டேங்கர் லாரி டிரைவரை தாக்கியவர் மீது வழக்கு

டேங்கர் லாரி டிரைவரை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
டேங்கர் லாரி டிரைவரை தாக்கியவர் மீது வழக்கு
Published on

நொய்யல்,

புன்னம் சத்திரம் அருகே புன்னம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 56). இவர் டேங்கர் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருடைய உறவினர் சாந்தி என்பவரின் கணவர் கவுதமும், அதே பகுதியை சேர்ந்த மூர்த்தியும் மது போதையில் இருந்துள்ளனர். இதனைகண்ட சாந்தி தனது கணவர் மற்றும் மூர்த்தியை திட்டியுள்ளார். இதற்கு சுப்பிரமணி மகன் ராகுல்ராஜ் தான் காரணம் என நினைத்துக்கொண்டு மூர்த்தி ராகுல்ராஜ் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த சுப்பிரமணியிடம் மூர்த்தி தகராறு செய்து உள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த மூர்த்தி சுப்பிரமணியனை அங்கு கிடந்த குச்சியால் சரமாரியாக தாக்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வரவே பீதியடைந்த மூர்த்தி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து, படுகாயம் அடைந்த சுப்பிரமணியை அப்பகுதி மக்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மூர்த்தியை தேடி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com