

கிழமை: புதன் கிழமை
தமிழ் வருடம்: விசுவாவசு
தமிழ் மாதம்: மாசி
நாள்: 27
ஆங்கில தேதி: 11
மாதம்: மார்ச்
வருடம்: 2026
நட்சத்திரம்: இன்று இரவு 09-49 வரை கேட்டை பின்பு மூலம்
திதி: இன்று அதிகாலை 02-02 வரை சப்தமி பின்பு அஷ்டமி
யோகம்: சித்த,மரண யோகம்
நல்ல நேரம்: காலை 09-30 to 10-30
நல்ல நேரம்: மாலை 4-30 to 5-30
ராகு காலம்: மாலை 12-00 to 1-30
எமகண்டம்: காலை 7-30 to 9-00
குளிகை: காலை 10-30 to 12-00
கௌரி நல்ல நேரம்: காலை 10-30 to 11-30
கௌரி நல்ல நேரம்: மாலை 6-30 to 7-30
சூலம்: வடக்கு
சந்திராஷ்டமம்: பரணி, கிருத்திகை
மேஷம்
இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
ரிஷபம்
உத்யோகஸ்தர்கள் தங்கள் கடன் தொகையில் ஒரு பகுதியை அடைப்பீர்கள். பெண்கள் அத்தியாவசியமானவைக்கு செலவு செய்வார்கள். திருமண பேச்சு வார்த்தை நன்மையில் முடியும். வாகன பராமரிப்பு செலவு ஏற்படும். வெளியூர் பயணம் வெற்றி தரும். குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவர். உடல்நிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
மிதுனம்
இன்று உறவினர் வருகை இருக்கும். பத்திரபதிவு செய்வீர்கள். நடைபாதை வியாபாரிகள் சுபிட்சம் காண்பர். தாயார் தங்களுக்கு உதவிகரமாக இருப்பார். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தெய்வீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். உத்யோகத்தில் வேலைகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
கடகம்
உத்யோகத்தில் தங்கள் வேலைகளை துரிதமாக செய்து முடிப்பீர்கள். தம்பதிகளிடையே உள்ள உறவு வலுப்படும். வீடு கட்ட கடன் வசதி கிடைக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் லாபத்தை காண்பர். விளையாட்டு வீரர்கள் பதக்கம் பெற்று தாய்நாடு திரும்புவர். காதல் கசக்கும். உடலில் மந்தம் விலகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
சிம்மம்
திருமணத்தில் இருந்த தடைகள் விலகி நல்ல வரண் கிடைக்கும். வீடு வாங்கும் எண்ணம் தோன்றும். வங்கியில் நீங்கள் விரும்பிய வீடு கட்ட எதிர்பார்த்த பணம் கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறைத் தேவை. தம்பதியரிடையே அன்பு மேலோங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
கன்னி
நினைத்த ஒரு காரியம் இனிதே நிறைவடையும். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு அதிக அலைச்சல்கள் ஏற்படும். இருப்பினும், அதிக ஆர்டர்களை பெறுவர். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். திருமண பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். ஷேர் மூலம் பணம் வரும்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்
துலாம்
வியாபாரிகள் வெளியூர் பயணம் மேற்கொள்வர்.மாணவர்கள் முன்பை விட அதிக மதிப்பெண்களை பெறுவர். பங்குச் சந்தையில் லாபம் கிடைக்கும். சில்லரை வியாபாரிகள் பயனடைவர். கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். உத்யோகஸ்தர்கள் அதிகாரிகளிடம் பாராட்டைப் பெறுவர். உடல் நலம் பளிச்சிடும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
விருச்சிகம்
நண்பர்களின் உதவிகள் கிடைக்கும், சிறு வியாபாரிகளுக்கு விற்பனை மிகும். பெரிய விசயங்கள் சட்டென்று முடியும். பணவரவு திருப்தி தரும். எதிர்பார்த்த ஒரு நற்செய்தி வரும். நினைத்த காரியம் வெற்றி பெறும். கலைஞர்களின் முயற்சிகள் பலிக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. வீட்டு உணவை உட்கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
தனுசு
மார்கெட்டிங் பிரிவினர்களின் பேச்சி முதிர்ச்சி தெரியும். ஓட்டல் வியாபாரம் நன்கு ஓடும். குடும்பத் தலைவிகள் வீட்டிலிருந்தபடியே பணத்தை சம்பாதிப்பர். பொதுநலத் தொண்டாளர்களுக்கு பெரிய பதவிகள் தேடி வரும். தம்பதிகளிடையே மனஸ்தாபம் ஏற்படும். அமைதி காப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வான்நீலம்
மகரம்
சுப செய்தி கிடைக்கும். உணவு சம்பந்தப்பட்ட வியாபாரம் சிறப்பாக செல்லும். குறித்த நேரத்தில் உணவு உட்கொள்ளுங்கள். பெண்கள் சுயதொழிலில் முன்னேற்றம் காண்பர். குடும்பத்துடன் விருந்து விழா என்று கலந்து கொள்வீர்கள். கலைஞர்களின் எண்ணங்கள் ஈடேறும். மாணவர்கள் நன்கு தேர்வினை எதிர்கொள்வர்.
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்
கும்பம்
ஒரு சிலர் குடும்பத்துடன் வெளிநாடு பயணம் மேற்கொள்வீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டை அலங்கரிப்பீர்கள். மாணவர்கள் காதலில் சிக்கிக் கொள்ளாமல் பார்த்து கொள்வது நல்லது. ஒரு சிலர் நவீன வாகனம் வாங்குவீர்கள். உடல் நலத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை
மீனம்
தம்பதிகளின் ஒற்றுமை மேலோங்கும். வெளிநாட்டுத் தொடர்பால் நன்மைகள் கூடும். கல்யாணம், கிரகப் பிரவேசத்தில் முதல் மரியாதைக் கிடைக்கும். வியாபாரத்தில் பணவரவு அதிகரிக்கும். கடன் அன்பை முறிக்கும். ஆதலால், கொடுக்கல் வாங்கலில் கவனம். நண்பர்கள், உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்