வாலிபரை தாக்கி கொலை மிரட்டல்

அரியாங்குப்பம் அருகே வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வாலிபரை தாக்கி கொலை மிரட்டல்
Published on

அரியாங்குப்பம்

தவளக்குப்பம் அடுத்த அபிஷேகப்பாக்கம் மடுகரை மெயின்ரோடு அம்பேத்கர் வீதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 20). இவருக்கும், எதிர்வீட்டை சேர்ந்த தம்பா என்ற தமிழரசன் (37), தேவசங்கீதன் (22), ராம் (19) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து இரும்பு கம்பி மற்றும் இரும்பு கரண்டியால் காத்திகேயனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com