இன்றைய ராசிபலன் (17.03.2026): எதிர்பாராத சந்திப்பு நிகழும்..!

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
இன்றைய ராசிபலன் (17.03.2026): எதிர்பாராத சந்திப்பு நிகழும்..!
Published on

இன்றைய பஞ்சாங்கம்:-

கிழமை: செவ்வாய்கிழமை

தமிழ் வருடம்: விசுவாவசு

தமிழ் மாதம்: பங்குனி

நாள்: 3

ஆங்கில தேதி: 17

மாதம்: மார்ச்

வருடம்: 2026

நட்சத்திரம்: இன்று காலை 05-55 வரை அவிட்டம் பின்பு சதயம்

திதி: இன்று காலை 08-57 வரை திரயோதசி பின்பு சதுர்த்தசி

யோகம்: மரண யோகம்

நல்ல நேரம்: காலை 07-30 to 08-30

நல்ல நேரம்: மாலை 4-30 to 5-30

ராகு காலம்: பிற்பகல் 3-00 to 4-30

எமகண்டம்: காலை 9-00 to 10-30

குளிகை: காலை 12-00 to 1-30

கௌரி நல்ல நேரம்: காலை 10-30 to 11-30

கௌரி நல்ல நேரம்: மாலை 7-30 to 8-30

சூலம்: வடக்கு

சந்திராஷ்டமம்: ஆயில்யம்

இன்றைய ராசிபலன்:-

மேஷம்

திடீர் பயணம் ஏற்படும். குடும்பத் தலைவிகளுக்கு மனதில் இருந்த கவலை தீரும். பண பரிவர்த்தனை செய்யும் போது கவனம் மிக அவசியம். தம்பதிகளிடையே தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். வியாபாரம் லாபகரமாக செல்லும். வெளிநாட்டுத் தொடர்பால் நன்மைகள் கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

ரிஷபம்

வெளியூர் செல்வதில் திட்டங்கள் மாறும். பிள்ளைகளின் செயல்களில் கவனம் தேவை. தம்பதிகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும். பெண்கள் சிக்கன நடவடிக்கையை மேற்கொள்வது அவசியம். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர். பணவரவு நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

மிதுனம்

பழைய வீட்டை சீர் செய்வீர்கள். வியாபாரிகள் முதலீட்டைப் பெருக்குவர். பூர்வீக சொத்தில் தங்கள் பங்கு கிடைக்கும். வேற்றுமதத்தவர் உதவுவார். செலவு கூடும். சிக்கனம் தேவை. தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். விட்டுக்கொடுப்பது நல்லது. எதிர்பாராத சந்திப்பு நிகழும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

கடகம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

சிம்மம்

நண்பர்களின் திடீர் சந்திப்பு மகிழ்ச்சியைத் தரும். பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். குறுகிய தூர பயணங்கள் ஆதாயத்தைக் கொடுக்கும். கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். உத்யோகஸ்தர்கள் அதிகாரிகளிடம் பாராட்டைப் பெறுவர். உடல் நலம் பளிச்சிடும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கன்னி

தம்பதிகளின் அன்யோன்யம் பெருகும். நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். உத்யோகஸ்தர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். பெண்களுக்கு இடுப்பு கை, கால் வலி நீங்கும். மாணவர்கள் பகுதி படிப்பில் சேருவர். வியாபாரம் செழிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை

துலாம்

உத்யோகஸ்தர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். உணவு வியாபாரம் நன்கு நடைபெறும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். கடன் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். தம்பதிகள் சமரசமாக செல்வர். வரவுக்கேற்ப செலவு செய்வர்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

விருச்சிகம்

அலுவலகத்தில் தங்களின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வி.ஐ.பிகளுக்கு நெருக்கமாவீர்கள். பணவரவு அதிகரிக்கும். தம்பதிகள் இணைந்து செயல்படுவர். நீண்ட நாட்களாக தாங்கள் நினைத்த காரியத்தின் முயற்சியினை இன்று துவங்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வான்நீலம்

தனுசு

உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தேக ஆரோக்கியம் மேம்படும். உறவினர்கள் வருகை உண்டு. எதிர்பார்த்த புதிய வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு நினைத்த பதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மகரம்

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகும். வாகனத்தில் கவனம் தேவை. வெளிநாட்டவர் மற்றும் வேற்றுமொழிக்காரர்களால் ஆதாயம் உண்டு. அரசியல்வாதிகள் சுதந்திரமாகச் செயல்படுவர். பெண்களுக்கு மதிப்பு கூடும். தம்பதிகளிடையே அன்பு பலப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

கும்பம்

கணவன் மனைவி உறவில் அன்யோன்யம் அதிகரிக்கும். கலைஞர்கள் சுபிட்சம் காண்பர். வழக்குகளை இழுத்தடிக்கும். அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும். பெண் உத்யோகஸ்தர்களை சுயமரியாதையுடன் நடத்தப்படுவர். மாமியார் மருமகள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மீனம்

உத்யோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் அனுசரிப்பது நல்லது. ஆவணங்களை பாதுகாப்பீர்கள். வியாபாரத்தில் புதிய முதலிடுகளை போடுவீர்கள். பெண்கள் சுயதொழிலில் முன்னேற்றம் காண்பர். விருந்து விழா என்று கலந்து கொள்வீர்கள். பெண்கள் கைத்தொழில் கற்க ஆரம்பிப்பர். உடல்நிலையில் சிறு பாதிப்பு வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com