வெளியூர் பயணம் வெற்றி தரும் நாள்… இன்றைய ராசிபலன் - 30.03.2026

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
வெளியூர் பயணம் வெற்றி தரும் நாள்… இன்றைய ராசிபலன் - 30.03.2026
Published on

மார்ச் 30

கிழமை: திங்கட்கிழமை

தமிழ் வருடம்: விசுவாவசு

தமிழ் மாதம்: பங்குனி

நாள்: 16

ஆங்கில தேதி: 30

மாதம்: மார்ச்

வருடம்: 2026

நட்சத்திரம்: இன்று பிற்பகல் 03.47 வரை மகம் பின்பு பூரம்

திதி: இன்று காலை 08.26 வரை துவாதசி பின்பு திரயோதசி

யோகம்: மரண, சித்த யோகம்

நல்ல நேரம் காலை: 6.30 - 7.30

நல்ல நேரம் மாலை: 4.30 - 5.30

ராகு காலம் மாலை: 7.30 - 9.00

எமகண்டம் காலை: 10.30 - 12.00

குளிகை காலை: 1.30 - 3.00

கௌரி நல்ல நேரம் காலை: 09.30 - 10.30

கௌரி நல்ல நேரம் மாலை: 7.30 - 8.30

சூலம்: கிழக்கு

சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்

மேஷம்

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு தாங்கள் நினைத்ததற்கும் மேலாகவே சம்பள உயர்வு கிட்டும். நண்பரின் உதவி கிடைக்கும். வெளிநபருடன் வாதம் வேண்டாம். பண வரவு சீராக இருக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கதவை தட்டும். வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் இயல்புக்கு அதிகமாக கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கரும் பச்சை

ரிஷபம்

அலுவலகத்தில் நிம்மதி நிலவும். குடும்பத் தலைவிகள் ஆடை ஆபரணச் சேர்க்கை செய்வர். ஒரு சிலர் புதிய நகை திட்டத்தில் பணத்தை சேகரிக்க துவங்குவர். திருமணப் பேச்சு வார்த்தைகள் இனிதே முடியும். வெளியூர் பயணத்தால் அசதி ஏற்படும். இந்த பயணங்களால் நன்மைகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்

மிதுனம்

கூடுமானவரை சிக்கனமாக இருக்க வேண்டும். தம்பதிகளிடையே பிணக்கம் நீங்கும். ஏஜென்ட்களுக்கு லாபம் கிடைக்கும். தாங்கள் கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். பிள்ளைகளுக்கு அளவுக்கதிகமாக செல்லம் கொடுக்காமல் இயல்பு வாழ்க்கையினை புரிய வைக்கவும். உடல் நலம் பலப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

கடகம்

பிள்ளைகளுக்கு படிப்பதற்குண்டான வசதியினை செய்து கொடுப்பது நல்லது. பெண்களுக்கு நல்ல வரன் கிட்டும். ஆன்மீக யாத்திரை செல்வீர்கள். வியாபாரத்தில் உள்ளவர்கள் நிரந்தர கம்பெனிகளுக்கு மட்டும் கடனுக்கு பொருட்களை கொடுக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வான் நீலம்

Also Read
நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.. வார ராசிபலன் 29-03-2026 முதல் 04-04-2026 வரை
வெளியூர் பயணம் வெற்றி தரும் நாள்… இன்றைய ராசிபலன் - 30.03.2026

சிம்மம்

உறவினர்கள் வருகை வீட்டில் மகிழ்ச்சியை நிரப்பும். பகுதி நேர வேலை கிடைக்கும். உத்யோகத்தில் மதிப்பு கூடும். விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் மிகும். தம்பதிகளிடையே அன்பு கூடும். திருமண முயற்சி பலிதமாகும். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

கன்னி

உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை புரிந்துக் கொள்வார்கள். தம்பதியரிடையே அன்பு மேலோங்கும். திடீர் பயணங்கள் ஏற்படும்.அந்த பயணங்களால் செலவுகள் கூடும். காதலில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. மாணவர்கள் நன்கு படித்து முன்னேறுவர்.

நல்லது. ஷ்ட நிறம்: சாம்பல்

துலாம்

ஷேர் மூலம் பணம் வரும். அரசியல்வாதிகளுக்கு தங்கள் கட்சித் தலைவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள். தம்பதிகளின் ஒற்றுமை ஓங்கும். சிலருக்கு கௌரவப் பதவிகள் தேடி வரும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

விருச்சிகம்

உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு கூடும். தொழிலில் ஏற்றம் உண்டு. கலைஞர்களுக்கு பாராட்டுகள் குவியும். கமிஷன் துறையினருக்கு லாபம் கிடைக்கும். தம்பதிகளிடம் சிறு சிறு கருத்துவேறுபாடுகள் தோன்றும். விட்டுக் கொடுத்து செல்வது

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

தனுசு

பணத்திற்கு குறைவு ஏற்படாது. பெண்களுக்கு நல்ல துணை அமையும். அக்கம் பக்கம் வீட்டாரிடம் நட்புறவு சுமூகமாக நடைபெறும். ஆசிரியர்களுக்கு வீட்டில் தனி வகுப்பு எடுப்பவர்களுக்கு புதிய மாணவர்கள் சேர்க்கை உண்டாகும். உடலில் பொலிவும் உற்சாகமும் மிகும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மகரம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாளாக அமைகிறது. ஆதலால், யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். பொதுவாக இன்று அமைதி காப்பது நல்லது. இறைவனை மட்டும் வழிபடுவதால் தேவையற்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கும்பம்

வழக்கறிஞர்களுக்கு வழக்குகளில் ஒரு திருப்பம் உண்டாகும். மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். அவர்களுடன் நினைவலைகளை பகிர்ந்து கொள்வீர்கள். தேகம் பளிச்சிடும். சுறுசுறுப்பு கூடும்.

அதிர்ஷ்ட நிறம் பச்சை

மீனம்

உத்யோகஸ்தர்களுக்கு வேலையில் ஆர்வம் கூடும். பெண்களுக்கு வீட்டு செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணம் வெற்றி தரும். மருத்துவர்கள் சாதனை படைப்பர். உடல் நலத்தில் முதுகு வலி வந்து போகும். நாட்டு மருந்து கடைகளில் முடக்கற்றான் எண்ணெய் வாங்கி உபயோகப்படுத்துங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com