

கிழமை: வெள்ளிக் கிழமை
தமிழ் வருடம்: விசுவாவசு
தமிழ் மாதம்: மாசி
நாள்: 29
ஆங்கில தேதி: 13
மாதம்: மார்ச்
வருடம்: 2026
நட்சத்திரம்: இன்று அதிகாலை 12-12 வரை மூலம் பின்பு பூராடம்
திதி: இன்று காலை 05-56 வரை நவமி பின்பு தசமி
யோகம்: சித்த யோகம்
நல்ல நேரம்: காலை 09-00 to 10-00
நல்ல நேரம்: மாலை 04-30 to 5-30
ராகு காலம்: காலை 10-30 to 12-00
எமகண்டம்: மாலை 3-00 to 4-30
குளிகை: காலை 07-30 to 09-00
கௌரி நல்ல நேரம்: காலை 12-30 to 1-30
கௌரி நல்ல நேரம்: மாலை 6-30 to 7-30
சூலம்: மேற்கு
சந்திராஷ்டமம்: ரோகிணி, மிருகசீரிஷம்
மேஷம்
உத்யோகத்தில் வேலைபளு மிகும் பிரிந்த உறவினர்கள் மீண்டும் சமாதானமாவர். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் செய்வீர்கள். நண்பர்கள் உதவுவர். பழைய கடன் பாக்கியை அடைத்துவிடுவீர்கள். மாணவர்கள் திட்டமிட்டு படிப்பர். அலைச்சல் அதிகரிக்கும். உடல் நல்த்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
ரிஷபம்
இன்று சந்திராஷ்டமம் என்பதால் பல காரியதடைகள் ஏற்படும். ஆகையால், புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்
மிதுனம்
புதிய நண்பர்கள் அறிமுகம் கிடைக்கும். அவர்களால் நன்மைகள் விளையும். தம்பதிகளிடையே இணக்கம் கூடும். பெண்களின் தேவை பூர்த்தியாகும். நாடாளுபவர்கள் உதவுவார்கள். இழுபறியாக இருந்த வீட்டு மனை வாங்குவது, விற்பது தொடர்பான விசயங்கள் தங்களுக்கு சாதகமாக அமையும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்
கடகம்
வாகனப்பயணத்தில் கவனம் சற்று கூடுதல் தேவை. தங்கள் பிள்ளைகள் தொடர்பான விசயங்களில் நற்செய்திகள் கிடைக்கும். உத்யோகஸ்தர்கள் தாங்கள் கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். தங்கள் வெளிநாடு பயணம் வெற்றித் தரும். மாணவர்கள் நன்கு படிப்பர். உடல் நலத்தில் இடுப்பு, மூட்டுகளில் வலி வந்து போகும்.
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்
சிம்மம்
புதிய திட்டங்கள் வெற்றி பெறும். மார்கெட்டிங்கில் இருப்பவர்களுக்கு அலைபேசி மூலமாகவே ஆர்டர்கள் கிடைக்கும். காதலர்களிடையே ஊடல்கள் வந்து விலகும். வழக்கில் திருப்பம் ஏற்படும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல பொறுப்பு கிடைக்கும். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படாது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
கன்னி
நீண்ட நாட்களாக முயற்சித்த காரியம் வெற்றி பெறும். கோவில் பணிகளில் ஆர்வம் கூடும். மன அழுத்தம் குறையும். கணவன்-மனைவிக்குள் அன்பு கூடும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் ஆதரவு பெருகும். ஒரு சிலருக்கு கார் வாங்கும் யோகம் உண்டாகும். நண்பர்களால் மனமகிழ்ச்சி ஏற்படும். தேகம் பொலிவடையும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
துலாம்
பணவரவு சுமாராக இருக்கும். பெண்கள் நகை சேமிப்பு அல்லது அதற்கு இணையான சேமிப்பு திட்டத்தினை துவங்குவர். உத்யோகஸ்தர்கள் தாங்கள் கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். பெரிய பதவிகள் தேடி வரும். நாடாளுபவர்கள் உதவுவார்கள். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் கொள்வர்.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்
விருச்சிகம்
குடும்பத் தலைவிகள் குடும்பத்துடன் குல தெய்வ பிரார்த்தனையை மேற்கொள்வர். கடன் தொல்லை நீங்கும். பணவரவு அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை புரிந்துக் கொள்வார்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டை அலங்கரிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
தனுசு
வியாபாரிகளின் புதிய முயற்சிகள் வெற்றிபெறும். வீடு கட்ட கடன் வசதி கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சகோதரர்களிடையே நிலப்பிரச்னைக்கு சமரசத் தீர்வு காண்பர். உத்யோகஸ்தர்களை சக ஊழியர்கள் பாராட்டுவர். தம்பதிகளிடையே அன்பு பலப்படும். வாகனத்தை இயக்கும் முன் சரிபார்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
மகரம்
நண்பர்கள் பக்கபலமாக இருப்பர். உத்யோகஸ்தர்கள் வேலையை விரைவில் முடிப்பர். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். மனைவிவழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரும். மிகவும் பொறுமை அவசியம். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
கும்பம்
பணவரவு சீராக இருக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். குடும்பத்தில் அமைதி நிலவும். நவீன வாகனம் வாங்குவீர்கள். வீடு கட்ட எதிர்பார்த்த பணம் வரும். கட்டிட வரைபடமும் அப்ரூவலாகும். தந்தையார்வழியில் மதிப்பு, மரியாதைக் கூடும். உடல் நலத்தில் கவனம் தேவை
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்
மீனம்
வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரம் செழிப்படையும். கலைஞர்களின் எண்ணம் நிறைவேறும். பெண்கள் கூடுமானவரை சிக்கனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் வளர்ச்சியும் பணவரவும் கூடும். பெண்கள் குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவர். மாணவர்கள் மேல்படிப்புக்கான திட்டங்கள் தீட்டுவர்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை