இன்றைய ராசிபலன் - 17.07.2025

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
இன்றைய ராசிபலன் - 17.07.2025
Published on

விசுவாவசு வருடம் ஆடி மாதம் 1-ம் தேதி வியாழக்கிழமை

நட்சத்திரம்: இன்று அதிகாலை 4.48 வரை உத்திரிட்டாதி பின்பு ரேவதி

திதி: இன்று மாலை 6.33 வரை சப்தமி பின்பு அஷ்டமி

யோகம்: சித்த, அமிர்த யோகம்

நல்ல நேரம்: காலை 10.45 - 11.45

ராகு காலம்: பிற்பகல் 1.30 - 3.00

எமகண்டம்: காலை 6.00 - 7.30

குளிகை: காலை 9.00 - 10.30

கௌரி நல்ல நேரம்: காலை 12.15 - 1.15, மாலை 6.30 - 7.30

சூலம்: தெற்கு

சந்திராஷ்டமம்: உத்திரம்

குடும்பத்தில் அமைதி நிலவும். நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். பெரியவர்களின் ஆசி கிட்டும். அரசியலில் நாட்டம் கூடும். அலுவலக விஷயமாக வெளியூர் பயணம் உண்டு. நண்பர்கள் கைகொடுப்பர். உடல்நலம் தேறும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மதிப்பர்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வெளிநாட்டு வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மறுமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல துணை அமையும். முகம் வசீகரம் அதிகமாகும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

பிடித்த நபரை சந்திப்பீர்கள். மருத்துவர்கள் செழிப்பர். தொலைபேசி மூலம் நட்பு பலப்படும். சகோதர வகையில் உதவிகள் உண்டு. குடும்பத்தில் விவாதம் வந்து போகும். சுற்றுலா செல்வதற்கு திட்டமிடவீர்கள். குலதெய்வ பிரார்த்தனையை தள்ளி போடுவீர்கள். புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் கொள்வர்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

ஆன்லைன் வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். அக்கம் பக்கம் வீட்டார் உதவுவர். குடும்பத்தில் விவாதம் வந்து போகும். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. ஆரோக்கிய நிலை மேம்படும். இளைஞர்கள் காதலில் எச்சச்ரிக்கையாக இருப்பது நலம். குடும்ப கடமைகளை முடிப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பொன்நிறம்

தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மதிப்பர். அரசியலில் நாட்டம் கூடும். குடும்பத்தில் அமைதி நிலவும். இன்று இழுபறியாக இருந்த வேலைகள் முடிந்துவிடும். உறவினர்களால் நன்மை உண்டு. வழக்கறிஞர்கள் சுபிட்சம் அடைவர். நண்பர்கள் கை கொடுப்பர். முகம் புதுப்பொலிவு கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

பிள்ளைகள் நன்கு படிப்பர். கொடுக்கல் வாங்கலில் கறாராக இருங்கள். தம்பதியரிடையே வாக்குவாதம் வந்து போகும். செலவுகள் அதிகரிக்கும். சிக்கனம் அவசியம். காய்கறி வியாபாரிகள் பயனடைவர். உணவு விஷயத்தில் கவனம் தேவை. அமைதியை காத்தால் தப்பிக்க முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

உத்தியோகத்தில் அமைதியான போக்கே உண்டாகும். நண்பர்கள் யாரிடமும் பகைத்துக் கொள்ள வேண்டாம். இதுநாள் வரை பேசாதவர்கள் மீண்டும் பேசுவர். பிள்ளைகள் தங்கள் பேச்சினை கேட்பர். உடல் ஆரோக்கியம் சீர்படும். பண வரவு தாமதப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மகளின் திருமணத்தைப் பற்றி முடிவெடுப்பர். யாருக்கும் ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். எதிர்பாராத சந்திப்பு நிகழும். பண விஷயத்தில் சிக்கனம் தேவை. பெண்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். மருத்துவர்களுக்கு பதவி உயர்வுண்டு. காதலர்கள் பொறுப்புணர்வர். யோகாவில் மனம் லயிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

பெற்றோர்களின் உடல்நலம் தேறும். மருத்துவ செலவு குறையும். பார்ட்னரிடம் பொறுமை அவசியம். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். நண்பர்களிடையே கலகலப்பான சூழல் உருவாகும். வேலைகள் தள்ளிப் போகும். காதல் கண் சிமிட்டும். உறவினர்கள் வருகை உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை

சுப காரியங்கள் தாமதமாகும். யாருக்கும உறுதிமொழி தர வேண்டாம். கடன் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் சலுகை கிடைக்கும். இணையதளம் மூலம் வேலையை முடிப்பீர்கள். பிரிந்த தம்பதிகள் இணைவர். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கடல்நீலம்

எதிரிகள் தங்கள் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்பர். பிரிந்திருந்த தம்பதிகள் இணைவர். யாருக்கும் உறுதிமொழி தர வேண்டாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உறவினர்கள் நலம் விசாரிப்பர். சேமிப்பு உயரும். உடல் நலத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com