வாலிபரை தாக்கி கொலை மிரட்டல்

முன்விரோதம் காரணமாக வாலிபரை தாக்கிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வாலிபரை தாக்கி கொலை மிரட்டல்
Published on

வில்லியனூர்

வில்லியனூர் அருகே கணுவாப்பேட்டையை சேர்ந்தவர் ஜீவா. இவரது மகன் பெருமாள் (வயது 24). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் (22), ரோகித் (22) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்று பெருமாள் வில்லியனூர் சுந்தரமூர்த்தி விநாயகபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அங்கிருந்த அருண்குமார், ரோகித் மற்றும் பிரகாஷ் ஆகியோர் முன்விரோதம் காரணமாக தகராறு செய்து, மோட்டார் சைக்கிளால் மோதினர். மேலும் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இதில் காயமடைந்த பெருமாள் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த தாக்குதல் குறித்து போலீசில் அளித்த புகாரின்பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமார் உள்பட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com