூடும். மாணவர்கள் வேற்று மொழியினைக் கற்க ஆர்வம் கொள்வர். உடல் நலம் சிறப்படையும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

துலாம்

திட்டமிட்ட காரியங்கள் தடை இல்லாமல் முன்னேறும் நாளாக அமையும். தொழிலில் புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழில் அதிபர்கள் வருவாயினை பெருக்க திட்டமிடுவர். உரிய நேரத்தில் உணவு அருந்துதல் நன்மை தரும். வழக்கறிஞர்கள் பிரபலமாவார்கள். பணப் பிரச்சினை இருக்காது.

அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்

விருச்சிகம்

வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். முன்கோபத்தை தவிர்த்து விடுங்கள். அமைதியாக இருப்பதால் தங்களின் இலக்கை அடைந்து விடுவீர்கள். உயர்கல்வியில் வெற்றி உண்டு. நீண்ட கால பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வங்கிக்கடன் உதவி கிடைக்கும். இடுப்பு வலி, மூட்டு வலி வந்துபோகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

தனுசு

சில்லறை மற்றும் நடைபாதை வியாபாரிகளுக்கு புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பங்குச் சந்தையில் கவனம் தேவை. பெண்களுக்கு நல்ல வரன் அமையும். பாகப்பிரிவினை சுமுகமாகும். படிப்பில் ஆர்வம் பிறக்கும். மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டு கோப்பையை வெல்வார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

மகரம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கும்பம்

குடும்பத்தில் பாகப்பிரிவினைகளில் இருந்து வந்த பிரச்னைகள் குறையும். வழக்குகள் தங்களுக்கு சாதகமாக செல்லும். கலைஞர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அக்கம் பக்கத்தினர் தொடர்புகள் நன்றாக இருக்கும். பிள்ளைகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மீனம்

உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு அலுவலகத்தில் வேலைச்சுமை குறையும். வியாபாரத்தில் அதிக விற்பனையை கூட்ட புதிய வகை சலுகைகளை தருவீர்கள். மனைவி வழியில் உதவிகள் உண்டு. வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும். மாணவர்கள் நற்பெயர் வாங்கி பெற்றோர்களுக்கு பெருமை சேர்ப்பர்.

அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com