எதிர்பார்த்த காரியம் நிறைவேறும் நாள்... இன்றைய ராசிபலன் - 06.07.2026

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
எதிர்பார்த்த காரியம் நிறைவேறும் நாள்... இன்றைய ராசிபலன் - 06.07.2026
Published on

இன்றைய பஞ்சாங்கம்:-

கிழமை : திங்கட்கிழமை

தமிழ் வருடம் : பராபவ

தமிழ் மாதம் : ஆனி மாதம்

நாள் : 22

ஆங்கில தேதி : 6

மாதம் : ஜூலை

வருடம் : 2026

நட்சத்திரம் : இன்று பிற்பகல் 01-22 வரை பூரட்டாதி, பின்னர் உத்திரட்டாதி.

திதி : இன்று காலை 10-27 வரை சஷ்டி, பின்னர் சப்தமி.

யோகம் : மரண, சித்த யோகம்.

நல்ல நேரம் காலை : 06-15 - 07-15

நல்ல நேரம் மாலை : 04-45 - 05-45

ராகு காலம் : காலை 07-30 - 09-00

எமகண்டம் : காலை 10-30 - 12-00

குளிகை : பிற்பகல் 01-30 - 03-00

கௌரி நல்ல நேரம் காலை : 09-15 - 10-15

கௌரி நல்ல நேரம் மாலை : 06-30 - 07-30

சூலம் : கிழக்கு

சந்திராஷ்டமம் : மகம், பூரம்

மேஷம்

இன்று உங்கள் செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சிறு கருத்து வேறுபாடுகள் விலகும். பணவரவு தேவைக்கேற்ப அமையும். தொழிலில் புதிய திட்டங்கள் குறித்து முக்கிய நபர்களுடன் ஆலோசனை நடத்துவீர்கள். அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்ட பணிகளை குறித்த நேரத்தில் முடித்து பாராட்டு பெறுவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு புதிய முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

ரிஷபம்

தொழிலில் எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைத்து உற்சாகம் அடைவீர்கள். அலுவலகத்தில் உங்கள் பொறுப்புணர்வு அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை பயனளிக்கும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். செலவுகளை திட்டமிட்டு செய்தால் நன்மை உண்டு. மனதில் இருந்த கவலைகள் படிப்படியாக குறையும். மாலை நேரம் மகிழ்ச்சிகரமாக அமையும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

மிதுனம்

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. புதிய தொடர்புகள் எதிர்கால வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி குறித்து பேச்சு தொடங்கும். உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும். உடல்நலம் திருப்திகரமாக இருக்கும். பயணங்கள் அனுகூலமாக அமையும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

கடகம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பிள்ளைகளின் முன்னேற்றம் பெருமை சேர்க்கும். பொருளாதார நிலை மேம்படும். நண்பர்களின் உதவியால் ஒரு முக்கிய காரியம் நிறைவேறும்.தடைபட்டிருந்த பணிகள் மீண்டும் வேகம் பெறும். தொழிலில் புதிய மாற்றங்கள் நன்மையை ஏற்படுத்தும். ஆன்மிக ஈடுபாடு மன அமைதியை தரும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

சிம்மம்

சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. புதிய முதலீடுகளில் அவசரம் வேண்டாம். குடும்பத்தில் பொறுமையுடன் நடந்து கொள்ளுங்கள். அலுவலகத்தில் வார்த்தைகளில் நிதானம் அவசியம். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இறைவழிபாடு மன அமைதியை அளிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

கன்னி

நீண்ட நாள் எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். தொழிலில் வருமானத்தை உயர்த்தும் வாய்ப்புகள் உருவாகும். பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். சொத்து தொடர்பான முயற்சிகள் வெற்றி பெறும். தேவையற்ற கோபத்தை தவிர்ப்பது நல்லது. மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

துலாம்

வியாபாரத்தில் புதிய முதலீடுகள் சாதகமாக அமையும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். வெளிநாட்டு தொடர்புகளில் நல்ல தகவல் கிடைக்கலாம். அலுவலகத்தில் உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். பயணங்கள் ஆதாயம் தரும். உடல்நலத்தில் நல்ல மாற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

விருச்சிகம்

தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சு நடைபெறும். பொருளாதார நெருக்கடிகள் குறையும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.முக்கிய முடிவுகளை தைரியமாக எடுப்பீர்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் புத்துணர்ச்சி அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

தனுசு

அரசு தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். பணியிடத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாகனப் பயணத்தில் கவனம் அவசியம். சேமிப்பை அதிகரிக்க நல்ல வாய்ப்பு கிடைக்கும். உடல்நலம் சீராக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மகரம்

தொழிலில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனை நல்ல பலன் தரும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது.திட்டமிட்ட பணிகள் வெற்றிகரமாக நிறைவேறும். மாணவர்கள் முயற்சிக்கு ஏற்ற பலன் பெறுவார்கள். எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

கும்பம்

படைப்பாற்றல் வெளிப்படும் நாள். வெளிநாட்டு வாய்ப்புகள் சாதகமாக அமையும். புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். மனநிம்மதி அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

மீனம்

உங்கள் முயற்சிகளுக்கு உரிய பலன் கிடைக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும். ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். பண விஷயங்களில் நிதானமாக செயல்படுங்கள். எதிர்கால திட்டங்கள் வெற்றிப் பாதையில் செல்லும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

X

Daily Thanthi
www.dailythanthi.com