இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?... இன்றைய ராசிபலன் - 25.03.2026

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?... இன்றைய ராசிபலன் - 25.03.2026
Published on

மார்ச் 25

கிழமை: புதன்கிழமை

தமிழ் வருடம்: விசுவாவசு

தமிழ் மாதம்: பங்குனி

நாள்: 11

ஆங்கில தேதி: 25

மாதம்: மார்ச்

வருடம்: 2026

நட்சத்திரம்: இன்று இரவு 08.34 வரை மிருகசீரிஷம் பின்பு திருவாதிரை

திதி: இன்று மாலை 05.10 வரை சப்தமி பின்பு அஷ்டமி

யோகம்: சித்த யோகம்

நல்ல நேரம் காலை: 09.30 -10.30

நல்ல நேரம் மாலை: 4.30 - 5.30

ராகு காலம் மாலை: 12.00 - 1.30

எமகண்டம் காலை: 7.30 - 9.00

குளிகை காலை: 10.30 - 12.00

கௌரி நல்ல நேரம் காலை: 10.30 - 11.30

கௌரி நல்ல நேரம் மாலை: 6.30 - 7.30

சூலம்: வடக்கு

சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்

மேஷம்

எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். மறக்க முடியாத சம்பவம் நடக்கும். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வெளிநாட்டு பயணத்திற்கு ஆயத்தமாவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

ரிஷபம்

வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. கணவன்- மனைவிக்குள் பிணக்குகள் நீங்கும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வாகன வசதிப் பெருகும். உத்தியோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். உடல் நலம் பளிச்சிடும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

மிதுனம்

வர வேண்டிய பணம் கைக்கு வரும்.குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்த ஒற்றைத் தலைவலி நீங்கும். சகோதரர் வழியில் இருந்து வந்த கசப்பு நீங்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தேக பலம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: பொன்நிறம்

கடகம்

பிரபலங்களின் திடீர் சந்திப்பு உற்சாகத்தைத் தரும்.பிள்ளைகள் தங்கள் தவறை உணர்வர். அதிக சம்பளத்திற்காக புது வேலைக்கு முயற்சி செய்வீர்கள். குடும்பத்தில் விவாதம் வந்துப் போகும். மாமன் வழி உறவினர்கள் கை கொடுப்பர். எதிர்பாராத செலவுகள் வந்துபோகும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர்நீலம்

சிம்மம்

பிள்ளைகளின் திருமணப் பேச்சு வார்த்தையை துவங்குவீர்கள். பிடித்தவர்களின் எதிர்பாராத சந்திப்பு நிகழும். சகோதர வகையில் உதவிகள் உண்டு. மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வாடிக்கையாளர்களை அதிகரிக்க சலுகைகளை அறிவிப்பீர்கள். பங்குச் சந்தையில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

கன்னி

அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் அனுசரிப்பது நல்லது. குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். தன் கீழ் பணிபுரிபவர்களிடம் கோபத்தை காட்டாதீர்கள். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

துலாம்

உத்தியோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். தம்பதிகளிடையே அன்பு கூடும். குடும்பத்தாருக்குள் இருந்துவந்த பிரச்சினைகள் தவிடுபொடியாகும். வழக்கு சாதகமாக முடியும். திருமணமாகாதவர்களுக்கு அதற்குண்டான முயற்சியை மேற்கொண்டால் தாங்கள் விரும்பிய துணையை கைபிடிக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை

விருச்சிகம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

தனுசு

கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் பதவி உயர்வுண்டு. காதலர்கள் பொறுப்புணர்வர். நல்ல வரண் கிட்டும். காதலர்கள் சிந்திப்பது நல்லது. குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். தேகம் பளிச்சிடும், நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

மகரம்

வியாபாரத்தில் விற்பனை கூடும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. கடன் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் பதவி உயர்வுண்டு. காதலர்கள் பொறுப்புணர்வர். நல்ல வரண் கிட்டும். யாரையும் நம்பி உறுதிமொழி தர வேண்டாம். மாணவர்கள் கல்விச் சுற்றுலாவிற்கு ஆயத்தம் ஆவர்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கும்பம்

பந்தங்கள் வீடு தேடி வந்து அன்பு பாராட்டுவர். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் தலையீடு உண்டு. குடும்பத்தில் குதூகலம் இருக்கும். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். மகளின் திருமணத்தைப் பற்றி முடிவெடுப்பர். உடல் நலம் பளிச்சிடும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மீனம்

எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். நண்பர்கள் கைக் கொடுப்பர். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். தம்பதியரிடையே வாக்குவாதம் வந்து போகும். வெளியாட்களிடம் முக்கிய விஷயங்களை பகிர வேண்டாம். பங்கு சந்தையால் அனுகூலம் உண்டு. உடல் நலம் சீராகும். பிள்ளை நன்கு படிப்பர்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com