இன்றைய ராசிபலன் - 16.04.2025

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
இன்றைய ராசிபலன் - 16.04.2025
Published on

விசுவாவசு வருடம் சித்திரை 03-ம் தேதி புதன்கிழமை

நட்சத்திரம் : இன்று அதிகாலை 02.04 வரை விசாகம் பின்பு அனுஷம்

திதி: இன்று காலை 11.57 வரை திரிதியை பின்பு சதுர்த்தி

யோகம்: சித்த யோகம்

நல்ல நேரம் காலை: 9.30 - 10.30

நல்ல நேரம் மாலை: 4.30 - 5.30

ராகு காலம் மாலை: 12.00 - 1.30

எமகண்டம் காலை: 7.30 - 9.00

குளிகை காலை: 10.30 - 12.00

கௌரி நல்ல நேரம் காலை: 10.30 - 11.30

கௌரி நல்ல நேரம் மாலை: 6.30 - 7.30

சூலம்: வடக்கு

சந்திராஷ்டமம்: பரணி

மேஷம்

இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. காரணம் அந்த பயணங்களால் நன்மை பெரிதாக இருக்காது. இதனால் நேரமும் பணவிரையமும் ஏற்படும். ஆதலால், இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

ரிஷபம்

கோடைகால சலுகையால் வியாபாரிகளுக்கு தள்ளுபடியால் விற்பனை கூடும். இளைஞர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். உறவினர்கள் வருகை இன்பமளிக்கும். உயர் கல்விக்காக வெளியூர் அல்லது வெளிநாடு செல்ல திட்டமிடுவீர்கள். மகளுக்கு ஏற்ற துணையை தேர்ந்தெடுப்பர்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

மிதுனம்

வீடு வாங்க கேட்ட வங்கிக் கடன் வந்தடையும். மாணவர்கள் படிப்பு மட்டுமல்லாமல் கலைத்துறையிலும் ஈடுபாடு கொள்வர். அண்டை வீட்டாரிடம் நட்பு பலப்படும். பணம் பாக்கெட்டை நிரப்பும். வியாபாரத்தில் உள்ளவர்கள் பழைய சரக்குகள் விற்று விடுவீர்கள். தம்பதிகள் பொறுப்புணர்வர்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

கடகம்

அரசியல்வாதிகளின் எண்ணம் ஈடேறும். இரவு நேரத்தில் நீங்கள் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது. குறிப்பாக, நீண்ட தூர பயணத்தை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கல் சீராகச் செல்லும். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கட்டளையினை ஏற்பர். கூட்டு வியாபாரிகளிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

சிம்மம்

பெண்களுக்கு தாங்கள் நினைத்தவாறே ஏற்ற துணை கிடைக்கும். குடும்பத் தலைவி சேமிக்கத் துவங்குவர். வங்கிப் பணியாளர்கள் மேன்மை அடைவர். எதிர்பார்த்த வேலை தாமதம் இன்றி விரைவில் முடியும். ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். மாணவர்கள் நன்கு படிப்பர். உடல் நலம் மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கன்னி

கடன் கட்டுக்குள் அடங்கும். வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவீர்கள். பெண்கள் புது ரக ஆடைகளை வாங்கி இன்புறுவர். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர். பங்கு சந்தையில் சில மாற்றங்கள் செய்வீர்கள். பெற்றோர் நலனில் அக்கறை காட்டி வருவீர்கள். உடல் நலம் சீராக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

துலாம்

பிரிந்த நண்பர்கள் அன்பு பாராட்டுவீர்கள். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நன்மதிப்பைப் பெறுவர். பெற்றோரின் உடல் நலத்தை கவனிப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தம்பதிகளிடையே அன்பு மிகும். நண்பர்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்றுவர்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

விருச்சிகம்

அரசு வேலைகள் சாதகமாகும். உத்யோகத்தில் தங்களுக்கெதிராக செயல்பட்ட அதிகாரி இடமாற்றம் செய்யப்படுவார். புதிய வாடிக்கையாளர்களின் வருகை மனதிற்கு தெம்பளிக்கும். மாணவர்களின் தங்களின் தேவைகளை பெற்றோர்கள் பூர்த்திசெய்வர்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

தனுசு

உத்யோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். அது தங்கள் வீட்டு வேலைகளை செய்ய உதவியாக இருக்கும்.ஆசிரியருக்கு பாராட்டுகள் குவியும். பிள்ளைகள் நல் வழியில் செல்வர். பெண்களுக்கு தாங்கள் எதிர்பார்த்த வரண் அமையும். தேகம் பளிச்சிடும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மகரம்

வியாபாரிகள் புதிய கிளைகளை துவங்குவர். பிள்ளைகள் நன்கு படிப்பர். மனைவியின் எண்ணத்தை ஈடேற்றுவீர்கள். நினைத்த இடத்திற்குபார்க்க வேண்டிய நபர்களை சந்தித்து நினைத்த காரியத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள். அக்கம் பக்கத்தாருடன் அனுசரனையுடன் செல்லுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

கும்பம்

தம்பதிகளிடையே மனஸ்தாபம் நேரலாம், விட்டுக் கொடுப்பது நல்லது. திடீர் பணவரவு ஆனந்தத்தைத் தரும். திருமண பேச்சுவார்த்தைகள் இனிதே முடியும். உடல் நலம் சிறப்படையும். சில்லரை வியாபாரிகள் லாபமடைவர். வெளிநாட்டில் வசிப்பவர்கள் தங்களுக்கு உதவுவர். பயணத்தின் போது எச்சரிக்கை தேவை.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மீனம்

பிள்ளைகளின் ஆசையினை பூர்த்தி செய்வீர்கள். உத்யோஸதர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். வெளியூர் அல்லது வெளிநாடு சுற்றுப்பயணம் நேரலாம். முன்கோபத்தினை தவிர்ப்பது நல்லது. கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: கிரே

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com