தேக ஆரோக்கியம் மேம்படும்... இன்றைய ராசிபலன் - 19.01.2026

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
இன்றைய பஞ்சாங்கம்:
விசுவாவசு வருடம் தை மாதம் 5-ம் தேதி திங்கட்கிழமை
நட்சத்திரம்: இன்று பிற்பகல் 1.04 வரை உத்திராடம் பின்பு திருவோணம்
திதி: இன்று அதிகாலை 2.31 வரை அமாவாசை பின்பு பிரதமை
யோகம்: மரண, அமிர்த யோகம்
நல்ல நேரம்: காலை 6.30 - 7.30, மாலை 4.30 - 5.30
ராகு காலம்: மாலை 7.30 - 9.00
எமகண்டம்: காலை 10.30 - 12.00
குளிகை: காலை 1.30 - 3.00
கௌரி நல்ல நேரம்: காலை 9.30 - 10.30, மாலை 7.30 - 8.30
சூலம்: கிழக்கு
சந்திராஷ்டமம்: திருவாதிரை, புனர்பூசம்
இன்றைய ராசிபலன்:
மேஷம்
பெரியவர்களின் சொல்லுக்கு மதிப்பு கூடும். உறவினர்கள் வருகை உண்டு. மார்கெட்டிங் பிரிவினர் புதுப் புது ஆர்டர்கள், ஏஜென்சி எடுப்பீர்கள். மாணவர்கள் ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். அரசியல்வாதிகளுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும். தேகம் பளிச்சிடும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
ரிஷபம்
விருந்து, விழா என கலந்து கொள்வீர்கள். ஒரு சிலர் சுற்றுலா சென்று வருவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பர். வேலை தேடுபவர்களுக்கு போட்டித் தேர்வுகள் மூலம் நினைத்த உத்யோகம் கிடைக்கும். பொறுமையை கையாள்வது நன்மையைத் தரும். உடல் உற்சாகத்துடன் காணப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
மிதுனம்
தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை அதாவது தங்கள் தொழில் சார்ந்தவர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் சாதாரணமாக பேசும் வார்த்தைகள் கூட பிரச்சினையைத் தந்து நிரந்தரமாக பேசாமல் போக வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
கடகம்
பிள்ளைகளின் கனவு நனவாகும். வியாபாரத்தினை விரிவுபடுத்துவீர்கள். காதல் இனிக்கும். விவசாயிகளுக்கு கேட்ட கடன் தொகை கிடைக்கும். அயல்நாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு விசா கிடைக்கும். திருமண பேச்சு வார்த்தை சுபமாக முடியும். பெண்கள் அக்கம் பக்கத்தினரிடம் பேசும்போது நிதானம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
சிம்மம்
பணவரவுகளில் பஞ்சமில்லை. அரசு காரியங்களில் நன்மை பிறக்கும். கலைஞர்களுக்கு வரவேண்டிய மீதித் தொகை வந்து சேரும். வாகனம் ஓட்டும்போது வாகனத்தின் முக்கிய ஆவணங்களை வைத்துக் கொள்வது நல்லது. காதலர்கள் தங்கள் விஷயத்தில் நன்கு சிந்திப்பது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
கன்னி
குடும்பத்தில் செலவு அதிகரிக்கும். சிக்கனம் அவசியம். பிள்ளைகள் முயற்சி வெற்றி தரும். தம்பதிகள் வெளியூர் செல்வர். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையை கையாண்டு அதிக லாபத்தினை ஈட்டுவீர்கள். மகான்கள், ஆன்மிகவாதிகளை சந்தித்து ஆசி பெறுவீர்கள். உடல் நலம் சிறக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
துலாம்
உத்யோகஸ்தர்களுக்கு வேலையில் சுறுசுறுப்பு கூடும். வியாபாரத்தில் உள்ள நஷ்டங்களை ஈடுசெய்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் போக்கே சென்று அவர்களை உங்கள் வழியில் வரவழையுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
விருச்சிகம்
ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். சிலர் யாத்திரைகளை மேற்கொள்வர். அரசியல்வாதிகளுக்கு புகழ், கௌரவம் உயரும். பங்கு சந்தையில் ஈடுபட்டவர்கள் நிலவரத்தை அறிந்து நிதானமுடன் செயல்படவும். காதலர்களுக்கு பெரியவர்களின் சம்மதம் கிடைக்கும். உடல் நலம் சிறக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
தனுசு
குடும்பத்துடன் மால் மற்றும் திரைப்படத்திற்கு செல்வீர்கள். வியாபாரிகள் சுபிட்சம் பெறுவர். வெளியூர் பயணங்கள் லாபம் தரும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். குல தெய்வ பிரார்த்தனையை செய்து முடிப்பீர்கள். தேக ஆரோக்கியம் மேம்படும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
மகரம்
அக்கம் பக்கத்தினர் ஆதரவு கிட்டும். உத்யோகஸ்தர்கள் இன்று ஓய்வெடுப்பர். நினைத்திராத சில நல்ல செய்திகள் மனதிற்கு தெம்பளிக்கும். வேற்று மதத்தவர்கள் உதவுவார்கள். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். தொழிலை விரிவுபடுத்துவதற்கான வங்கிக் கடன் உதவியும் கிட்டும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
கும்பம்
மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு அலைச்சல்கள் கூடும். பெண்களின் உடல்நலப் பிரச்சனைகள் தீரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். விற்பனையை அதிகரிக்க வியாபாரிகளுக்கு புதிய யோசனைகள் உருவாகும். வீட்டில் நிம்மதி கிடைக்கும். பெற்றோரின் அறிவுரையை ஏற்று நடப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: பொன்வண்ணம்
மீனம்
பெண்கள் அநாவசியச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை இருக்கும். திட்டமிட்டு முடித்துவிடுவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை






