இன்றைய ராசிபலன்

மீன ராசிகாரர்களுக்கு எதிர்பார்த்த காரியம் வெற்றியடையும். தம்பதிகளிடையே அன்பு நீடிக்கும்.
இன்றைய ராசிபலன்
Published on

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி வருடம் சித்திரை மாதம் 23-ம் தேதி திங்கட்கிழமை

நட்சத்திரம் : இன்று மாலை 4.39 வரை ரேவதி பின்பு அஸ்வினி

திதி : இன்று பிற்பகல் 1.25 வரை திரயோதசி பின்பு சதுர்தசி

யோகம் : சித்த யோகம்

நல்ல நேரம் காலை : 9.30 - 10.30

நல்ல நேரம் மாலை : 4.30 - 5.30

ராகு காலம் மாலை : 7.30 - 9.00

எமகண்டம் காலை : 10.30 - 12.00

குளிகை மாலை : 1.30 - 3.00

கௌரி நல்ல நேரம் காலை : 1.30 - 2.30

கௌரி நல்ல நேரம் மாலை : 7.30 - 8.30

சூலம் : கிழக்கு

சந்திராஷ்டமம் : ஆயில்யம், மகம்

ராசிபலன்

மேஷம்

நிலம், வீடு புதிய சொத்து வாங்குவீர்கள். வெளி மக்கள் தொடர்பு அதிகரிக்கும். சம்பள பாக்கியும் கைக்கு வரும். பணவிசயங்களில் யாரையும் நம்ப வேண்டாம். தொழில் லாபம் தரும். உத்யோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். உடல் நலம் சிறப்படையும்.

அதிர்ஷ்டநிறம் : ஆரஞ்ச்

ரிஷபம்

குடும்பத்தில் வாக்குவாதம் வேண்டாம். மூத்த சகோதரரால் நன்மை விளையும். மருத்துவர்கள் சாதனைப் படைப்பர். உத்யோகஸ்தர்களுக்கு கடன் பைசலாகும். நண்பர்கள் விசயத்தில் விட்டுக் கொடுங்கள். மனதில் மகிழ்ச்சி நிலவும். வெளிநாடு செல்லும் கனவு நனவாகும்.

அதிர்ஷ்டநிறம் : சிவப்பு

மிதுனம்

மனம் அமைதியைத் தேடும். பெரியவர்களின் சந்திப்பு அனுபவத்தை கூட்டும். பழைய கடனில் ஒரு பகுதி தீரும். கலைஞர்களது படம் திரைக்கு வர ஆயத்தமாகும். ஆசிரியர்கள் பாராட்டினை பெறுவர். தம்பதியர்கள் ஒற்றுமையுடன் இருப்பர். மாணவர்கள் சாதனைப் படைப்பர்.

அதிர்ஷ்டநிறம் : பச்சை

கடகம்

ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. அத்யாவசியமானதா என பார்த்து செலவு செய்யவும். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆணையை ஏற்று நடப்பீர்கள். நண்பர்களிடையே புரிதல் அதிகரிக்கும். இளைஞர்களுக்கு நல்ல வேலை கிட்டும்.

அதிர்ஷ்டநிறம் : வெள்ளை

சிம்மம்

இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். யாரிடம் பேசினாலும் தேவையற்ற மனஸ்தாபங்கள் நேரலாம். ஆதலால், அதிகமாக பேசாமல் மிகவும் அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும். பயணத்தின் போதும் கவனம் தேவை.

அதிர்ஷ்டநிறம் : ஊதா

கன்னி

திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்களுக்கு நல்ல வரன் கிட்டும். மாணவர்களின் கனவு நனவாகும். ரியல் எஸ்டேட் மற்றும் கமிஷனில் இருப்பவர்களுக்கு நல்ல ஒரு தொகை கிட்டும். எதிர்பார்த்த ஒரு காரியம் சிறப்பாக நடந்தேறும். வேற்றுமொழி மதத்தவர் தங்களுக்கு உதவுவர்.

அதிர்ஷ்டநிறம் : சாம்பல்

துலாம்

தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். மகள் மற்றும் மகன் படிப்புக்காக வாங்கிய கடனில் ஒரு தொகையை அடைத்து விடுவீர்கள். பழைய வாகனத்தை கொடுத்து விட்டு நவீன வாகனம் வாங்குவீர்கள். தொழில் நிமித்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். உடல் நலம் சிறக்கும்.

அதிர்ஷ்டநிறம் : ரோஸ்

விருச்சிகம்

சிலருக்கு காதல் கண்சிமிட்டும். வேலையில்லாதவருக்கு நேர்முகத் தேர்வில் வெற்றிபெறுவர். விவசாயிகளுக்கு கேட்ட கடன் உதவி கிடைக்கும். அலுவலகத்தில் தங்கள் மதிப்பு உயரும்.மாணவர்கள் தாங்கள் விரும்பிய துறையை தேர்ந்தெடுப்பர். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்

அதிர்ஷ்டநிறம் : ஊதா

தனுசு

கணினித்துறையினருக்கு விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். கணவன் மனைவிக்குள் இருந்த சந்தேகம் விலகும், ஒற்றுமை மேலோங்கும். தங்கள் சேமிப்பு உயரும். வங்கிக் கடன் கிடைக்கும். வெளிநாடு சம்பந்தப்பட்ட விசயங்களில் தங்களுக்கு நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்டநிறம் : மஞ்சள்

மகரம்

அக்கம் பக்கத்தாருடன் அனுசரிப்பது நல்லது. பணவரவில் பங்கம் இல்லை. வெளி நபர்களிடம் எச்சரிக்கைத் தேவை. அரசியல்வாதிகளுக்கு புகழ் ஓங்கும். வழக்கு வெற்றி காணும். சிறு தூர பயணம் வெற்றி தரும். தம்பதிகளிடையே அன்பு கூடும். பெண்களுக்கு அறியாமை விலகும்.

அதிர்ஷ்டநிறம் : பச்சை

கும்பம்

இனிமையான சம்பவம் உண்டாகும். பிள்ளையின் திருமண விழா பற்றி திட்டமிடுவீர்கள். வழக்கு வெற்றி பெறும். நல்ல காரியம் ஒன்று எளிதில் முடியும். புதிய நட்பால் நன்மை உண்டாகும். ஆசிரியர் மாணவர்கள் மனநிலைக்கேற்ப ஒத்துழைப்பர். பெண்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். பங்குச் சந்தையில் கவனம் தேவை.

அதிர்ஷ்டநிறம் : கருநீலம்

மீனம்

எதிர்பார்த்த காரியம் வெற்றியடையும். நண்பர்களின் மத்தியில் மரியாதை கூடும். சக ஊழியர்களிடம் முன் கோபத்தை தவிர்க்கவும். விளையாட்டில் வெற்றி தொடரும். தம்பதிகளிடையே அன்பு நீடிக்கும். தாயின் உடல் நலம் சீரடையும்.

அதிர்ஷ்டநிறம் : சிவப்பு

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com