வாய்ப்புகள் கதவை தட்டும்...இன்றைய ராசிபலன்-09.12.2025


வாய்ப்புகள் கதவை தட்டும்...இன்றைய ராசிபலன்-09.12.2025
x
தினத்தந்தி 9 Dec 2025 6:29 AM IST (Updated: 9 Dec 2025 6:30 AM IST)
t-max-icont-min-icon

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்..

டிசம்பர் 9

கிழமை ;செவ்வாய் கிழமை

தமிழ் வருடம்; விசுவாவசு

தமிழ் மாதம்; கார்த்திகை

நாள்; 23

ஆங்கில தேதி; 9

மாதம்; டிசம்பர்

வருடம்; 2025

நட்சத்திரம்; இன்று காலை 08-55 வரை பூசம்

பின்பு; ஆயில்யம்

திதி; இன்று இரவு 08-41 வரை பஞ்சமி பின்பு சஷ்டி

யோகம்; சித்த யோகம்

நல்ல நேரம்; காலை 07-45 to 8-45

நல்ல நேரம்; மாலை 4-45 to 5-45

ராகு காலம்; பிற்பகல் 3-00 to 4-30

எமகண்டம்; காலை 9-00 to 10-30

குளிகை; காலை 12-00 to 1-30

கௌரி நல்ல நேரம்; காலை 10-45 முதல் 11-45

கௌரி நல்ல நேரம் மாலை 7-30 முதல் 8-30

சூலம்; வடக்கு

சந்திராஷ்டமம்; பூராடம்

இன்றைய ராசிபலன்

மேஷம்

சுயதொழில் செய்யும் பெண்களுக்கு அழகு நிலையம் வைத்திருப்பவர்களுக்கு பாராட்டும் பணமும் கிடைக்கும். பழைய நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். புதிய முயற்சிகள் உங்களுக்கு பலிக்கும். தேகம் பொலிவு பெறும்.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை

ரிஷபம்

உத்யோகஸ்தர்கள் மன உளைச்சலில் இருந்து விடுபடுவர். பணவரவு அதிகரிக்கும். அரசு சம்பந்தப்பட்ட டென்டர் போன்றவைகளில் வெற்றி நிச்சயம். நடைபாதை வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். காலை நேர உணவினை தவிர்க்காதீர்கள். உடல் நலம் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் ஊதா

மிதுனம்

சொந்த தொழில் செய்பவர்களுக்கு தங்கள் தொழிலில் மனநிறைவு கிடைக்கும். தம்பதிகளின் ஒற்றுமைக்கு குறையிருக்காது. வியாபாரத்தில் உள்ளவர்கள் புதிய அணுகுமுறையை கையாண்டு அதிக லாபத்தினை ஈட்டுவீர்கள். மாணவ மாணவிகளுக்கு படிப்பில் ஆர்வம் கூடி நல்ல மதிப்பெண்களை பெறுவர். தேக ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை

கடகம்

குடும்பத் தலைவிகளுக்கு தங்களுடைய சகோதர சகோதரிகள் விருந்திற்கு வந்து செல்வர். தங்கள் பிள்ளைகள் மேல் படிப்பிற்காக வெளிநாடு செல்வர. வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய உத்யோகம் கிடைக்கும். மாமியார் தொல்லை அகலும். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்

சிம்மம்

சுபகாரிய பேச்சு வார்த்தை சுபமாக முடியும். வியாபாரத்தில் ஆதாயம் காணலாம். மனைவியிடம் ஆத்திரப்படாதீர்கள். குடும்பத் தலைவிகளுக்கு வீட்டிற்கு அத்தியாவசிய பொருட்களான வாஷிங் மெஷின், மிக்ஸி போன்ற பொருட்களை வாங்குவீர்கள். பொறுமையை கையாள்வது நன்மையைத் தரும்.

அதிர்ஷ்ட நிறம் பச்சை

கன்னி

சொந்த தொழில் செய்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும் அதற்கு ஏற்ப லாபம் கிடைக்கும். தள்ளிப் போன வெளியூர் பயணம் இன்று செல்ல ஆயத்தமாவீர்கள். பெண்கள் அக்கம் பக்கத்தினரிடம் பேசும் போது வாய் நிதானம் தேவை. மாணவ மணிகளுக்கு கல்வி கடன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் நீலம்

துலாம்

பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள். புதியவர்களின் நட்பு பலக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் தங்களுக்கு ஆதரவு தருவர். குடும்பத் தலைவிகளுக்கு தம்பதிகளிடையே இணக்கம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் நீலம்

விருச்சிகம்

உத்யோகஸ்தர்களுக்கு தங்களுடைய சக ஊழியர்களால் உங்களுக்கு ஆதரவுகள் ஏற்படும்.சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபம் இரட்டிப்பாகும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கதவை தட்டும். தம்பதிகள் இணைந்து திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உடல் நலம் சிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம் சாம்பல்

தனுசு

இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை

மகரம்

வெளியூர் பயணங்கள் மேற்கொள்வர். அதில் ஆதாயமும் பெறுவர். பொருளாதாரத்தில் உயர்வு உண்டு. பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். எதிர்பார்த்த ஒரு தொகை கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பு மற்றும் விளையாட்டு துறையில் ஆர்வம் மிகும்.

அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்ச்

கும்பம்

நடை பாதை மற்றும் கடை வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத் தலைவிகளுக்கு பிள்ளைகளுக்கு தேவையானதை நிறைவேற்றுவர். சிக்கன நடப்பதால் சேமிப்பினை உயர்த்துவர். உடல் நலத்தில் கவனம் தேவை. கணவருடன் கோவில் குளங்களுக்கு சென்று வருவர்.

அதிர்ஷ்ட நிறம் பொன்வண்ணம்

மீனம்

அரசியல்வாதிகள் பேச்சில் நிதானம் தேவை. பொறுமை அவசியம். மனைவி கணவர் போக்கே சென்று அவர்களை உங்கள் வழியில் வரவழையுங்கள். மார்கெட்டிங்பிரிவினர்களுக்கு இலக்குகளை எட்டிவிடுவீர்கள். அக்கம் பக்கத்து வீட்டுக்காரரிடம் அளவாக வைத்துக் கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் சிவப்பு




1 More update

Next Story