

விசுவாவசு வருடம் மாசி மாதம் 25-ம் தேதி திங்கட்கிழமை
நட்சத்திரம்: இன்று மாலை 4.44 வரை விசாகம் பின்பு அனுஷம்
திதி: இன்று இரவு 11.58 வரை சஷ்டி பின்பு சப்தமி
யோகம்: மரண, சித்த யோகம்
நல்ல நேரம்: காலை 6.30 - 7.30, மாலை 4.30 - 5.30
ராகு காலம்: மாலை 7.30 - 9.00
எமகண்டம்: காலை 10.30 - 12.00
குளிகை: காலை 1.30 - 3.00
கௌரி நல்ல நேரம்: காலை 9.30 - 10.30, மாலை 7.30 - 8.30
சூலம்: கிழக்கு
சந்திராஷ்டமம்: ரேவதி, அஸ்வினி
இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்
இன்று எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். குறுகிய தூரப்பயணங்கள் நன்மையைத் தரும். வியாபாரிகளிடையே போட்டிகள் விலகும். உத்யோகத்தில் வேலையில் ஆர்வம் கூடும். மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். உறவினர்களின் வீட்டு விஷேசத்தில் கலந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
வெளியூர் செய்திகள் மனதிற்குத் தெம்பைத் தரும். இன்றைய நாளில் தாங்கள் நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசியல்வாதிகள் எதிர்க்கட்சிக்காரர்களிடம் இணக்கமாக செல்வது நல்லது. கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களின் கல்வி மேம்படும். நட்பு வட்டம் விரிவடையும். உடலில் அசதி ஏற்பட்டு விலகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். குடும்பத் தலைவிகள் தங்கள் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. தம்பதிகள் ஒற்றுமை கூடும். கடன் கொடுப்பதில் கவனம் தேவை. தொழிலதிபர்களுக்கு வேலையாட்கள் உங்களிடமிருந்து தொழில் யுக்திகளை கற்றுக் கொள்வார்கள். ஒரு சிலருக்கு ஒரு பெரும் தொகை வந்து சேரும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
நடைபாதை வியாபாரிகளுக்கு லாபம் இரட்டிப்பாகும். ஆன்மீக எண்ணம் மேலோங்கும். ஒரு சிலர் ஆன்மீக யாத்திரையை மேற்கொள்வர். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. நீண்ட நாள் பிரச்சினைக்கு இன்று ஒரு தீர்வு கிடைக்கும். மனம் நிம்மதியடையும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
குலதெய்வக் கோவிலை புதுப்பிக்க உதவுவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். காதலர்களுக்கு பொறுமை அவசியம். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். இரவில் நீண்ட தூர பயணத்தை தவிர்க்கவும். விற்பனை பிரதிகளுக்கு அதிக ஆர்டர்கள் இணையதளத்திலேயே கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்
வியாபாரிகளின் புதிய முயற்சிகள் வெற்றிபெறும். உத்யோகஸ்தர்களை சக ஊழியர்கள் பாராட்டுவர். நண்பர்கள் தேடி வந்து நட்பு பாராட்டுவர். ஆன்மீக பயணங்கள் மேற்கொள்வீர்கள். பங்குதாரர்களுடன் இருந்து வந்த மோதல்கள் நீங்கும். தம்பதிகளிடையே அன்பு பலப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு நிறம்
குடும்பத் தலைவிகளின் ஆசைகள் நிறைவேறும். காதலர்களுக்கு பெரியவர்களின் சம்மதம் கிடைக்கும். மளிகைக் கடை மற்றும் சில்லரை வியாபாரம் லாபம் தரும். மருத்துவர்கள் சாதனை படைப்பர். வியாபாரத்திற்கு வங்கிக் கடன் கிட்டும். மனக்குழப்பம் வரும். தியானம் மற்றும் யோகா பழகுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வரன் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தை சிறப்பாக முடியும். ஆன்மீக யாத்திரை செல்வீர்கள். வியாபாரம் செழிப்படையும். கலைஞர்களின் எண்ணம் நிறைவேறும். தம்பதிகளிடம் ஒற்றுமை கூடும். வேலை தேடுபர்களுக்கு புது உத்யோக வாய்ப்பு வரும். உடல் நலம் சிறப்படையும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
இன்று உங்களுக்கு சாதகமான நாள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் வீண் அரட்டையை தவிர்ப்பது நல்லது. நண்பரின் உதவி கிடைக்கும். வீடு வாங்கும் முயற்சி பலிக்கும். தம்பதிகளிடையே பிணக்கம் நீங்கும். சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
வியாபாரிகளின் எண்ணங்கள் நிறைவேறும். பழைய பாக்கிகள் வசூலாகும். குடும்பத் தலைவிகள் சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. பெண்கள் வேலைக்கு செல்லும்போது வாகனத்தில் கவனம் தேவை. மாணவர்களின் நினைவாற்றல் கூடும். உத்யோகஸ்தர்கள் மேலிடத்தின் மேல் கவனம் கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: கடல்பச்சை
விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும். உங்கள் துறையில் உள்ள சிக்கல்கள் தீரும். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு சாதகமாக அமையும். உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். அதனை உடனுக்குடன் முடித்துவிடுவீர்கள். மூளை சுறுசுறுப்படையும். மாணவர்கள் நன்கு படிப்பர்.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்