

விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 2-ம் தேதி திங்கட்கிழமை
நட்சத்திரம்: இன்று காலை 5.13 வரை திருவோணம் பின்பு அவிட்டம்
திதி: இன்று காலை 8.56 வரை துவாதசி பின்பு திரயோதசி
யோகம்: சித்த யோகம்
நல்ல நேரம்: காலை 6.30 - 7.30, மாலை 4.30 - 5.30
ராகு காலம்: மாலை 7.30 - 9.00
எமகண்டம்: காலை 10.30 - 12.00
குளிகை: காலை 1.30 - 3.00
கௌரி நல்ல நேரம்: காலை 1.30 - 02.30, மாலை 7.30 - 8.30
சூலம்: கிழக்கு
சந்திராஷ்டமம்: பூசம்
மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு நல்ல கமிஷன் கிடைக்கும். மருத்துவர்களுக்கு பதவி உயர்வுண்டு. நண்பர்களிடையே கலகலப்பான சூழல் உருவாகும். வெளியூர் பயணம் தடைபடும். மருத்துவர்கள் செழிப்பர். தொலைபேசி மூலம் நட்பு பலப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் நலம் சிறக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
குடும்பத் தலைவிகளின் கடவுள் நம்பிக்கை வீண்போகாது. வேண்டியது பலிக்கும். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெறுவர். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட மனஸ்தாபம் விலகும். உறவினர்களால் நன்மை உண்டு. அக்கம் பக்கத்தாரிடம் நட்பு பலப்படும். உடல் வலிமை உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். சகோதர வகையில் உதவிகள் உண்டு. தேகம் பளிச்சிடும். நண்பர்களிடையே சிறு மனஸ்தாபங்கள் வந்து போகும். சொத்து விற்பது, வாங்குவது சம்பந்தமாக கவனம் தேவை. தங்கள் பிள்ளையின் திருமணத்தை தடபுடலாக நடத்துவர். மாணவர்கள் படிப்பில் நன்கு முன்னேறுவர்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: பொன்நிறம்
குடும்பத் தலைவிகள் தங்கள் சேமிப்பை உயர்த்துவர். தம்பதிகள் அன்பு பலப்படும். பிள்ளைகளின் தொல்லை நீங்கும். அவர்கள் உங்களைப்பற்றி புரிந்து கொள்வர். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். ஆன்மீகச் சுற்றுலா சென்றுவருவீர்கள். பணவிஷயங்களில் யாரையும் நம்ப வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். நண்பர்கள் உதவுவர். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துபோவது நல்லது. அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம். நினைத்த காரியம் நிறைவேறும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். உடல் நலம் சிறப்புறும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
வாழ்க்கையின் முக்கியத் தருணமாக அமையும். நீண்ட நாட்களாக பிரிந்து இருந்த தம்பதியர் ஒன்று கூடுவார்கள். அரசு தொடர்பான காரியங்கள் முடிவுக்கு வரும். உத்யோகம் சாதகமாக இருக்கும். அலுவலகத்தில் விடுபட்ட நிறுத்தி வைக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
வியாபாரிகளிடையே உள்ள போட்டி விலகும். பங்குச் சந்தை லாபம் தரும். இணையம் வழி வியாபாரம் நல்ல லாபத்தை தரும். உத்யோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி மாற்றப்படுவார். மனைவி உங்களுடைய தவறுகளை சுட்டிக் காட்டினால் கோபப்படாமல் அமைதியை கையாளவும். உடல் நலத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
குடும்பத்தில் அமைதி நிலவும். வியாபாரிகளுக்கு நிதானம் தேவை. இல்லாவிட்டால் பொருள் இழப்பு உண்டாகலாம். ஆவணங்களை சரிபார்ப்பது நலம் தரும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்க்கலாம். தங்களின் பூர்வீக சொத்து சம்பந்தமாக இருந்த தேக்க நிலை நீங்கும். இடுப்பு வலி வந்து போகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
உத்தியோகத்தில் அமைதியான போக்கே உண்டாகும். எதிர்பார்த்த பணத்தொகை வந்து சேரும். குடும்பத் தலைவிகள் வீட்டிற்காக பல விதத்தில் தியாகம் செய்வர். பயணங்கள் லாபம் தரும். காதலர்களின் கனவு நனவாகும். வியாபாரிகள் முதலீடுகளை அளந்து போடுவது நல்லது. உடல் நலத்தில் சற்றுக் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை
உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தேவையில்லாத மனபயம் விலகும். திருமணம் கோலாகலமாக நடக்கும். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு ஆர்டர்கள் அதிகரிக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். நவீன பொருட்களின் செலவுகள் அதிகரிக்கும். மாணவர்கள் மதிப்பெண்கள் உயரும்.
அதிர்ஷ்ட நிறம்: கடல்நீலம்
உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம். குடும்பத்தில் உங்களுக்கு சேர வேண்டிய பங்குத் தொகை கை வந்து சேரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மதிப்பர். பிரிந்த உறவினர் உங்களை தேடி வருவார்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். பிள்ளைகளால் ஆறுதலடைவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை