

புதுச்சேரி
உருளையன்பேட்டை ராஜா நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்த நவமணி மகன் தினகரன் (வயது 29). இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த குமார் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பாக குமார் மனைவி மல்லிகா கொடுத்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதன் பிறகும் தினகரனுக்கும், குமார் குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று வீட்டிற்கு சென்று கொண்டிருந்த தினகரனை வழிமறித்து குமாரும், அவரது மனைவி மல்லிகாவும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.