சித்ரா பவுர்ணமியையொட்டி ஒரே நேரத்தில் சூரியன் மறைவு, சந்திரன் உதயமாகும் அபூர்வ காட்சி: கன்னியாகுமரியில் நாளை காணலாம்

சித்ரா பவுர்ணமியான நாளை ஒரே நேரத்தில் சூரியன் மறைவு மற்றும் சந்திரன் உதயமாகும் அபூர்வ காட்சியை கன்னியாகுமரியில் காணலாம்.
சித்ரா பவுர்ணமியையொட்டி ஒரே நேரத்தில் சூரியன் மறைவு, சந்திரன் உதயமாகும் அபூர்வ காட்சி: கன்னியாகுமரியில் நாளை காணலாம்
Published on

கன்னியாகுமரி,

ஆண்டுதோறும் சித்திரை மாதம் பவுர்ணமி அன்று சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்படுகிறது. அதே போல இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. இதையொட்டி நாளை மாலை 6 மணிக்கு கன்னியாகுமரி கடலில் சூரியன் மறையும் போது சந்திரன் உதயமாகும். இது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

இந்த அபூர்வ காட்சியை உலகத்திலேயே கன்னியாகுமரியிலும் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள அடர்ந்த காடுகள் நிறைந்த ஒரு மலையிலும் மட்டும் தான் காண முடியும். இந்த அபூர்வ காட்சியை காண ஆப்பிரிக்கா கண்டத்தில் அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதிக்கு மக்கள் யாரும் செல்ல முடியாது.

இதனால் இந்த அபூர்வ காட்சியை காண கன்னியாகுமரியில் நாளை மாலையில் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கூடுவார்கள். மாலையில் சூரியன் மேற்கு பக்கம் உள்ள அரபிக்கடல் பகுதியில் வர்ணஜாலத்துடன் பந்து போன்ற மஞ்சள் நிறத்துடன் மறையும். அந்த சமயத்தில் கிழக்கு பக்கம் உள்ள வங்கக்கடலில் கடலும் வானமும் சந்திக்கும் இடத்துக்கு மேல் பகுதியில் சந்திரன் நெருப்பு பந்து போல எழும்பும்.

அப்போது கடலின் மேல்பகுதியில் உள்ள வானம் வெளிச்சத்தால் பளிச்பளிச் என்று மின்னும். இந்த அபூர்வ காட்சியை கன்னியாகுமரியில் முக்கடலும் சங்க மிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பார்ப்பார்கள். இது தவிர கன்னியாகுமரியை அடுத்த பழத்தோட்டம் பக்கம் உள்ள முருகன்குன்றத்தில் இருந்தும் அபூர்வ காட்சியை கண்டு ரசிக்கலாம். சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஏராளமான சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com