

தோகைமலை,
தோகைமலை அருகே உள்ள கம்பிளியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 37), கட்டிட தொழிலாளி. அதே ஊரை சேர்ந்த செல்வம் என்பவரின் மகன்மாணிக்கம் (28) கட்டிட தொழிலாளி. இவருக்கும், சங்கருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் சங்கர் ஒரு டீக்கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மாணிக்கம், தனது 17 வயது தம்பியுடன் சேர்ந்து சங்கரிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளார். பின்னர் அருகில் கிடந்த குச்சியால் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், காயம் அடைந்த சங்கர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து தோகைமலை போலீசில் சங்கர் புகார் அளித்தார். இதன்பேரில் மாணிக்கம், 17 வயது சிறுவன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.