ஏடாகூட கேள்வி கேட்ட ரசிகர்.. கூலாக பதில் சொன்ன யாஷிகா

நடிகை யாஷிகா ஆனந்த் சமூக வலைதளத்தில் தன்னிடம் ஆபாசமாக கேள்வி கேட்ட ரசிகருக்கு கூலாக பதிலளித்துள்ளார்.
ஏடாகூட கேள்வி கேட்ட ரசிகர்.. கூலாக பதில் சொன்ன யாஷிகா
Published on

2016-ம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர், யாஷிகா ஆனந்த். சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். அடுத்தடுத்த படங்களிலும் கவர்ச்சியாக நடித்து பேசப்பட்டார். படவாய்ப்புகளும் குவிந்து வந்தன. இந்தநிலையில் எதிர்பாராத கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். பல மாதங்கள் ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் பழைய நிலைக்கு மீண்டு வந்து கொண்டிருக்கிறார். ஒரு சில படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

சமூக வலைதளங்களிலும் யாஷிகா ஆனந்த் சுறுசுறுப்பாக இருக்கிறார். ரசிகர்களுடன் தொடர்ந்து உரையாடி வருகிறார். இந்தநிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு யாஷிகா பதில் அளித்தார். அப்போது ஒரு ரசிகர், உங்களை முதன்முதலில் நிர்வாணமாக பார்த்தது யார்?, என ஏடாகூடமான கேள்வி கேட்டார். இதற்கு சற்றும் தாமதிக்காமல் டாக்டர் என்று நினைக்கிறேன் என அவர் பதிலளித்தார்.

எடக்குமடக்கான கேள்வியையும் சமாளித்து பொறுமையாக பதிலளித்த யாஷிகாவின் சமயோசிதத்தை ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். ஏற்கனவே, நீங்கள் கன்னித்தன்மையுடன் இருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு இல்லை, நான் யாஷிகா என்று அவர் பதிலளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com